கைய்யெழுத்தை மாத்தி மாத்தி போடுவோர் சங்கம்

நானெல்லம் கை நாட்டு என்றால் சந்தோஷப்படுவேன்.கைய்யெழுத்து எனக்கென்னவோ ஒரே மாதிரி வரவே வராது..எவ்வளவு ப்ராக்டீஸ் பண்ணி விட்டேன் அப்போதைக்கு வரும் பிறகு மறந்துடும்.ஒரு சைன் போடும் முன்பு ட்ரெயினிங் எடுத்துட்டு தான் போடுவேன்..இது எனக்கு மட்டும் தானா இல்ல என்னை போல் இன்னும் எத்தனை பேர் இருக்கீங்கன்னு தெரிஞ்சா என்னை தேத்திக்கலாம்னு பார்க்கிறேன்.

காதல்னா காதல் தான் போங்க இவ்வளவு அசிங்கமா இருந்தும் என் கணவர் மட்டும் சின்னபிள்ளதனமா இருந்தாலும் அதுவும் ஒரு யுனீக்கா இருக்கும்பார்.சந்தோஷம்;-)

தளிகா இன்னிக்கு இம்பொசிஷன் எழுதியாச்சா :). ஒவ்வொருத்தருக்கும் கையெழுத்து போட பழகுனதுக்கு ஹிஸ்டரி ஜியாக்ரஃபி எல்லாம் இருக்கும் போல இருக்கே!
எங்க அப்பா கையெழுத்து முதல்ல எல்லாம் போடறதுக்கு கஷ்டமாத்தான் இருந்துச்சு எனக்கு :). ஆஃபீசில் வேலை அதிகரிக்க அதிகரிக்க போட வேண்டிய கையெழுத்தின் எண்ணிக்கையும் அதிகமாகி வேக வேகமா கையெழுத்து போட்டு சின்னக் குழந்தை கூட ஈசியா போடற அளவுக்கு ஆயிடுச்சு. நானே அப்பாக்கிட்ட அதுவும் 7வது படிக்கும் போதே போட்டுக் காட்டினதும் அப்பா இது சரியாகாதுன்னு பழைய படியும் கஷ்டமா இருக்கற மாதிரி போடணும்னு நினைச்சார். பேங்கில் இருந்து சார் இது யார் வேணும்னாலும் ஈசியா போடற மாதிரி இருக்கு மாத்திடுங்கன்னு சொன்னதுக்கு அப்புறம் மாத்திட்டார். இப்போ என்னால அப்பா கையெழுத்தை போட முடியலை :(

அம்மா கையெழுத்து அலை அலையா அழகா இருக்கும். போட கஷ்டம் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் எப்பவும் ரெண்டு விதமா ஸைன் வைத்திருப்பேன். ஒன்னு ஆபிஸ்க்கு, இன்னொன்னு பேன்க் அக்கவுண்ட்க்கு.. என் பாஸ்போர்ட்,பேன்க் போன்ற பர்சனல் விஷயத்திற்கு ஒன்றும், ஆபிஸ்க்கு சிம்பிளா ஒன்னும் வைத்திருப்பேன். அட்மின் மேனேஜரா இருந்ததினால், ஆடிட்டிங் போயிட்டிருக்கும் சமயத்தில் எங்கயாவது யாராவது என் சைன் வாங்காம இருந்திருந்தா , எங்காளுங்க யாராவது என்கிட்ட எதாவது ஃபைல்ஸ் காட்டாம விட்டிருந்தா, அவசரத்துக்கு என் அஸிஸ்டண்ட்களே சைன் பண்ணிடும்.. அதுக்காக தான் .. ஈஸியா ..எப்டி ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹி ஹி ! சங்கத்தில நானும் சேரலாமா?..ஸ்கூல்,காலேஜ்,வேலை,வங்கி எதுவாயிருந்தால் என்ன..வித்தியாசம் இருந்துகொண்டே இருக்கும்.என் சைனை அம்மா போட்டால் அழகாக ஒரே மாதிரி போடுவாங்க..எனக்கு மட்டும்தான் இந்த கோளாறுன்னு ஃப்லீங்க்ல இருந்து இப்பதான் ரீலீப்..
என் எல்லா நோட்டு,புக்லயும் என் அம்மா அல்லது நெருங்கிய நண்பர்கள் நேம் எழுதறது வழக்கம்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்