கைய்யெழுத்தை மாத்தி மாத்தி போடுவோர் சங்கம்

நானெல்லம் கை நாட்டு என்றால் சந்தோஷப்படுவேன்.கைய்யெழுத்து எனக்கென்னவோ ஒரே மாதிரி வரவே வராது..எவ்வளவு ப்ராக்டீஸ் பண்ணி விட்டேன் அப்போதைக்கு வரும் பிறகு மறந்துடும்.ஒரு சைன் போடும் முன்பு ட்ரெயினிங் எடுத்துட்டு தான் போடுவேன்..இது எனக்கு மட்டும் தானா இல்ல என்னை போல் இன்னும் எத்தனை பேர் இருக்கீங்கன்னு தெரிஞ்சா என்னை தேத்திக்கலாம்னு பார்க்கிறேன்.

ரொம்ப நாளா என் பெயரைதான் அழகா எழுதிக்கிட்டு இருந்தேன் கையழுத்தா...ஹா ஹா..அப்பரம் ஏதொ ஒரு மாதிரி போட பழகினேன்...ஆனா bank account / cheque book தான் ரொம்ப problem வரும்... அப்பப்ப xerox copy எடுத்து வெச்சுகுவேன்..வேற வழி.... அழகான கையழுத்தா பார்த்தா அதே மாதிரி try பண்ணி பார்ப்பேன்.இது வரைக்கும் set ஆகல..

தளிகா டெய்லி 100 தடவை உங்க கையெழுத்தை இம்போசிஷன் எழுதுங்க. ஒரு மாசம் செய்தா கையெழுத்து மாறவே மாறாது. எல்லாம் அனுபவம்தான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்படி கூட நடக்குமா??? தெரியாம போச்சே... அப்போ கவிசிவா ஐடியா தான் சரி... என்னை தூக்கத்தில் எழுப்பினா கூட கையெழுத்து அச்சு பெசகாம வரும்... :) அதனால் நான் இந்த சங்கத்தில் மெம்பராக முடியாது ;) ஹிஹிஹீ. எப்போ கல்லூரி சேர்ந்தனோ, அப்போ முதன் முதலா என் பெயரை வேகமா எழுத முயற்சித்தேன், கையெழுத்தா போட... அது அப்படியே பழகி, கையெழுத்தா நின்னுடுச்சு... ஆனா அதை பார்த்து யாரும் என் பெயரை படிக்க முடியாது. முதல் எழுத்து மட்டுமே புரியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடக்கும் நடக்கும் :) என்னோட மார்க் ஷீட்ஸ் எல்லாத்துலயும் ஒரு கையெழுத்து (இனிஷியலோட பெயரை எழுதினா அதுதான் கையெழுத்து). அது கூட ஆஃபீஸ் ரூம்ல வச்சு கையெழுத்து போடணும் கையெல்லாம் நடுங்கும். கையெழுத்தும் தினுசு தினுசா வரும் :)

அப்புறம் பாஸ்போர்ட் அப்ளை பண்ணும் போது இனிமேல் கையெழுத்து ஸ்டான்டர்ட் ஆக இருக்கணும்னு யோசிச்சு ஒரு மாதிரி போட ஆரம்பிச்சு ட்ரெய்னிங் எடுத்து இப்போ நிலைச்சிடுச்சு. எங்கே எப்போன்னாலும் ஒரே மாதிரி வந்துடும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் கையெழுத்து எல்லாம் நல்லாத்தான் போடுவேன். ஆனா இனிஷியல் மட்டும் மாத்தி மாத்தி போடுவேன். ஒருதடவை அப்பா பெயர் இன்னொரு தடவை இவரு பெயர் போடுவேன். இந்த பிராப்ளத்தினால் இனிஷியல் போடுறதையே விட்டுட்டேன்.

