மாணவர் நடத்தை

இன்று சென்னையில் ஒரு ஆசிரியை மாணவனால் வகுப்பறையில் கத்தியால் குத்தி கொலை செய்தது பற்றி அறிந்து இருப்பீர்கள்.
இப்போது உள்ள மாணவர்களின் நடத்தை பற்றி ஒரு கல்லூரி ஆசிரியையாக நான் பார்த்த ,கேட்ட அனுபவங்களை இங்கே பதிவிட விரும்புகிரேன்.
நீங்களும் உங்கள் கருத்துகளை சொல்ல அழைக்கின்றேன் .

ஆசிரியர் பணி என்பது பலர் எண்ணிக்கொண்டு இருப்பது போல அத்தனை எளிது அல்ல. இப்போது உள்ள மாணவர்களை ஹான்டில் செய்வது மிக கடினமான காரியம். பள்ளி கல்வி முடித்து பொறியியலில் சேர்த்தவுடன் ,பணம் கட்டுவது மட்டுமே தனது கடமையாக நினைக்கும் பெற்றோர்களை பார்க்கிறேன்.
பள்ளியில் அவர்கள் கடுமையாக முயற்சி செய்து படித்து விட்டு , கல்லூரியில் சேர்ந்தவுடன் அவர்கள் பொறியாளர் ஆகிவிட்டோம் என்ற நினைப்பில் படிப்பில் கோட்டைவிடுகின்றனர்.
படிப்பில் மட்டும் அல்ல நடத்தையிலும் நிறைய மாற்றங்கள்....முதலாவது ஆசிரியர்களுக்கு மரியாதையை கொடுக்கவும் மாட்டார்கள்.
* என் காசில் சம்பளம் வாங்கும் ஆசிரியை நீ என்று என் தோழியை ஒரு மாணவன் வகுப்பிலயே சொல்லி இருக்கிறான் . ஏன் நோட்ஸ் எழுதவில்லை என்று கேட்டதற்கு இந்த பதில்.
* ஆசிரியை என்னதான் கவனமாக உடுத்தி இருந்தாலும் போர்டில் எழுதும்போதோ , மும்முரமாக நடத்தி கொண்டு இருக்கும்போதோ ஆடை சிறிது விலகினால் மோசமாக கமென்ட் அடிப்பது
* வெகுநாட்களாக திருமணத்துக்கு காத்து கொண்டிருக்கும் ஒரு ஆசிரியை , ஒரு மாணவி தன் காதலனுடன் சுற்றிக்கொண்டு இருந்ததால் அவளை கூப்பிட்டு
அறிவுரை சொன்னபோது அந்த மாணவி சொன்ன பதில் " உனக்குதான் எவனும் கிடைகலனு என் மேல ஏன் பொறாமை"

* ஒரு மாணவி முதலாம் ஆண்டு படிக்குபோதே ,இரண்டாம் ஆண்டு மாணவனோடு காதல்வயப்பட்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் வேண்டுதலால் இருவரும் கல்லூரியில் படிக்கச் அனுமதி கிடைத்தது. மூன்றாம் ஆண்டிலயே அந்த மாணவனிடம் நிறைய மாற்றங்கள். நெறைய பெண்களுடன் பழக ஆரம்பித்தவுடன் இந்த ஜோடிக்குள் பிரச்னை எழுந்தது. எப்படியோ சரியாகி, இருவரும் படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்த
nar .இருவரின் பெற்றோரும் பேசி ,பத்திரிகை அடித்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஒரே வருடம்.விவாகரத்து பெற்று விட்டனர். அந்த மாணவி பெற்றோருக்கு ஒரே பெண்.
* இதே போல் ஒரு மாணவனும் ,மாணவியும் விடுதியில் தங்கி படித்தபோது ,பழகி அவள் கற்பம் அடைந்து, பெற்றோர்களின் வேண்டுதலால் இருவரும் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்து ,தனியே வீடு எடுத்து தங்கி , குழந்தையுடன் டிகிரி முடித்தனர்.இவ்வளவு நடந்தும் அந்த பெண்ணுக்கு ஒரு வருத்தமும் இல்லை.

