பேப்பர் விண்ட்மில்

தேதி: February 15, 2012

4
Average: 4 (4 votes)

 

ஆர்காமி (அ) டியூப்லெக்ஸ் பேப்பர்
பெவிக்கால்
டூத்பிக்
குச்சி
நூல்
பெரிய மணிகள் - 2
முத்து மணி - 1

 

டியூப்லெக்ஸ் பேப்பரில் இரு நிறங்கள் கொண்ட பேப்பராக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
15 செ.மீ சதுர அளவில் டியூப்லெக்ஸ் பேப்பரை நறுக்கி வைக்கவும். அதன் நான்கு முனையையும் 5 செ.மீ அளவில் நறுக்கி விடவும்.
நறுக்கின பக்கத்தின் ஒரு முனையை உள்பக்கமாக மடக்கவும். அதன் நுனியில் பெவிக்கால் வைத்து இந்த மடிப்பிற்கும் எதிரே உள்ள முனையை இதனுடன் இணைக்கவும்.
இதேப்போல் அடுத்த இரண்டு முனைகளையும் பெவிக்கால் வைத்து ஒட்டவும். காய்ந்ததும் கம்பி அல்லது ஊசியில் நடுப்பகுதியை துளையிட்டுக் கொள்ளவும்.
இப்போது குச்சியின் மேல் நுனிக்கும் சற்று கீழே டூத்பிக் குச்சியை வைக்கவும். திக்கான நூலை கொண்டு " X " வடிவில் நூலை இறுக்கமாக சுற்றி முடிச்சு போட்டு வைக்கவும். டூத்பிக் வழியாக பெரிய மணி ஒன்றை கோர்க்கவும்.
நடுவில் துளையிட்டுள்ள பேப்பரை டூத்பிக்கில் சொருகவும்.
அதன் மேல் மீண்டும் ஒரு பெரிய மணியை கோர்க்கவும். கடைசியாக நுனியில் ஒரு முத்து மணியை கோர்த்து அழுத்தி விடவும்.
எளிமையான பேப்பர் விண்ட்மில் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டீம்... சூப்பர்!! அப்படியே கையில் கொடுத்த இன்னும் சூப்பர். கலர்... சான்ஸே இல்லை. அட்டகாசமா இருக்குங்க. இது யார் ஐடியா??? யாருலாம் சேர்ந்து செய்தீங்க?? டீம் டீம் தான்... வித்தியாசமா யோசிக்கறீங்க. பத்மா உங்க கைதானே இதுவும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்லா இருக்குங்க கலர் இன்னும் நல்லா பொருத்தமா இருக்கு நல்ல ஐடியா வாழ்த்துக்கள் டீம் by Elaya.G

அட, இத எப்படி நேத்து பார்க்காம போனேன்?!... செம க்யூட்டா இருக்கு! உங்களோட கலர் காம்பினேஷன் அடிச்சிக்க ஆளே இல்லைப் போங்க. அருமை, அருமை! வாழ்த்துக்கள் டீம்!

அன்புடன்
சுஸ்ரீ

அசத்தலா இருக்கு :) கலர் டக்கர்...இதை இங்கே பின்வீல் (Pinwheel) என்று சொல்லுவாங்க. குழந்தைகளை டெஸ்ட் பண்ணும் போது மூச்சை இழுத்து விட சொன்னால் தெரியாது அதனால் இதை கொடுத்து ஊது என்று சொல்லுவாங்க. எல்லா பிள்ளைகளும் சம்மரில் பீச்சில் இதனுடன் தான் சுத்தும். இனி என் பிள்ளைகளுக்கும் இது உண்டு செலவே இல்லாமல்!

//வனி கண்டிப்பா இது பத்மா கையே தான்....மோதிரம் மிஸ் ஆனாலும் நம்ம யாரு//

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி வனிதா. இம்முறை இருவரும் மட்டுமே சேர்ந்து செய்தது. எந்த பேப்பரில் வேணுமானாலும் செய்யலாம் குமரனுக்கு செய்து கொடுங்க. லாவண்யாவே இது யார் கை என்று க்ரெக்ட்டா சொல்லிட்டாங்க.

இளையா, சுஸ்ரீ, லாவண்யா தங்களின் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி.

லாவண்யா கண்டிப்பா நீங்களே உங்க பசங்களுக்கு செய்து கொடுங்கள்.//எல்லா பிள்ளைகளும் சம்மரில் பீச்சில் இதனுடன் தான் சுத்தும்.// இங்கே கோயில் திருவிழாக்களில் இந்த விண்ட்மில்லை பார்க்கலாம்.