கையெழுத்தை மாத்தி போடறதால எவ்ளோ சிக்கல் தெரியுமா, நான் பாங்க்ல டெல்லர் ஆ இருந்ததால இது மாதிரி நிறைய பார்த்திருக்கேன்.
ஒருத்தர் அவர் மனைவியோட கைஎழுத்த அவரே போட்டு cheque நீட்டுவாரு, specimen signature பார்த்து வித்தியாசம் இருக்கு cash withdraw பண்ண முடியாதுன்னு சொன்னா அது நம்ம wife தான், நாங்க ரெண்டு பெரும் ஒன்னு தான், ஒன்னும் பிரச்சினை இல்லை நு சொல்லுவார்.
சிலர் specimen sign இங்கிலீஷ் ல இருக்கும், ஆனா cheque ல தமிழ் ல sign பன்னிருபாங்க,
சிலர் எப்படி specimen sign பண்ணிநோம்ட்ரதையே மறந்திருவாங்க.
சிலர் கையெழுத்தே ரொம்ப வித்தியாசமா இருக்கும். எங்க பேங்க் ல கரண்ட் அக்கௌன்ட் கஸ்டமர் ஒருத்தர் அவரோட sign ஐ வாத்து மாதிரி ரொம்ப அழகா போடுவார். (அவர் பேர் s ல ஆரம்பிக்கும்.)
சிலர் sign பெயரை அப்படியே எழுதி வைப்பாங்க.
சிலர் sign ரொம்ப tuffa இருக்கும். யாராலேயும் அது மாதிரி போடவே முடியாது.
ஒரு சில பசங்க அவங்க அப்பாவோட sign ஐ அவங்களே போட்டு cheque கொண்டு வருவாங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஷ்ரீலதாவிஜய் அப்ப நீங்களுமா.நானும் எழுதி வச்சிருக்கேன் இல்லன்னா மறந்துடுவேன்.

அப்படிங்கற கவி?டெயிலி நூறா .மிஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்

வனி யூ ஆர் லக்கி .இப்படி சொல்லிட்டீங்களே

கவி எனக்கும் அதே தான் ப்ராப்ளம்.எல்லாம் என் ஸ்கூள் டீச்சரை சொன்னா போதுமே ப்ரின்சிபால் ரூம்ல கைய்யெழுத்து போடனும் அதும் இனிஷியலோட போடலேன்னா தோலை உரிச்சுடுவேன் ஒழுங்கா ஒரே தடவையில் போட்டுறனும்னெல்லாம் பயமுறுத்த அந்த பயத்தில் கேவலமா சைன் போட்டு அதுவே 10த் செர்டிஃபிகேட்டுக்கு வந்து பிறகு 12 இல் திரும்ப அட்சையே கன்டினியூ பண்ணனும்னு மிறட்டி அதோட போச்சா பாஸ்போர்ட்டுக்கும் 12 இல் போட்ட அதே சைன் தான் போடனும்னு ஒருத்தர் சொல்ல திரும்ப அதையே போட்டு அந்த கேவலத்தை இன்னமும் சுமந்துட்டிருக்கேன் எங்காவது சைன் போட்டா என்னை ஒரு நொடி நிமிந்து பாப்பாங்க

காயத்ரி இது சூப்பர் இனிஷியலை மாத்தி மாத்தி போடுவீங்களா

கார்த்திகா ஆமாம் நீங்க சொன்னது ரொம்ப சரி.இந்த வேலையெல்லாம் நான் செய்றது கெடையாது ஆனால் சமயத்துக்கு நானே கைய்யெழுத்து போடும் அவஸ்தை வந்தால் முந்தின நாளே எடுத்து போட்டு பாத்துட்டு போகணும் ஏன்னா பச்சப்புள்ள போட்ட சைன் போல இருக்கும்;-)

தளிகா.... நானும் சங்கத்துக்கு வந்துட்டேன்........

நானும் இப்படிதான் ஆரம்ப காலத்தில் ரொம்ப அவஸ்தை பட்டேன். என்னோட பேர் வேற ரொம்ப நீட்ட இருக்கா... 10த்,12த் மார்க்ஷீட், கம்யூனிட்டி சர்டிபிகேட்லலாம் என்னோட முழு பெயரை எம் ஐயும் ஏ வையும் போட்டு அதன்பின்னாடி அலைஅலையா போட்டு கடைசில வி போட்டு முடிப்பேன். ரொம்ப லாங்க இருக்கும்.

அதன்பின்பு காலேஜ்ல என்னோட தோழிகள் கிண்டல் செய்ததால என் ஏ பினு ஷார்ட்டா அழகா போட கத்துகிட்டேன். அப்பவும் அது ரொம்ப அழகாலாம் இருக்காது.... கடைசியில நம்ம ப்ரொஃபஷன் டீச்சர் என்பதால் பழைய ரெகார்ட் நோட், கிளாஸ்வொர்க் நோட் ஐ எடுத்து நானே கரெக்ட் டிக் செய்து சைன் போட்டு பழகினேன். என்னோட சைன் எனக்கே அப்பப்ப மறந்து போய்டும் என்பதால் ஒரு சின்ன பிட்டு பேப்பர்ல என்னோட சைனை போட்டு மடிச்சி என்னோட பர்ஸ்ல வச்சுப்பேன்.

