டிசைனர் பென்சில் ஸ்டாண்ட்

தேதி: February 18, 2012

4
Average: 3.7 (13 votes)

 

உருளைவடிவ குழாய்
பென்சில்
கிஃப்ட் பேப்பர்
பெவிக்கால்
கார்ட்போர்டு அட்டை
கத்தரிக்கோல்
பேப்பரிக் பெயிண்ட் - வெள்ளைநிறம்
ப்ரஷ்

 

பென்சில் ஸ்டாண்டு செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைக்கவும். குழாயில் பேப்பர் ஏதேனும் சுற்றி இருந்தால் அவற்றை நீக்கிவிடவும்.
குழாயின் அடிச்சுற்றளவுவை கார்ட்போர்டு அட்டையில் வைத்து ஒரத்தை பென்சிலால் வரைந்து கொள்ளவும். பின் அவற்றை வட்டமாக நறுக்கி ஒரத்தில் பெவிக்கால் தடவி குழாயின் அடியில் ஒட்டவும்.
குழாயின் சுற்றளவுக்கு கிஃப்ட் பேப்பரை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு குழாயின் வெளிப்பக்கம் முழுவதும் பெவிக்கால் தடவி கிஃப்ட் பேப்பரை ஒட்டி விடவும்.
குழாயின் உட்புறத்துக்கு இதே நிறப்பேப்பரை குழாயின் உயரமும் + 3 செ.மீ அகலத்தில் 6 பேப்பரை நறுக்கி வைத்துக் கொண்டு ஒட்டவும். பேப்பர் ஒட்டுவதற்கு முன்னால் குழாயின் உட்பகுதியில் வெள்ளைநிற பேப்பரிக் பெயிண்ட் அடித்து வைக்கவும்.
ஒவ்வொரு பேப்பரிலும் பெவிக்கால் தடவி குழாயின் உட்புறத்தை சுற்றிலும் இதுப்போல் ஒட்டி முடிக்கவும்.
இந்த ஸ்டாண்டுக்கு பொருத்தமாக 2, 3 பென்சில்களிலும் பெவிக்கால் தடவி கிஃப்ட் பேப்பரை சுற்றி ஒட்டிவைக்கவும்.
மிகவும் எளிதாக விரைவில் செய்யக்கூடிய பென்சில் ஸ்டாண்ட் ரெடி. குழந்தைகளின் அறையில் டெக்ரேட்டிவ் ஆக இதுப்போல் வைத்தால் அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிகவும் அழகாக இருக்கிறது. பயனுள்ள பொருளுரும் கூட. அழகாக செய்து இருக்கிறார்கள்

வாவ் ரொம்ப நல்லா இருக்குங்க. . பார்க்கிறதுக்கும் அழகாக இருக்கு. . வாழ்த்துக்கள்.

அன்புடன்,
zaina.

வாவ்... எங்க தான் இப்படி சுலபமான க்ராஃப்ட்டா பிடிக்கறீங்களோ!!! சூப்பர்!!! கலர்... பளிச் பளிச். நல்லா இருக்கு ஐடியா... இதெல்லாம் நான் படிக்குற காலத்தில் செஞ்சிருக்கலாம்... செய்யல. இனி பிள்ளைகள் பென்சிலை வைக்க செய்யறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழந்தைகளும் செய்யக்கூடிய சூப்பரான க்ராஃப்ட்.பென்சில்களுக்கும் கிஃப்ட் பேப்பர் சுற்றியது நல்ல ஐடியா.வாழ்த்துக்கள்.

ரொம்ப அழககாக ஈசியாக செய்யும் படியாகவும் இருக்கு

Jaleelakamal

its very easy