அந்த நாளில்லேல்லாம் ஆசிரியர் என்றால் அவர் மேல் ஒரு மரியாதை , பயம் இருந்தது. ஆனா இப்போ அதெல்லாம் ஏதும் இல்ல. அப்போல்லாம் பெற்றோர்களே நல்லா அடிச்சி சொல்லிகுடுங்க, திருத்துங்க சார்னு சொல்லிட்டு போவாங்க. ஆனா இப்போ அடிச்சாலே தண்டனை தான். ஆசிரியர்கள் எல்லாம் பாவம் தான்.

ஆசிரியர் தொழில் ஒரு புனிதமான தொழில். ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும். மாணவர்கள் மதிக்கும் அளவிற்கு அறிவாலேயும், பண்பாலேயும் உயர்ந்து இருக்க வேண்டும். அதிலும் பள்ளிகளில் இருக்கும் ஆஸ்ரியர்களின் ரோல் தான் மிகவும் முக்கியமானது அது தான் ரொம்ப கஸ்ட்டமானதும் கூட.

கல்லூரி மாணவர்கள் எப்படிப்பட்ட ஆசிரயர இருந்தாலும், கிண்டல் பண்ண தான் செய்வார்கள். ஆனால் நல்ல ஆசரியர்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு, அவர்கள் மாணவர்களின் மனதில் வாழ்வதும் உண்டு.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

பெற்றோர்களே
உங்கள் பிள்ளைகளின் திறமையை அறிந்து ,அதன்படி அவர்களை கல்லூரியில் சேர்த்து விடுங்கள்.நம் பிள்ளை டாக்டர் ,இஞ்சினியர் ஆக வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்.
* ஒரு நல்ல மாணவன் ஆங்கிலத்தில் படிக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டான்.
* பெற்றோர்களின் வற்புறுத்தலால் சேர்ந்துவிட்டு ,படிக்க முடியாமால் மூன்றாம் ஆண்டில் கூட படிப்பை கைவிட்ட மாணவனை எனக்கு தெரியும் .
* சில நல்ல பெற்றோர்களுக்கு தறுதலையாக உள்ள பிள்ளைகளால் , ஆசிரியர்கள் முன் கண்ணீரோடு நின்ற பெற்றோர்கள் உண்டு. இன்ஜினியரிங் கல்லூரி என்பதால் மிகுந்த செலவு செய்து இருப்பார்கள்.
* சில மாணவர்கள் வகுப்பிற்கு வருமுன் சிகரெட் பிடித்து விட்டு ,அதை மறைக்க பான்பராக் போட்டு வருவர்.
* சுடிதாரே என்றாலும் அதையும் முறையாக அணியாத பெண்கள் உண்டு.
* கண்டிக்கிற ஆசிரியரை பலருக்கு பிடிக்காது. பாடம் நடத்தாமல் இன்டெர்னல் மார்க் அதிகமாக வழங்கி விடும் ஆசிரியர்களை பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்ல மாட்டார்கள் .
இன்னும் நிறைய இருக்கு . நேரம் கிடைக்கும்போது சொல்றேன்.

கார்த்திகா
தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி

மலர் நீங்கள் சொல்வது வ்ருத்தமா இருக்கு..மானவர்களை எங்கிருந்து எப்படி வழிகாட்டினால் ஒழுங்கா வருவார்கள் என்பதையும் ஆசிரியை என்னும் முறையில் சொல்லுங்க..என்னைபொறுத்தவரை பெற்றோர் பங்கு இதில் முக்கியம் நாமே குழந்தைக முன்னாடி ஆசிரியர்களை குறை சொல்லி கேலி செய்தால் பிள்ளைகள் அதை விட ஒரு படி முன்னே போவாங்க.நம்மை மதிக்காட்டியும் ஆசிரியரை மதிக்க சொல்லி பழக்கணும்..குட்டி குட்டி நீதிநெறி கதைகளை குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும்.தவறு செய்யும்போது அடி உதைன்னு எடுத்தவுடனேயே வன்முறையில் இறங்காம பக்குவமா சொல்லி புரியவைக்கனும்.
மட்டுமல்லாம முக்கியமா பிள்ளைக கெட்டுபோக காரணம் அதிக பாசம் என்ற பெயரில் கெடுத்து வைப்பது தான்..சின்ன வயதில் அவங்க தவறு செய்யும்போதும் வீட்டில் கண்டபடி நடந்துகொள்ளும் போதும் பாசம் கண்ணை மறைச்சுடுது அது அப்படியே தொடர்கதையாகி பெரியவங்களானதும் நம்மை மதிக்க மாட்டாங்க அப்ப மட்டும் கண்ணீரோடு யோசிக்க தொடங்குவோம்...அன்பையும் அளவா வெளிப்படுத்த தெரியனும் என்று நினைக்கிறேன்.
நாமளே பார்க்கலாமே சில பெற்றோர் ரொம்ப மிலிட்டரி போல் நடந்துக்குவாங்க அந்த குழந்தைகளை படாபாடு படுத்துவாங்க ஆனால் பெரியவங்களாகி நல்ல நிலைக்கு வந்ததும் அவங்க சொல்வாங்க என் அப்பாவின் கண்டிப்பு தான் இன்றைய எங்க வளர்ச்சியின் காரணம் நு சொல்வாங்க.
அப்படி இல்லாட்ட்யும் ஓரளவு கண்டிப்போட இருதுட்டா நல்லதோன்னு எனக்கு படுது.இருந்தாலும் நானும் எல் கே ஜீ தான் பெரியவங்க சொன்னால் நல்லா இருக்கும்..நாளை என் குழந்தைகளும் மாணவர்கள் தானே எனக்கும் பயமா இருக்கு

