ரொம்ப காலத்துக்கு பின்னாடி உங்களது ஆதரவோடு ஒரு இளை தொடங்கறேன்.
" இந்த காலத்தில் 1000 பாட்டு வந்தாலும் அந்த காலம் மாதிரி வருமா" இதை சொல்லாதவர்களே இருக்க முடியாது. இன்றைய இளைய தலைமுறை மறந்து போன, விட்டு போன அந்த பழைய பாடல்கள் தொகுப்பு தேவை.
தத்துவ பாடல்கள், காதல் வெற்றி/தோல்வி, பாசமான கருத்துள்ள பாடல்கள், இப்படி நிறையா பாட்டு வேணும். இளையராஜா பாட்டு இல்லைங்க, நான் எதிர்பார்ப்பது இன்னும் பழசு.
நம்ம தோழிகள் சொல்லுவீங்கன்னு வந்து இருக்கேன்.
சில பாடல்கள்...
எனக்கு தெரிந்த, விரும்பும் பாடல்களை நானே சொல்லி தொடங்கறேன். நீங்கள் உங்கள் விருப்ப பாடல்களை சொல்லுங்க.
1 மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்,அண்ணன் வாழ வைப்பேன் என்று...
2 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே...
3 காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்..
4 நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..
5 மன்னவனே அழலாம, கண்ணீரை விடலாமா..
6 அத்தை மடி மெத்தை அடி, ஆடி விளையாடம்மா ...
எல்லாரும் திட்டறது தெரியுது :-(
என்ன பண்ண, எனக்கு இப்படி பட்ட அந்த காலத்து பாடல் வேணும்.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
பாடல்கள்...
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டும் வைத்தேன் பொட்டும் வைத்தேன் ஆசையினாலே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனம் ஆடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
அந்த காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
மாசிலா உண்மை காதலே மாறுமோ
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போதும் வேசமா
கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போதும் வேசமா
கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எந்தன் உள்ளம் மகிழுமே
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எந்தன் உள்ளம் மகிழுமே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின் எல்லை காண்போம்
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
................................................................
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளதால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஓரு கோடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
கொண்ட நாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
நிலவே என்னிடம் நெருங்காதே நீ
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
(நிலவே)
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
(நிலவே)
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
(நிலவே)
அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை
................................................................
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
அத்திக்காய் காய்
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ!
என்னுயிரும் நீயல்லவோ..!
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ..
உள்ளமெலாமிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரிக்காயோ
கோதையென்னை காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா...
...........................................
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை..
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
பொன்னை விரும்பும்
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
.....................................................
உனக்காக எல்லாம் உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக?-நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?
(உனக்காக எல்லாம் உனக்காக)
கண்ணுக்குள்ளே வந்து
கலகம் செய்வதும் எதுக்காக?-மெல்லக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக
(உனக்காக எல்லாம் உனக்காக)
பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா
இல்லை பைத்தியமா பாடி ஆடி நடிக்கணுமா
துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா
இல்லை சோறு தண்ணி ஏதும் இல்லாமல் கிடக்கணுமா
(உனக்காக எல்லாம் உனக்காக)
இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்;
மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் இடி
மின்னல் மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன்
(உனக்காக எல்லாம் உனக்காக)
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
ஆண்: ரோஜா மலரே
ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...
உறவும் முறைதானா...
பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ
ஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மீதே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் விழுந்து
நாட்டை இழந்தவர் பலருண்டு
பெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ
ஆண்: பாடும் பறவை கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே
பெண்: விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஆண் & பெண்: ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்
(ரோஜா மலரே ராஜகுமாரி)
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
கல்லெல்லாம் மாணிக்க
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா
(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா
(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
என்னருமைக் காதலிக்கு
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்)
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்)
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே-ஒரு
கள்ளியிடம் இருக்குதுடி வெண்ணிலாவே-அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே-அதை
வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்)
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே....
கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே-நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே-இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே-இது (அவள்)
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
பழைய பாடல்கள்
நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியை தான்
நல்ல அழகி என்பேன்
நல்ல அழகி என்பேன்
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை
வசந்த மாளிகை
குமரி பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்
நிலவு ஒரு பெண்ணாகி
அன்று வந்ததும் அந்தே நிலா ச்ச ச்ச சா