புற்றுநோய் சிகிச்சை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அல்லோபதி சிகிச்சையை தவிர்த்து மற்ற ஹோமியோ,இயற்கை வைத்தியம்,ஆயுர்வேதம் இப்படி எதாவது செய்து பூரண குணமடைந்தவர்கள் உங்களுக்கு தெரிந்த யாராவது இருக்கிறார்களா.இந்தியாவில் எங்காயினும் பரவாயில்லை.அவசர பதில் தேவை ப்லீஸ்
நிறைய தளங்கள் கூகிளில் கிடைக்கிறது இருந்தாலும் எப்படி விளம்பரம் பண்ணுறாங்கன்னு நம்ப முடியாது தெரிந்தவர்கள் அனுபவம் உள்ளவர்கள் சொன்னால் நிச்சயம் உதவியாக இருக்கும்.

தெரிந்தவர்கள் முகவரி அல்லது ஃபோண் நம்பரோடு பதில் சொன்னால் உபயோகமாக இருக்கும் ..

விசயம் என்ன, என்ன டைப், என்ன வயசு, என்ன ஸ்டேஜ் எதாவது தெரிஞ்சா எனக்கு தெரிஞ்ச ஒரு சித்தா டாகடர் இருக்கார் கேட்டு சொல்வேன். ஏன்னா எனக்கு அவரு இதுக்குலாம் வைத்தியம் பார்ப்பாரான்னு தெரியாது, இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு சூப்பரான மனுஷன்... நல்ல வயசானவர், நல்ல அனுபவம்... அவர் செய்வதில்லைன்னாலும் வேறு யாரவாது ரெஃபர் பண்ணுவார்... எனக்கு இதை பற்றி தெரியாது, இருந்தாலும் அவசரம்னு நீங்க கேட்டதால சொல்ல கூடிய தகவலா இருந்தா சொல்லுங்க, நான் கேட்டுட்டு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க இவளோ தூரம் கேட்டு பதில் சொல்லாம போக மனசு வரலை.
எனக்கு தெரிந்து நிறையா பேர் ஹோமியோ,ஆயுர்வேதம் எடுத்து இருக்காங்க. இருந்தாலும் எதுவும் வெற்றி அடைய வில்லை. என் தோழியின் அப்பாக்கு கோயம்புத்தூர் பெரிய ஆயுர்வேத ஹாஸ்பிடல் பார்த்தாங்க, ஆனால் கேக்கவில்லை... :-(