ஆண்.பெண் தனியாக படிக்கும் போது இந்த பிரச்சனை குறையும்.ஆண் வகுப்புக்கு ஆண் ஆசிரியரயும்,பெண்களுக்கு பெண் ஆசிரியரயும் நியமிக்க வேண்டும்..இதற்கு சினிமாஉம் முக்க்ய காரணம்...முன்பு சினிமாவை பார்த்து தியேட்டரிலயே மறந்து விடுவர்.
வீடுவரைக்கும் வ்ந்த பிறகு அதன் வ்ழியிலேயே தன்னயும் நினைத்துக் கொள்கிறனர்,,வயசும் முக்கிய காரணம்.அடுத்தவர் மனதை நோகடித்து,தான் இப்பொது காமெடி வைப்பது கடமையாகிவிட்டது,,,அதை பார்க்கும் அவர்களும் அதை அப்படியே செய்கின்றனர்.
இதனால்தான் நாங்கள் பர்தா போடுவது அவசியமாக்கப் பட்டு இருக்கிரது..பெண்கள் கல்லூரியில் படித்தாலும்,ரோட்டில் செல்லும் போது,பஸ் பயணத்தில்,பொது இடத்தில்,பிறருடய கெட்ட பார்வயிலும் படாமல் இருக்க நிறய்ய சொல்லலாம்.
சினிமா தொலைக்காட்சியில் பார்க்க கூட அனுமதிக்காதீர்கள்,,நிறைய்ய நல்ல விடயங்கள் உலகில் இருக்கு..பெரும்பாலும் அறுசுவைக்கு வருபவர்கள் தாய்மார்கள்தான்,உங்கள் மடியில் உங்கள் வாரிசு இப்போது உன்களுடய கட்டுபாட்டில் இருக்கிறது.

நல்ல விடயங்களையும்,நல்ல எண்ணங்களையும்,பிறருக்கு கெடுதல் செய்யாத தூய எண்ணங்களையும்,தூன்டுகிற புத்தகங்கள்,சிடி,கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கி குடுங்கள்.

உங்களுடய உதவியில் தற்போது இருக்கும் உங்கள் வாரிசு நாளை ஆசிரியப் பணி செய்யும் வாய்ப்பு விதியில் இருக்கலாம்,,,சிந்தியுங்கள் பெற்றோர்களே(பிழைக்கு மன்னிக்கவும் குழந்தை அருகில் இருப்பதால்)

நானும் நியூஸ் பார்த்து ரொம்பவே பயந்துட்டேன். இது என்ன அமெரிக்காவா??? கோவம் வந்தா பிள்ளைகள் அப்பா துப்பாக்கியை கொண்டு போய் கண்டபடி சுட??? அங்க தான் இதெல்லாம் நடக்குதுன்னு பயந்தா, இங்க நம்ம ஊரில் கையில் கத்தி???!! எங்கே போகிறது நம்ம ஊருன்னு புரியல.

