சுடிதார் டாப் தைக்கும் முறை

தேதி: February 22, 2012

4
Average: 3.8 (28 votes)

 

சுடிதார் மெட்டீரியல்
அளவு சுடிதார்
கத்தரிக்கோல்
சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ்
தையல் மிஷின்
நூல்
இன்ச் டேப்

 

முதலில் முன்கழுத்து பட்டியின் ஒரத்தை கால் இன்ச் அளவு ஒரு மடக்கு மடக்கி, மீண்டும் ஒரு மடிப்பு வைத்து தையல் மிஷினில் ஒரு தையல் போடவும்.
இரண்டு கழுத்துப்பட்டி துணியின் இரு ஒரங்களையும் இவ்வாறு மடக்கி தைத்து வைக்கவும். கழுத்துப்பட்டி துணியின் கீழ்ப்பகுதி கரை உள்ளதால் இதனை மடித்து தைக்க வேண்டாம்.
இப்போது சுடிதாரில் டிசைன் உள்ள முன்கழுத்து துணியின் மேல், முன்கழுத்து பட்டி துணியை திருப்பி வைத்து " ப " வடிவத்திலேயே தைக்க வேண்டும்.
பின்னர் இந்த முன்கழுத்து பட்டி துணியை சுடிதாரின் பின்பக்கத்தில் வைக்கும் போது பட்டியின் நல்ல பக்கம் சுடிதாரின் பின்பகுதியில் இருக்கும். முதலில் தைத்த தையலுக்கு கால் இன்ச் தள்ளி மீண்டும் " ப " வடிவிலேயே தைக்கவும்.
இதேப்போல் சுடிதாரின் பின் கழுத்து பகுதியில், பின் கழுத்துப்பட்டியை வைத்து தைக்க வேண்டும்.
அடுத்து சுடிதாரின் கைப்பகுதியின் ஒரங்களை ஒரு இன்ச் அளவு மடித்து தைத்து வைக்கவும்.
சுடிதாரின் முன்கழுத்து பக்கத்தை பார்க்கும்போது உங்களுக்கு ஒரத்தை மடித்து தைத்துப்போல் இருக்கும்.
அடுத்து வெட்டிவைத்துள்ள சுடிதாரின் முன்பக்கத்தையும், பின் பக்கத்தையும் திருப்பி சோல்டரை ஒன்றாக சேர்த்து வைத்து அரை இன்ச் அளவு விட்டு தைக்கவும்.
இரு சோல்டரிலும் 2, 2 தையல்கள் போடவும்.
இப்போது கைப்பகுதியை இணைக்க வேண்டும். கைக்குழியின் ஒரத்தில் சுடியின் கைப்பகுதி துணியை வைத்து கால் இன்ச் தள்ளி தையல் போட வேண்டும்.
கைப்பகுதி தைத்து முடித்ததும் சுடிதாரின் ஒரங்களை தைக்க வேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி சாக்பீஸால் முதலில் தைக்க வேண்டிய இடத்தை குறித்துக் கொள்ளவும்.
பின்னர் குறித்த இடத்தில் தையல் போட்டுக் கொள்ளவும். இதுப்போல் மற்றொரு பக்கத்திலும் தையல் போட்டு முடிக்கவும்.
அடுத்து சுடிதார் டாப்பின் அடி ஓரங்களை தைக்க வேண்டும். முதலில் முன்பக்க அடிப்பகுதியை ஒரு இன்ச் அளவு மடக்கி, மீண்டும் மடிப்பு வைக்கவும். மடித்த ஓரங்களை முதலில் தைத்துக் முடிக்கவும்.
இப்போது முதலில் தைத்த தையலுக்கு கீழ் கால் இன்ச் குறைவாக இடைவெளிவிட்டு கீழ் ஒரத்தில் மீண்டும் ஒரு தையல் போடவும். இதேப்போல் சுடிதாரின் பின்பக்கத்தின் அடிப்பகுதியை தைத்து முடிக்கவும்.
இனி சுடிதாரின் சைடு ஓபன்களை தைக்க வேண்டும். முன்பக்க சைடு ஒபனை 1/2 இன்ச் அளவு ஒரு மடக்கவும். மீண்டும் ஒரு மடிப்பு வைக்கவும். மடித்த ஓரங்களை முதலில் தைத்துக் கொண்டே வரவும்.
சைடு ஓபன் ஆரம்பிக்கும் இடம் வந்ததும் துணியை அப்படியே திருப்பிக் கொண்டு பின்பக்க சைடு ஒபனை இதேப்போல் தைத்து முடிக்கவும்.
படத்தில் உள்ளது போல் சைடு ஒபனை இவ்வாறு தைத்து முடிக்கவும்.
சுடிதார் டாப் ரெடி. அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் தான் கற்றுக்கொண்ட சுடிதார் தைக்கும்முறையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஃபைனல் ஃபினிஷ் சூப்பர். கண்டிப்பா ஊருக்கு போனதும் முதல் வேலை சுடிதார் தைக்குறது தான் :) கலக்கிட்டீங்க. ரொம்ப ரொம்ப பயனுள்ள வேலை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் தரணும்ன்னு இருந்தேன். நீங்க முந்தீட்டீங்க. ரொம்ப அழகா இருக்கு.
ரொம்ப தெளிவா இருக்கு.ஒரே ஒரு குறை தான். புது அளவு கணக்கிடும்/எடுக்கும் முறை சொல்லி இருந்தா இன்னும் சூப்பர் இருந்து இருக்கும் . இவளோ பெரிய வேலைய ஈசி ஹா சொல்லி இருக்கீங்க. சூப்பர் அண்ணி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு செண்பகா..
அழகா தெளிவா இருக்குங்க..
ஒரு வேண்டுகோள்..எப்படி அளவு எடுக்கிறது? எப்படி வெட்டறதுன்னும் விளக்கினீங்கன்னா என்னபோல பிகினர்ஸ் கத்துக்குவோம்.. செய்ய முடியுமா?
அன்புடன்,
கவிதா.

