கனவு

விடிகாலையில் கண்ட கனவு பலிக்குமா?
தோழிகளே ,எனக்கு இன்னைக்கு விடிகாலம் 5:30 மணிக்கு ஒருகனவு கண்டேன்.ரொம்பபப..... கெட்ட கனவு.யாரும் பயந்திடாதிங்க.இதுக்கெல்லாமா இழை ஓப்பன் பன்னுவிங்கன்னு என்னை திட்டாதிங்க.எனக்கு எங்க கேக்கன்னு தெரியலை.கனவு என்னன்னா,என் அம்மா இறந்து போய்விட்டார்களாம்.எல்லாரும் ஒரே அழுகை.இது தான் அந்த கனவு.இந்த கனவு வந்ந்ததிலிருந்து எனக்கு இருந்த தூக்கமும் போய்விட்டது. கனவு வந்த நேரம் விடிகாலை5:30..எனக்கு எப்படி அவ்வளவு துல்லியமா டைம் தெரியும்முன்னா,என் கணவர் ஆபிஸ் விட்டுவீட்டுக்கு வந்து தூங்க வந்தார்.அந்த நேரம் இந்த கனவு+பெட் அசைவு என் கனவை கலைத்து விட்டது.அதனால் எனக்கு டைம் தெரியும்.விடிகாலை கண்ட கனவு பலிக்குமா?எனக்கு ரொம்ப பயமா இருக்கு.அம்மாவிடமும் கேக்க முடியாது.அதான் உங்க கிட்ட ஓடி வந்தேன்.மனசே சரியில்லை.யாராவது பதில் சொல்லுங்க தோழிகளே.நான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்?யாராவது சொல்லுங்களேன்.

பயப்படாதீங்க... இது போல் யாரும் இறந்தது போல் கனவு கண்டா அவங்க ரொம்ப நல்லா இருப்பாங்கன்னு சொல்வாங்க. நானே போயிட்டாப்பல எனக்கே கனவு வந்திருக்கு... கனவு கண்டு 2 வருஷத்துக்கு மேல ஆச்சு... விடிகாலை கனவு தான்.. முழிச்சு பார்த்தா மணி 5.45. ஆனா நல்லா தான் இருக்கேன்... :)

இப்ப உங்களுக்கு தைரியம் சொன்னனா... யாராவது இதை படிச்சா என்னை ஒதைப்பாங்க... கொஞ்ச நாள் முன்னாடி நானும் இப்படி தான் நிறைய கெட்ட கனவு வருதுன்னு புலம்பிகிட்டு இருந்தேன். இரவில் தேவை இல்லாத பயம், குழப்பத்தோட தூங்க போகதீங்க... சாமி கும்பிட்டு நிம்மதியா தூங்குங்க... முடிஞ்சா தியானம் பண்ணுங்க... (இதெல்லாம் நானா சொல்லலங்க, எனக்கு இங்க சொன்னாங்க ;) அதை தான் ரீபீட்டடிக்கறேன்)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai தோழி .ஒன்றும் பயப்பட வேண்டாம் .யாராவது இறந்த மாதிரி கனவு கண்டால் அவங்க நல்ல இருப்பாங்கனு சொல்லுவாங்க .அம்மா நல்லா இருப்பாங்க .வீட்டுல நல்லா காரியம் நடக்கும்.சந்தோசமா இருங்க சாமி கிட்ட வேண்டிக்குறேன் .

ஹாய் வனி, பிரபா இரண்டு பேருக்கும் ரொம்ப நன்றிங்க.நான் ரொம்ப பயந்திட்டு இருந்தேன்.உங்க பதில் படிக்க ஆறுதலா இருந்த்தது.எங்க அம்மா கூட அடிக்கடி சொல்லுவாங்கசாமி கும்பிட்டு விபூதி வச்சிட்டு படுன்னு.உங்க பதிவை படிக்கும் போதுகண்ணுல தண்ணி வந்திட்டு.அம்மாக்கிடேயும் பேசிட்டேன்.கனவு கொண்டு ஏதும் சொல்லவில்லை..