இதுக்கு முக்கிய காரணமா எனக்கு தெரிஞ்ச சில கருத்துக்கள்:

1. குழந்தைகளை சினிமா, டிவி பார்க்க விடாதீங்க... கார்டூன்ஸ் கூட வன்முறை உள்ள கார்டூன்ஸ் பார்க்க விடாதீங்க. அது பிஞ்சு மனசு... பார்ப்பது பதிந்து போகும்... எதாவது பிரெச்சனைன்னா இது போல் தாக்கலாம் என்ற எண்ணமே இங்கு தான் விதைக்கப்படுகிறது.

2. கோவத்தை குறைக்க, மனதை ஒரு நிலைப்படுத்த பிள்ளைகளை எப்பவும் சிறு வயதிலேயே பழகனும். ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ்ல சேர்ப்பது அவசியம் என்பது போல் யோகா சேர்ப்பதும் அவசியம்... இதெல்லாம் தேவையான்னு சிலர் கேட்பீங்க... ஆனா இந்த கால பிள்ளைகளுக்கு இருக்க ஸ்ட்ரெஸ் கொஞ்சம் நஞ்சம் இல்லை. நம்ம பெற்றோரை விட நமக்கு ப்ரெஷர் அதிகம், நம்மை விட இன்றைய குழந்தைகளுக்கு ரொம்பவே அதிகம். அதை நாமும் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.

3. பள்ளியில் கொடுக்கும் ப்ரெஷர் தாங்காம வீட்டுக்கு வரும் பிள்ளைகளை அவர்களுக்கு பிடிச்ச விளையாட்டு அது இதுன்னு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக விடனும்... கட்டுப்படுத்தி படி படின்னு தினிக்கும் போது பிள்ளைகள் இங்கும் மன உலைச்சலுக்கு ஆலாகிறார்கள்.

4. சில வீடுகளில் பள்ளியில் இருந்து ஒரு கம்ப்லைண்ட் வந்துட்டா அவ்வளவு தான்... அது சிறு பிள்லை என்பதையும் மறந்து போட்டு சாத்துறது, திட்டுறது... சிலர் டீச்சர்ஸ் மீட்டிங் போனா டீச்சர்ஸ் முன்னாடி, மற்ற மாணவர் முன்னாடியே பிள்ளையை விட்டு கொடுத்து திட்டி தீப்பாங்க... டீச்சர் அடிச்சாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டு வருவாங்க. பிள்ளைகளை நல்ல வழிக்கு கொண்டு வருவதாக நினைப்பு. ஆனால் உண்மையில் அது டீச்சர் மேலையும், பெற்றோர் மேலையுமே பிள்ளைகளுக்கு சொல்ல முடியாத கோவத்தை ஏற்படுத்தும். வீணான அவமானத்தையும் ஏற்படுத்திவிடும்.

5. பிள்ளைகள் பிரெச்சனைகளை காது கொடுத்து கேட்கனும். அப்போ தான் அவங்க மன நிலை பெற்றோருக்கு புரியும். பல பெற்றோருக்கு இன்று இதுக்கு நேரமே இருப்பதில்லை. இதுவும் பிள்ளைகள் தவறான வழியில் போகும் போது பெற்றோர் கண்டிக்க முடியாமல், வழி மாறும் பிள்ளையை நல் வழி படுத்த முடியாமல் போக காரணமாகிறது.

6. டீச்சர்ஸ் ஒரு லிமிட் வைக்கனும் பிள்ளைகளிடம்... மற்ற பிள்ளைகள் முன் திட்டினா கூட தூக்கில் தொங்கும் மாணவிகள் உண்டு... அதுவும் ஒரு வகை சைக்கலாஜிகல் பாதிப்பு தான்... நான் ஏன் சாகனும், நியே சாகுன்னு போட்டு தள்ளும் இது போல் மாணவர்களூம் சைக்கலாஜிக்கல் பாதிப்பு தான்... இதுக்கு ஒரு வகையில் பள்ளியும் பெற்றோருமே காரணம்.