anbe sivam

கலக்கிட்டீங்க. சூப்பரா இருக்கு சுடிதாரும் குறிப்பும்.

‍- இமா க்றிஸ்

பயனுள்ள தகவல். எப்பொழுதும் போல விளக்கம் அருமை! இது ஆராம்பம் தானே? இனி தையலில் தொடர் குறிப்புகளை எதிர்ப்பார்க்கலாம் தானே?

சுகி,

என்ன அவசரம்? சொல்லிகொடுப்பபாங்க....பொறுமையா இருக்கனும்...சரியா இப்படி கேள்வி எல்லாம் கேட்டு அவங்களையும் அவசரப் படுத்தக் கூடாது ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப அழகா இருக்கு செண்பகா. எவ்ளோ பெரிய ஒர்க்.. இவ்ளோ சிம்பிளா சொல்லி முடிச்சுட்டீங்க... பாப்பா எப்படி இருக்கா?

எனக்கு ஒரு டவுட்.. என்னோட டாப் ல முன்பக்கம் தேவையில்லாம ஒரு ஹார்ட் ஷேப் ல ஓபன்இருக்கு. அதாவது ரவுண்ட் நெக் அதுல 1செமீக்கு கீழ ஒரு டிசைன். எனக்கு அது இருக்கறதுனால அந்த டாப் போடவே கஷ்டமா இருக்கு. அது ரொம்ப லோ நெக் மாதிரி இருக்கு.. இதுக்கு என்ன பண்றது. அந்த குறிப்பிட்ட டிசைன் மட்டும் எப்படி கவர் பண்றது. இதுக்கு எதாவது ஐடியா சொல்லுங்கப்பா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

செண்பகா....... அருமையா இருக்கு உங்களுடைய விளக்கக் குறிப்பு. சுடிதார் கலர் சூப்பரா இருக்கு. நானும் இந்த முறையில் தான் தைக்கக் கற்றுக்கொண்டேன்.
வாழ்த்துக்கள்..........