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மனோரஞ்சிதா,

ஒண்ணும் பயப்படாதீங்க... வனி & பிரபா சொன்னமாதிரிதான் நானும் கேள்விப்பட்டு இருக்கேன். அதுப்படி நடந்தும் இருக்கு. நான் ஸ்கூல்/காலேஜ் படிக்கும்போது, ஒருமுறை எனக்கு என் தாத்தா (அம்மாவின் அப்பா) இறந்துவிட்ட மாதிரி கனவு. பயந்துபோய், அழுகை அழுகையா வர, அம்மாவிடம் சொன்னேன். அப்பதான் அம்மா சொன்னாங்க, ஒண்ணும் பயப்படாதே, அப்படி கனவு கண்டால், அவங்களுக்கு நீண்ட ஆயுள் என்று... தாத்தாவும் அதன்பிறகு பல வருஷங்களுக்கு நன்றாக இருந்தார். எந்த பிரச்சனையும் இல்லை. கனவில் யாராவது இறந்துவிட்டமாதிரி வந்தால் அவங்க நல்லா இருப்பாங்க. அதேப்போல இறந்துவிட்டவர்கள் யாராவது கனவில் வந்தால் , வீட்டில் எதோ நல்லக்காரியம் நடக்கவிருக்கிறது என்றும் அர்த்தமாம். சோ, கவலையை விடுங்க. பயம் வேண்டாம்.

அன்புடன்
சுஸ்ரீ

மனோ, போனவருடம், இப்படிதான் என் அப்பா இறந்த மாதிரி கனவு கண்டுவிட்டு நாள் முழுவதும் யாரிடமும் சொல்ல முடியாமல் அலுது கொண்டு இருந்தேன். தெரிந்த பாட்டியிடம் கேட்டதற்கு,நல்ல காரியம் நடக்கும் என்று சொன்னார்கள். சொன்னது போலவே அடுத்த வாரத்தில், எனக்கு கல்யாணம் முடிவு ஆனது...யாரவது இறப்பது போல் கனவு வருவது,பின் வரும் சுபகாரியங்களை குறிக்கும்னு படிச்சு இருக்கேன்.

சுஸ்ரீ,ஸ்ரீலதா,ரொம்ப நன்றிங்க.நேற்று முழுவதும் எனக்கு மனசே சரியில்லைங்க.எனக்கு தெரிந்த அன்பான தோழிகள் இருக்கும் இடம் இங்க தான்.அதான் இங்க வந்து பதிவை போட்டுட்டு pcஐயும் ஆப் ப்ன்னிட்டேன்.ஏன்னா எனக்கு பயம்.யாராவது நெகட்டிவாக(விடிகாலை கனவு என்பதால்)சொல்லிட்டாங்கன்னா.நேற்று அம்மாவுக்கு போன் பன்னவே பயந்து,பயந்து பன்னினேன்.இருந்தாலும் ரொம்ப நேரம் பேச முடியலை.மனசுக்குள் அந்த கனவே ஓடிட்டு எந்த வேலையும் செய்யமுடியலங்க.ஸ்ரீலதா உங்க அனுபவத்தை படிக்கும் போது மனசுக்கு இதமாக இருந்தது.நேற்று இருந்த மனநிலை அப்படியே இன்று சுஸ்ரீ மாறிட்டதுங்க.ரொம்ப நன்றிங்க.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

இன்று காலை எனக்கு ஒரு விசித்திரமான கனவு...
நான் பொதுவாகவே பூனைக்கு பயப்படுவேன்....
என் கனவில் பூனை ஒன்று என் காலை கடிப்பது போல் கனவில் வந்தது...இது கெட்டதா? எனக்கு குழப்பமாக உள்ளது.யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்...நான் கர்ப்பமாக இருக்கிறேன்....

இதுக்கு அர்த்தம் யாருக்கும் தெரியலையா?

என்னைக்கேட்டா இது மாதிரி கனவு எல்லாம் நம் ஆழ்மன எண்ணங்களின் பிரதிபலிப்புன்னுதான் சொல்வேன். எல்லாருக்கும் பாம்புன்னா பயம். எனக்கு ஒருபடி அதிக பயம்னு சொல்லலாம் அதனாலயோ என்னவோ என்னை விடாம டெய்லி இப்போயெல்லாம் பாம்பார் கனவில வந்திடுறார். சோ இந்தமாதிரி டைம்ல கனவு அது இதுன்னு கண்டதையும் நினைச்சு மனச போட்டு குழப்பிக்காம இருங்க ஷமீ ஓகேயா? பூனைன்னா எனக்கும் பயம்தான். இன்னைக்கு என் கனவில பூனையார் வருவார்னு நினைக்கிறேன் பாம்பாருக்கு ரெஸ்ட்;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

யானை துரத்துவது போல் கணவு வருது . ஒரு 2 வருஷமா நாலஞ்சு தடவை இது மாதிரி கனவு வந்திருக்கு . ஆனா வேற வேற situation வேற வேற யானை . ஏன் இப்படி வருதுன்னு யாரவது தெரிஞ்சவங்க சொல்லமுடியுமா ப்ளீஸ்

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்