என்னோட பழைய ஃபுல் நேம் சைனை பார்த்தால் எனக்கே சிரிப்பு தாங்கமுடியாது. ஏன்னா அதுல அலைஅலையா போடுவேண்ணு சொன்னேன்ல அதை ஒவ்வொரு இடத்தலையும் அதனுடைய எண்ணிக்கை என்னோட ஒரிஜினல் பேர்ல இருக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கையைவிட ஜாஸ்தியா இருக்கும்.

அந்த டைம்லலாம் பல ஆஃபிசர்ஸ், ப்ரொஃபசர்ஸ் களோட சைனை ரொம்ப ஆராய்ச்சி பண்ணி பார்ப்பேன். அதையே கொஞ்ச காலம் திங்க்பண்ணி நாமும் நம்ம சைனை இப்படிதான் போடனும்னு ஒருமுடிவுக்கு வந்தேன். பரவால்ல இப்ப கொஞ்சம் திருப்திபடறமாதிரி இருக்கு.

ஆனாலும் பழக்க தோஷம் பழைய சைன் அப்பப்ப எங்கையாவது எப்பவாவது கைதவரி வந்துவிடும்.

டிரைவிங் லைசன்ஸ்லயும் நீளமான சைன் தான். பார்க்கறப்ப அப்பப்ப சிரிப்புதான் வரும்.

நம்ம கவி சொல்வதுபோல ஒரு ஸ்டான்Tஅர்ட் ஃபார்மை ரெகுலரா பயிற்சி செய்தால் ஈசியா வந்துடும்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

கார்த்திகா சொன்னதை படிச்சதும் எங்க அப்பா தான் இயாபகம் வரார்... அவர் தமிழில், ஆங்கிலத்தில் இரண்டிலும் கையெழுத்திடுவார். ஆனா ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கும்... தமிழ் கையெழுத்தை மிக முக்கிய ஆபீஸ் ஃபைல்ஸ், பேன்க் போன்றவைக்கு மட்டுமே பயன்படுத்துவார். காரணம் அது ரொம்ப டஃப், புரியாது. நானும் பல முறை முயர்சித்திருக்கேன்... ஸ்ட்ரோக் காட்டி கொடுத்துடும். ;) ஆங்கிலம் ரொம்ப சிம்பில்... எங்க ப்ராக்ரஸ் ரிப்போர்ட்ல அதான் போடுவார்... நாங்க கொஞ்சம் வளர்ந்து அதை போட துவங்கியதும் தலைவர் ப்ராக்ரஸ் ரிப்போர்ர்ட்டுக்கும் தமிழ் கையெழுத்தாக்கிட்டார்.

அம்மா அன்றிலிருந்து இன்று வரை பெயர் தான்... ஆனா ரொம்ப ஸ்டைலா இருக்கும், அதுலையும் ஒரு ஸ்ட்ரோக் இருக்கும் (எழுத்துக்கள் வரைந்தது போல் ஒரு அழகு) அதனால் யாரும் சுலபமா போட முடியாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சைன் போட அவசியம் இல்லாத சமயத்திலிருந்தே சைன் போட பழக ஆரம்பித்தேன்.....(எப்பூடி நாங்கெல்லாம் எள்ளுன்னா எண்ணையா இல்ல நிப்போம்....). பேசிக்கலி என்னுடைய அப்பா அம்மாவின் சைன் அழக்காக இருக்கும். அதுவும் அம்மாவின் சைன் ரொம்பவே க்யூட். அது ஏதோ வரஞ்ச மாதிரி இருக்கும். அவர்களின் சைனின் முதிலில் இருக்கும் ஒரு வார்த்தையை காப்பி பண்ணி தான் என்னுடைய சைனை (நானே!) உருவாக்கினேன். அதிலிருந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கீழே புள்ளி வைத்து கொடு போட்டு அப்படி இப்படின்னு மாற்றம் செய்து இப்பொழுது ஒருவழியாகி வந்து நிக்குது.
தளி உங்களை சுத்தி நல்லவங்களாகவே இருக்காங்க போல...அதான் பள்ளியில் போட்ட அதே சைன் தான் பாஸ்போர்ட்டிலும் போட வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்காங்க. எனக்கு அப்போ நான் எப்படி போட்டேன் என்றே தெரியாது. ரிஜெக்ட் ஆகியிருந்தால் தெரிஞ்சிருக்கும் :(
நானும் கவி சொன்னது போல் செய்திருக்கேன். என் பெயர் எழுதிக் கொண்டே இருப்பேன். அது என்னவோ அப்படி செய்தால் நம் மேலே கான்ஃபிடெண்ட் வருவது போல் இருக்கும். அதனால செய்வேன். அப்புறம் "Never give up" அந்த வாசகத்தையும் அடிக்கடி எழுதுவேன். அதெல்லாம் படிக்கும் போது இப்போ எங்கே எழுத .....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்