ராகி கூழ்

தேதி: February 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

ராகி பொடி - 3 ஸ்பூன்
1.5 கப் - தண்ணீர்

தயிர் சேர்க்க
=============
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது கசக்கியது
சின்ன வெங்காயம் - 2
உப்பு - 1/2 ஸ்பூன்


 

முதலில் ராகி கூழில் சேர்த்து சாப்பிட தயிரில் மற்ற பொருட்களை கலந்து 30 நிமிடம் வைக்கவும்
தண்ணீரை அடுப்பில் வைத்து 1 நிமிடம் மிதமான சூட்டுக்கு வந்ததும் ராகி பொடி சேர்த்து கைவிடமல் கலக்கி கெட்டியாகத் தொடங்கும்போது தீயை குறைத்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
பின்பு தீயை அணைத்து விட்டு ஆறவிடவும் ஆறிய ராகி கூழில் மேலே கலந்து வைத்த தயிர் சேர்த்து பருகவும்


டயட்டில் இருப்பவர்கள் மோர் சேர்த்து சாப்பிடுவது நல்லது..குழந்தைகளுக்கு என்றால் தயிரை வடித்து விட்டு கொடுக்கலாம்.வெயிலுக்கு சுகமாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்