ஹோமியோ,ஆயுர்வேதம் பாக்க ஏதாவது ஸ்பெசிபிக் காரணம் இருக்கா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அலோபதின்னா நான் ஒரு கேஸ் கேட்டிருக்கேன்... Global Chennai’ல இதுக்கு யாரோ எக்ஸ்பர்ட் இருக்குறதா சொன்னாங்க. அங்க ஒருவர் ரெகுலரா வந்து ட்ரீட்மனட் எடுத்தாங்க, டாக்டர் பெயர் தெரியல. வேறு ஊரில் இருந்து இவருக்காக இங்க வந்தாங்க. பொதுவா பார்த்தா Global ட்ரீட்மண்ட் கம்மி தான்... என் அனுபவத்தில் லூசு பசங்க கடுப்படிப்பானுங்க... ரொம்ப கேர்லஸ். ஆனா அவங்க இந்த பிரெச்சனைக்கு இங்க தான் நல்ல தீர்வுன்னு சொன்னாங்க... தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகி சொல்றதும் ஒரு வகையில் ரைட் தான்... நான் சொல்லும் டாக்டரும் சொல்வார், இது போல் பெரிய பிரெச்சனைக்குலாம் உடனடியா அலோபதி ,மருந்து எடுத்து சரி பண்ணிட்டு அது திரும்ப வராம இருக்க தான் இது போல் மற்ற வைத்தியம் ட்ரை பண்ணனும்னு. ஏன்னா கேன்சர் ரொம்ப வேகமா பரவ கூடியது, ஆனா இந்த மருத்துவம் எல்லாம் கொஞ்சம் ஸ்லோ ப்ராசஸ். இது போல் பிரெச்சனை எல்லாம் இந்த மருந்து உடம்பில் ஊரி வேலை பார்க்கும் முன் பரவிடும். அலோபதியில் ட்ரீட் பண்ணிட்டு சித்தா அல்லது ஹோமியோபதி எது விரும்பினாலும் ஃபாலோ பண்ணலாம்னு நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழப்பத்தில் இருக்கிறோம்.வயசு 45 பெண் சில வருடங்கள் முன்பு மார்பகப் புற்று நோய் வந்தது அறுவை சிகிச்சை செய்தோம் ஆறு மாசத்துக்கொருதரம் செகப் செய்துகிட்டே இருந்தோம்..அதன் பிறகு ஒரு முறை மற்றொரு இடத்தில் ஒரு கட்டி வந்தது அதையும் அறுவை சிகிச்சை செய்தோம்..அடுத்த செக்கப்பில் இப்பொழுது எலும்பில் பரவியிருக்கிறது என்றும் உடனே கீமோ செய்ய வேண்டும் என்றும் சொன்னாங்க..சில மாசம் முன்பு தான் ரேடியேஷன் செய்தோம் ஆந்த கொடுமையே இப்போ தான் குறைஞ்சிருக்கு..கீமோ முதல் செஷன் செய்தோம் அவரால் ஒரு வாரமாக எழவே முடியவில்லை அவ்வளவு அசதி ரொம்ப மெலிஞ்சு போய்ட்டார்...இப்படி அவர் இருந்து பார்த்ததே இல்லை அதனால் மனசே சரியில்லை..இப்படி இருக்குமென்று தெரிந்திருந்தால் செய்திருக்கவே மாட்டேன் என்று அடிக்கடி சொல்றார்..அதான் இதை நிறுத்திட்டு மற்ற சிகிச்சை எதுவும் தொடரலாமா என்று ஒரு யோசனை.
ஏன்னா இதிலும் எங்களுக்கு முழுசா குணமாகிடும் என்று உறுதி தரவில்லை அதனால் ஒரே குழப்பம்..இதை விடவும் பயம் இனி மற்ற சிகிச்சைக்கு போய் ஒரு வேளை குணமாகவில்லையென்றால் அதுவும் பயம்.அதான் முன்பே அனுபவமுள்ளவங்க சொன்னால் ஒரு தைரியம் வரும்.
நீங்க சொல்வது போல் இப்போ இதை தொடர்ந்து விட்டு கீமோ முடிஞ்ச பிறகு போய் மற்ற சிகிச்சை செய்யலாமா என்றும் ஒரு யோசனை..ஆனால் இப்பவே கண் எல்லாம் உள்ள போய் கண்ணமெல்லாம் ஒட்டிடுச்சு இப்ப தான் தொடங்கியிருக்கோம்.இது செய்து முடிக்கையில் எப்படி இருப்பாங்களோ கடவுளுக்கே வெளிச்சம்
எதிரிக்கும் வரக் கூடாது இந்த சோதனை..ஆனால் அது என்ன அதிசயமோ தண்ணி அடிக்கிறவன்,குடும்பத்தை பாக்காதவன் எல்லா கெட்ட பழக்கமும் இருக்கவணெலாம் போய் சேரட்டும் என்று எல்லாரும்ம் ஆசைப்படும்போதும் ம் எந்த கேடும் இல்லை நல்லவங்களை வாழ விடாமல் என்னெல்லாம் நோய் பாருங்க

தளிகா...புற்று நோய்க்கு அலோபதிதான் பெஸ்ட். சென்னையில் அப்போல்லோ இதற்கு பெஸ்ட். அடயார் ஆஸ்பத்திரியும் பெஸ்ட். எனக்கு நெருங்கிய சொந்தமான ரெண்டு பேருக்கு ஓரல் கேன்சர், மார்பக கேன்சர் நல்லா ஆகி, இப்போ ரொம்ப நல்லா இருக்காங்க. சென்னை ஹாஸ்பிடல்தான் புற்று நோய் சிகிச்சைக்கு நல்லது.

ராதாம்மா அல்லோபதி ட்ரீட்மென்ட் என்றால் இங்கும் அதை தான் செய்துட்டிருக்கோம் கீமோவும் தொடங்கியாச்சு இங்கு அதை விட்டா வேற வழியும் இல்ல..இனி ஒரு வேளை நாங்கள் நினைத்த திருப்தி இல்லையென்றால் ஊரிலும் வந்து அல்லோபதி மருத்துவரை சந்திக்கலாம்னு நினைச்சிருக்கோம்..

எங்களுக்கு தெரிந்த ஒரு பெண் ("" வயசு) அவளுக்கு வயிற்றில் புற்றுநோய். அதற்க்கான அறுவை சிகிச்சை இங்கே நடந்தது. ஆனால் அதன் பிறகு கீமோவிற்கு அவர்கள் இந்தியா சென்று விட்டார்கள் (இங்கே குழந்தையை கவனிக்க ஆள் இல்லாதனால்). சென்னையில் அப்போலோவில் தான் சிகிச்சை. முடிந்து குணமாகி வந்தார்கள். அவர்களுக்கு ஸ்டேஜ் டூ. மற்ற சிகிச்சை முறை பற்றி கேட்டு சொல்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Cancer Institute in Adayar

East Canal Bank Road, Gandhi Nagar,Adayar,

Chennai-600020

landmark:near Michael School.

Phone: 044-24910754, 24911526, 22350241

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்