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ungal stiching super senbaga babu

அதுக்கு உள்பக்கமா மாட்சிங்கா லேஸ், நெட், ஜார்ஜட், ஆர்கன்ஸா ஏதாச்சும் வைச்சு கவர் பண்ணி கையால தைச்சுக்கங்க. ஒப்பன் ஹார்ட் க்ளோஸ்ட் ஹார்ட்டா மாறிரும். மாட்சிங்கா துணி எதுவும் கிடைக்காட்டா அதே சுடில லைனிங் இருந்தா கொஞ்சமா வெட்டி எடுத்துக்கலாம். அதுவும் இல்லையா.... துப்பட்டால ஒரு சைட்ல நறுக்கி எடுத்துருங்க. துணியை சுருக்கி வைச்சு கூட தைச்சுக்கலாம், அழகா இருக்கும்.

செண்பகாட்ட கேட்ட கேள்விக்கு ஆர்வக் கோளாறுல நான் பதில் சொல்லிட்டேன். ;) சாரி செண்பகா.

‍- இமா க்றிஸ்

ஹாய் அண்ணி நலமா? அண்ணா , பாபா நலமா? ரொம்ப நாளுக்கு அப்புரம் இந்த பக்கம் வரேன் சுடிதார் ரொம்ப சூப்பர் ... அதுகுள்ள சுடி வந்தாச்சா? வாழ்த்துக்கள் :)

உன்னை போல பிறரையும் நேசி.

ரொம்ப நன்றி இமா. ரொம்ப சீக்கிரம் நன்றி சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க.. இப்போ தான் இந்த பதிவு பாத்தேன்.. நீங்க சொல்றதும் நல்ல ஐடியா தான். லேஸ் மாதிரி வச்சு தச்சுக்கலாம்ல.. அது வெறும் டாப்ஸ் மட்டும் தான் இமா.. அதுக்கு ஷால் இல்லை.. லைனிங் க்ளாத் ம் இல்லை.. மேட்சிங் துணி எதாவது வச்சு தச்சு டிசைன் பண்ணிக்கலாமா சரியா வருமானு யோசிச்சேன்... அதான் அறுசுவை எக்ஸ்பர்ட் நிறைய இருக்காங்க. அவுங்க கிட்ட ஐடியா கேக்கலாம்னு கேட்டேன்.. பாத்தீங்களா எவ்ளொ சொல்லிருக்கீங்க.. எனக்கு இவ்ளோ தோணலையே... அதான் எக்ஸ்பர்ட்.. தேங்கஸ் இமா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

;) யாருப்பா அது "டிஃபிகல்ட்டி லெவல்", "ஈஸி"ன்னு போட்டது!! ;)
செண்பகாவுக்கு ஈஸின்னா எல்லாருக்கும் ஈஸியா இருந்துருமா! ;)

‍- இமா க்றிஸ்

pls lining chudithar thaika solli thangapa. en sisterku gift pannanum. pls.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

அருமையான விளக்கமுறை. நன்றி. இதேபோல் ஆண்கள் அரை கை சட்டை வெட்டும் முறை பற்றிய குறிப்புகள் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

அக்கா அருமையாக தெளிவாக சொல்லி கொடுத்துருக்கீங்க.ரொம்ப நன்றி அக்கா. ..எனக்கு தைக்க ஆசை ஆனால் வெளியில் போய் கற்றுக்கொள்ள முடியவில்லை. ..

அறுசுவைக்கு புதியவள் நான். .. அக்கா ஜாக்கெட் தைக்கவும் தெரிந்தால் சொல்லி தாருங்களேன்.லைனீங் சுடிதார் எப்படி ன்னு சொன்னால் எங்களை போன்ற தோழிகளுக்கு உபயோகமாக இருக்கும். .

அன்பு தோழி. தேவி

HI How to cut and stitching in blouse please tell about easy way

ப்ரின்ஸ் கட் ப்ளொஸ் எப்படி அலவு எடுத்து வெட்டுவது

dont cry because its over smile because it happened