சுடிதார் டாப் வெட்டும் முறை

தேதி: February 22, 2012

4
Average: 3.7 (22 votes)

 

சுடிதார் மெட்டீரியல்
அளவு சுடிதார்
கத்தரிக்கோல்
சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ்
தையல் மிஷின்
நூல்
இன்ச் டேப்

 

இப்போது அளவுகள் குறித்த பகுதியை வெட்ட வேண்டும். முதலில் சுடிதார் டாப்பின் அடியின் அகலம் பகுதியிலிருந்து வெட்டவும். அடுத்து சைடு ஓபன் பகுதியை வெட்டவும். சைடு ஓபனில் அளவுகள் குறிக்கும்போது குறுக்கே கோடு வரைந்த கோட்டையும் சிறிது வெட்டி விடவும்.
அடுத்து வளைவுகள் மற்றும் கைப்பகுதியை வெட்டி முடிக்கவும்.
இவ்வாறு முழுவதுமாக வெட்டி முடித்ததும் மீதி துணியை பத்திரமாக எடுத்து வைக்கவும். சுடிதாரின் முன்கழுத்து, பின் கழுத்துக்கு பட்டி தைக்கவும், கைப்பகுதியை வெட்டி எடுக்கவும் இந்த துணி தேவை.
அடுத்து சுடிதாரின் முன்கழுத்து பகுதியை படத்தில் குறித்த அளவின் படி வெட்டவும்.
அளவு சுடிதாரின் பின்கழுத்து உயரம், அகலம் அளந்து, முன்கழுத்திற்கு அடியில் உள்ள துணியில் குறிக்கவும். பின்கழுத்தை வட்டமாக வரைந்து விடவும்.
பின்னர் அதனையும் வெட்டி எடுக்கவும்.
நறுக்கி வைத்துள்ள சுடிதாரின் சோல்டர் அளவை வெட்டி விட்டு இரண்டு துணியையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அளவு சுடிதாரின் கைப்பகுதியின் அளவை அளக்க வேண்டும். கையின் உயரம் 6 1/2 இன்ச் அதனுடன் ஒரு இன்ச் கூட்டவும்.
பிறகு கைநுழைக்கும் பகுதியை அளந்து அதனுடன் ஒரு இன்ச் கூட்டவும்.
நறுக்கின துணியில் மீதமுள்ள துணியை தனிதனியாக பிரித்தெடுக்காமல் அதிகம் இடம் உள்ள பகுதியில் கையின் அளவை குறிக்கவும். துணியின் கரை உள்ள பக்கத்திலிருந்து இன்ச் டேப்பை வைத்து 7 1/2 இன்ச் என்று குறிக்கவும். கரை ஓரத்திலே கைநுழைக்கும் பகுதியின் அளவை குறிக்கவும். அதன் கீழ் 7 1/2 இன்ச் குறித்த அளவிலிருந்து 2 1/2 இன்ச் கழித்து 5 இன்ச் என்று குறிக்கவும். பின்னர் படத்திலுள்ள வளைவுப்போல் சாக்பீஸால் வரைந்துவிடவும்.
வரைந்த கைப்பகுதியை அப்படியே வெட்டி எடுக்கவும். பின்னர் தனிதனியாக இரண்டு கைப்பகுதி கிடைக்கும்.
கைப்பகுதி வெட்டிய பிறகு சற்று தள்ளி அந்த துணியின் மேல், சுடிதாரின் முன்கழுத்து பகுதியை வைக்கவும்.
சாக்பீஸால் அந்த துணியின் மேல் முன் கழுத்து பகுதியை மட்டும் வரைந்து வெட்டவும்.
இதேப்போல் பின் கழுத்துப்பகுதியையும் வரைந்து அதனையும் வெட்டி எடுக்கவும். இவை இரண்டும் கழுத்துப்பகுதியில் பட்டி வைத்து தைப்பதற்கு உள்ள துணியாகும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பரான பயனுள்ள விஷயம்... தொடருங்க, நானும் தைக்க கத்துக்கறேன். பலருக்கும் பயன்படும் நல்ல வேலையை சொல்லி கொடுக்க துவங்கி இருக்கீங்க :) மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வனி. நிறையப் பேர் தேடுற விஷயம் இது.
செண்பகா அவங்க நேரத்தை ஒதுக்கி பண்ணி இருக்காங்க. ஃபோட்டோ எடுத்து உதவிய டீம் மெம்பர்சுக்கும் நன்றிகள்.

‍- இமா க்றிஸ்