7. சில நேரம் டீச்சர்ஸ் பனிஷ் பண்ணதோ, பேரண்ட்ஸை கூட்டிட்டு வந்தா தான் உள்ல வர முடியும்னோ சொன்னா பிள்ளைகள் ரொம்பவே பயந்து போறாங்க. ஏன்னா டீச்சர் 4 அடி அடிச்சா கூட நம்மோட போகும், அப்பா அம்மாக்கு தெரிஞ்சா வீட்டில் திட்டுவாங்க அடிப்பாங்கன்னு பயந்துருவாங்க. இதுவும் நடக்குது... இந்த மாசம் முதல் ரேன்க் வாங்காம இரண்டாவதா வந்தா கூட விளையாட்டு, கார்டூன் எல்லாம் கட்டுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லும் பெற்றோர் உண்டு... நாம் யாரும் மறூக்க இயலாது. இது போல் பிரெச்சனை வரும் போது அங்கே டீச்சரிடம் பேசும் போது பிள்ளையை அருகில் வைக்காமல், இங்கே பிள்ளையிடம் அன்பாக “கண்ணா... மிஸ் பாவம்டா நீ ரொம்ப நல்ல பிள்ளை... படிக்கலன்னு ஃபீல் பண்ணாங்க... அடுத்த முறை கண்டிப்பா நல்லா படிப்பனு அப்பா சொன்னேன்”னு சொல்லி அவங்களை ஐஸ் வெச்சு சரி பண்ணனும். திட்டின டீச்சரை அப்படியே போட்டு கொடுத்தா பிள்ளை கேட்க மாட்டான்... ஆனா நல்ல விதமா தான் சொன்னாங்க உன்னை பற்றீன்னுச் ஒல்லும் போது அந்த டீச்சர் மேல பிள்லைகளுக்கு மறியாதை கூடும்... நீங்க நினைச்சதும் நடக்கும்.

நாளைய சமுதாயம் இன்றைய பிள்ளைகள் கையில்... அவர்களை அன்பால் நல்வழி படுத்தனும்... ஒரு குற்ரவாளியா அவங்க உருவாக பெற்றோரோ வாத்தியார்களோ காரணமா இருக்க கூடாது. இதுக்காக தான் மனதில் பட்டதை இங்கே பதித்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கே நீங்க தப்பு செய்யும் பிள்ளைகளை பற்றி நிறைய சொலி இருகீங்க... உண்மை தான் இது போல் பிள்ளைகள் இருக்க தான் செய்கிறார்கள்... அதே போல் தப்பு செய்யும் ஆசிரியர்கள் சிலரை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.. அதையும் இங்கே பதிக்கிறேன்.

1. சீனியர் மாணவிகளை விட்டு புதிதாக வந்த மாணவிகளை ரேகிங் செய்ய சொல்லி கூட சேர்ந்து உட்கார்ந்து கமண்ட் அடிச்சு சிரிச்ச ஆசிரியரை நீங்க பார்த்திருக்கீங்களா??? நான் பார்த்திருக்கேன். ஏன்னு தட்டி கேட்டா “டேக் இட் ஸ்போர்டிவ்... ஜஸ்ட் ஃபார் ஃபன்”னு அவங்களே சமாதானம் சொன்னாங்க. இது எல்லாரும் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் இல்லைங்க, மாணவிகள் மட்டும் தங்கும் விடுதியில். செய்தவர் அதே கல்லூரியில் டீச்சர்.

2. கல்லூரியில் பணி செய்யும் ஒரு வாத்தியாரையும் அவரிடம் படிக்கும் மாணவியையும் பற்றி தகாத சொல்லில் சம்பந்தபட்ட பெண்ணிடமே பேசிய ஆசிரியை உண்டு. அதை கேட்டு தவித்த பெண்ணின் நிலையை சற்று யோசியுங்கள். தப்பு செய்பவர்கள் துடைத்து விட்டு போகலாம்... செய்யாத தப்பை தன் தலையில் போடும்போது எப்படி இருக்கும்???

3. இங்கே டீச்சர்கள் படுத்தும் தொல்லை தாங்காமல் ஹாஸ்டலை விட்டு வெளியேரிய மாணவிகளுக்கு கொடுத்த பட்டம் “ரேகிங் செய்தாங்க, ஹாஸ்டலை விட்டு விரட்டிட்டோம்”னு... இதுவும் அதே டீச்சர் கல்லூரியின் தலைமை நபரிடம் சம்பந்தப்பட்ட பெண்கள் மேல் போட்ட அநியாய பழி.

