முறுக்கு

தேதி: February 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (7 votes)

 

பச்சரிசி - ஒரு கிலோ
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
பயத்தம்பருப்பு - 100 கிராம்
எள் - 50 கிராம்
உப்பு - தேவைக்கு
பெருங்காயதூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையானது


 

வாணலியில் உளுத்தம்பருப்பை லேசாக வாட்டி, பயத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து அரிசியுடன் சேர்த்து மெஷினில் அரைக்கவும். அரைத்த மாவில் எள், உப்பு, பெருங்காய்தூள் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
முறுக்கு அச்சில் மாவை வைத்து சாரணியில் பிழியவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் முறுக்கை போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சுவையான முறுக்கு தயார். இந்த முறையில் முறுக்கு மாவை அரைத்து வைத்துக் கொண்டால் ஐந்து மாதத்துக்கு கெட்டு போகாது எப்பொழுது வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு உற்சாக படுத்தி வரும் அட்மிண் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றிகள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா, முறுக்கு சூப்பர். அதைவிட வெயிலோடு கூடிய முறுக்கு சூப்பரோ சூப்பர். எங்கம்மா இப்படித்தான் செய்வாங்க பா. அம்மா ஞாபகம் வந்துருச்சி ;( ஊருக்கு போனதும் செய்ய சொல்லி சாப்பிடனும். வாழ்த்துக்கள்பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் சுட சுட வாழ்த்துக்கள் ஹைய்யா சந்தோசம் பா.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

/வெயிலோடு கூடிய முறுக்கு/ அது அண்ணா ஐடியா பா நான் வெளில தட்டை வச்சு போட்டோ எடுக்க போனேன் அப்போ அண்ணா வந்து கண்ணாடி வழியா வெயிலை கொண்டு வந்தார் நான் க்ளிக்கிட்டேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பார்க்கும்போதே சாபிடவேன்டும் போல இருக்கு

Mrs.Anantharaman

சூப்பர் முறுக்கு :) அதுவும் அந்த கடைசி படம் க்ளாசிக். சுலபமா இருக்கு மெதட். நான் கூட ட்ரை பண்ணிடலாம். செய்துட்டு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்.. ரெடிமேட் முறுக்கு மாதிரி.. டக் டக்குனு செய்திடலாம் போல.. அழகா, நீட்டா இருக்கு.வாழ்த்துக்கள் டா ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நெஜமாவே ரொம்ப நல்லா இருக்கு இந்த முறைப்படி அம்மாவ செய்ய சொல்லி சாப்பிடனும் கடைசி போட்டோ கச்சிதமா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

மிக்க நன்றிங்க ராஜி..:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நான் வீட்டில் முறுக்கு அடிக்கடி செய்வேன் அடுத்த முறை இந்த மாதிரி ட்ரை பண்றேன் கடைசி படம் ரொம்ப நல்ல இருக்கு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வனி மிக்க நன்றிங்க.கண்டிப்பா செய்து பாருங்க ஈசிதான் :)

/அதுவும் அந்த கடைசி படம் க்ளாசிக்./ மீண்டும் நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா... இது போல மாவை ரெடி பண்னி வச்சிட்டோம்னா எப்ப வேனாலும் டக் டக்னு செய்துடலாம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளையா மிக்க நன்றிப்பா கண்டிப்பா செய்து சாப்பிட்டு சொல்லனும் பிடிச்சதான்னு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தனா நீங்களும் அடிக்கடி செய்வீங்களா நானும் செய்வேன் பா என்னவருக்கு ரொம்ப பிடிக்கும் :) கண்டிப்பா செய்து பாருங்க.நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் முறுக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஸ்வர்

முறுக்கு சூப்பர். நான் இப்படி தான் செய்வேன். கொஞ்சம் வெண்ணை சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் ஸ்வர்,முறுக்கு சூப்பராயிருக்கு!!

வழக்கம் போலவே அசத்தலான குறிப்பு,அட்டகாசமான படங்களுடன்,குறிப்பாக

கடைசி படம் கொள்ளை அழகு ஸ்வர்.தங்கப்பெண்ணிற்கு ஸ்பெஷல்

பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்:)

அன்புடன்
நித்திலா

முருக்கு அருமையா இருக்கு! என் பையனுக்கு முருக்குன்னா ரொம்ப இஷ்டம், உங்க ரெஸிப்பி பார்த்ததும் உடனே செய்யனும்னு ஆசை வந்திடுச்சி! :) கடைசிப்படம் சும்மா அட்டகாசமா இருக்கு! க்ளாசிக் டச்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ஸ்வர்ணா,
முறுக்கு பார்க்கவே சூப்பரா இருக்கு.முறுக்கில் இதுவரை பயத்தம் பருப்பு சேர்த்ததில்லை.விருப்ப பட்டியலில் சேர்த்திருக்கேன்.ஊருக்கு போனதும் செய்து பார்க்கணும்.நல்ல குறிப்பு ஸ்வர்ணா.வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி musi :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் மஞ்சு எப்படி இருக்கீங்க நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க பதிவு ரொம்ப சந்தோசமா இருக்கு :)
நான் வெண்ணெய் சேர்க்கமாட்டேன் பா எப்பவுமே.மிக்க நன்றி மஞ்சு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் நித்தி உன் வாழ்த்துக்கும் பாராட்டிற்க்கும் மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா,உங்க பையனுக்கும் பிடிக்குமா அப்போ உடனே செய்து குடுங்க:)
கடைசிப்படம், இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் என்னவருக்கே சேரும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.
ப.பருப்பு சேர்ப்பதால முறுக்கு சிவந்த நிறமும் வாசனையும் கொடுக்கும்.இதுலயே என் அம்மா என்ன செய்வாங்கன்னா 100 கிராம் பொட்டுக்கடலை சேர்த்தும் அரைப்பாங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எப்பொழுதும் போல செய்யும் முறுக்கு என்று நினைத்தேன். பாசிப்பருப்பு சேர்த்து இருக்கறது புதுசா இருக்கு. முறுக்கு நல்ல கலராவும் இருக்கு. வாழ்த்துக்கள். அடுத்த தடவை முறுக்கு மாவு அரைத்தாங்கன்னா உங்க முறைப்படி செய்ய சொல்றேன்.

ஹாய் ஸ்வர், நலமா என் அண்ணா நலமா? சூப்பர் மொறு மொறு முறுக்கு செய்து இருக்கிங்க :) எனக்கும் சேத்து அண்ணாவ சாப்பிட சொல்லுங்க வாழ்த்துக்கள் :)

உன்னை போல பிறரையும் நேசி.