இது கர்பத்திற்க்கான அறிகுறியா?

நான் எப்படி கேட்பது என்று தெரியவில்லை. தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க.
என்னுடைய அந்தரங்க உறுப்பு உடல்உறவு செய்யும் சமயத்தில் மிகவும் வறண்டு , இறுக்கமாக உள்ளது. எனக்கு திருமணமாகி 10 மாதம் ஆகிவிட்டது. இது தான் முதல்முறை இப்படி ஆகிறது. நான் கர்ப்பம் தரிக்க மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். மாதவிலக்கு வர இன்னும் 5 நாட்கள் உள்ளது. கடந்த இரண்டு வாரமாக மார்பகத்தில் பயங்கர அரிப்பு உள்ளது. நான் தேங்காய் எண்ணை தடவுகிறேன். அப்ப வரைக்கும் அரிக்கவில்லை . அடிவயிறு ஒருவித வலி தோன்றி மறைகிறது. குனிந்தால் , படுத்தால் , தும்மினால் ஒரு வித வலி அடிவயிற்றில் வலிக்கிறது.பால் போல் கட்டியாக பிசு பிசுவென்று வெள்ளைபடுதல் கொஞ்சம் வருகிறது. அரிப்போ , நாற்றாமோ இல்லை. மாதவிலக்கு வரும் சமயத்தில் எனக்கு இப்படி இருந்தது இல்லை. மார்பகம் தடித்து வலிக்கும். அவ்வளவு தான். தற்போது சாயங்காலம் ஆனாலே திடீரென்று குமட்டல் வருகிறது , ஆனால் உடனே சரி ஆகிறது. இது நான் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியா?
எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. இது மாதிரியான அறிகுறிகளால் யாராவது அனுபவபட்டு இருக்கிறீர்களா?

மாதவிலக்கு வர இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் வீணாக மனதை குழப்பிக் கொள்ளாமல் கர்ப்பத்தின் தொடக்க காலமான இப்போது சத்தான ஆகாரம் உண்டு, உடலையும், மனதையும் தெம்பாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

Life is one enjoy and give happiness to others

ரொம்ப நன்றி பா..

எனக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆகிறது என்டைய மாதவிடாய் தேதி செப்டம்பர் 18 ஆனால் இரண்டு நாட்களாக மாதவிடாய் வரவில்லை ஆனால் அடிவயிற்றின் இடப்புறம் லேசான வலி ஏற்படுகிறது இது கர்ப்பமாவதற்கான அறிகுறியா யாராவது எனக்கு தீர்வு வழங்குங்கள்

நீங்கள் சொன்ன விடயத்தை அறிகுறி என்பதாகக் கொள்ளமுடியாது கண்ணா. கர்ப்பம் இல்லாத சமயங்களிலும் அனுபவிக்கும் விடயம் அது. நீங்கள் 45 நாட்கள் கடக்கும் வரை காத்திருந்து சோதித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Nan 2 nd baby ku try panra mam 40 days achu but urine test negative ana kumatal, athikama pasikuthu, nenja karikura mari eruku thala valium eruku but ye urine test negative varuthunu puriyala mam how many days la na repeat test panala pls tell me mam

குறைந்தது 45 நாட்கள் எடுக்கும் உடலில் ஹோர்மோன் மாற்றங்கள் நிகழ. நீங்கள் அதற்கு முன்பாகவே சோதித்துப் பார்த்திருக்கிறீர்கள். இப்போது நெகடிவ்தான் காட்டும்! 45 நாட்கள் கழித்து சோதித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

But mam 1st baby ku 38 days la positive results vanthuchu

எங்கள் உடல் ஒரே மாதிரி எப்பொழுதும் இயங்குவது இல்லை. நான் சொன்னது பொதுவாக எல்லோருக்கும் எப்படி என்பது. உங்களுக்குக் கடந்த முறை அப்படி இருந்ததால் இந்த முறையும் அதே போல் இருக்கும் என்று எதிபார்க்காதீர்கள். ப்ரெக்னன்சி டெஸ்ட் மட்டுமல்ல, பிரசவம் கூட ஒரு தாய்க்கு எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது இல்லை. 45 நாட்கள் கழித்து மீண்டும் சோதித்துப் பாருங்கள். முடிவு நீங்கள் எதிபார்த்தது போல் இல்லையென்றால் மருத்துவரைப் பாருங்கள். இரத்தப் பரிசோதனை சரியான முடிவைக் காட்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்