இவற்றை இங்கே சொல்ல காரணம் ஒன்று தான்... பெற்றோரும் கண்டிப்பாக இருந்தால் இது போல் மோசமான ஆசிரியர்களிடம் சிக்கும் மாணவ மாணவிகளின் வாழ்க்கை சீரழியும் என்பதில் சந்தேகமே இல்லை. தெய்வத்துக்கு முன் வைத்து மதிக்கப்பட வேண்டிய ஆசியர்கள் இன்று கையில் கொம்பிருந்தால் தலையிலே இருப்பது போல் ஆடுவது கண்டிக்கப்பட வேண்டியது.

இங்கே பல ஆசியர்கள் இருக்கிறீர்கள், நான் சொன்னது உங்களை காயப்படுத்தி இருந்தா மன்னியுங்கள். நானும் பல நல்ல ஆசியர்களிடம் நல்ல பெயர் எடுத்த மாணவியே. இன்றும் என்னை நினைவில் வைத்து பேசும் ஆசிரியர்கள் உண்டு. அது போல் ஆசிரியர்கள் மற்றும் என் பெற்றொரின் அன்பும், நம்பிக்கையுமே என்னை படிப்பில் முன்னுக்கு கொண்டு வந்தது. இதை பெற்றோரும் தெரிஞ்சுக்கங்க, ஆசிரியர்களும் தெரிஞ்சுக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது லாவகமாக செய்யக் கூடிய ஒரு கலை. பெற்றோர் ஆசிரியர் இருவரும் இணைந்துதான் ஒரு நல்ல இளைஞனை உருவாக்க முடியும்.

அந்த காலத்தில் அப்படி வளர்ந்தோம் இப்படி இருந்தோம்னு இன்றைய குழந்தைகளிடம் நாம் அதை எதிர்பார்ப்பது தவறு. நம் பெற்றோர் அவர்களது பெற்றோர் போல் நம்மை வளர்க்கவில்லை. காலம் மாறுகிறது. குழந்தைகள் வளரும் சூழலும் மாறுகிறது.

இன்றைய குழந்தைகளிடம் ஃப்ரெண்ட்லி அப்ரோச்சோடுதான் அணுக வேண்டும். இன்றைய குழந்தைகள் நாம் சொல்லும் எதையும் அப்படியே தலையை ஆட்டி கேட்க மாட்டார்கள். காரண காரியங்களை விளக்கி சொல்ல வேண்டும். ஏன் என்ன என்று நாம் அவர்களுக்கு அன்பாக புரிய வைக்க வேண்டும்.

ஆசிரியர்கள் ஃப்ரெண்ட்லியாக இருந்து சப்ஜெக்டிலும் ஸ்ட்ராங் ஆக இருந்து அவர்களுக்கு புரியும் விதமாக இன்ட்ரெஸ்டிங் ஆக பாடம் நடத்தினால் அவர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்பார்கள். தவறு செய்யும் போது தனியே அழைத்து அவர்களிடம் இதமாய் பேசி புரிய வைத்தாலே 95சதவீதம் மாணவர்கள் கேட்டுக் கொள்வார்கள். அதை விடுத்து எல்லோர் முன்னிலையிலும் கண்டித்தால் அது நிச்சயம் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும்.

ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகம் என்று சாக்கு சொல்ல முடியாது. இது காலத்தின் கட்டாயம். மாதா பிதா குரு தெய்வம் எல்லாம் இந்த காலத்தில் எடுபடாது. கடவுளே கூட இன்றைய இளைஞனுக்கு "ஹாய் கடவுளே" தான்.

இன்று பல பொறியியல் கல்லூரிகளிலும் லெக்சரர் யார் என நினைக்கிறீர்கள்? முந்தைய வருடம் அதே கல்லூரியில் மாணவராக இருந்தவர்கள். எப்படி மாணவர்கள் மதிப்பார்கள்?

இன்றைய குழந்தைகள் ஓடியாடி விளையாட நேரமும் இல்லை கூட விளையாட குழந்தைகளும் இல்லை. அப்போ அவர்களது எனர்ஜியை எங்கே வெளிப்படுத்துவார்கள்? அவர்களது ஸ்ட்ரெஸ் எப்படி வெளியேறும்! குழந்தைகளுக்கு என்ன பெரிய ஸ்ட்ரெஸ்னு நினைக்கலாம். அவர்கள் லெவலில் அவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்குமே!

அளவான கண்டிப்பு இங்கிதமான கண்காணிப்பு கூடவே நிறைய ஃப்ரென்ட்ஷிப் அப்ரோச் இருந்தால்தான் இன்றைய குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்