சுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை

தேதி: February 27, 2012

4
Average: 4 (7 votes)

 

அளவு சுடிதாரின் பேண்ட்
பேண்ட் துணி
கத்தரிக்கோல்
சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ்
தையல் மிஷின்
நூல்
இன்ச் டேப்

 

சுடிதார் பேண்ட் தைப்பதற்கு தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் அளவு சுடிதார் பேண்ட்டின் கால் உயரத்தை அளக்கவும். உயரத்தை அளக்கும் போது இன்ச் டேப்பின் ஸ்டீல் பகுதியை விட்டுட்டு அளக்கவும். இதில் உயரம் 34 இன்ச் உள்ளது. அதனுடன் ஒரு இன்ச் கூட்டவும்.
பேண்ட்டின் வயிறு பகுதிக்கு கீழ் இருப்பக்கமும் ஃப்ரில் வைத்து தைத்திருக்கும் நடுப்பகுதியை அளக்கவும். இவற்றிற்கும் ஸ்டீல் பகுதியை விட்டுட்டு அளக்கவும். 6 1/2 இன்ச் என்றால் ஒரு இன்ச் கூட்டவும்.
அடுத்து தொடைப்பகுதியை அளக்க வேண்டும். இம்முறை அளக்கும்போது ஸ்டீல் பகுதியுடன் சேர்த்து அளக்கவும். தொடை அளவு 18 இன்ச் என்றால் அதனுடன் ஒரு இன்ச் சேர்த்துக் கொள்ளவும்.
காலின் அடிப்பகுதிக்கு 8 1/2 இன்ச் என்றால் ஒரு இன்ச் கூட்டவும்.
சுடிதார் பேண்ட்டின் கால்பகுதிக்கு மேலுள்ள வயிறு பகுதியை அளக்க வேண்டும். முதலில் வயிறு பகுதியில் உள்ள அகலம் 23 1/2 அதனுடன் ஒரு இன்ச் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து வயிறு பகுதியில் உள்ள உயரம் 10 இன்ச் என்றால் 1 1/2 இன்ச் கூட்டவும். இனி சுடிதார் பேண்ட் துணியில் இந்த அளவுகள் எல்லாவற்றையும் குறிக்க வேண்டும்.
<b> சுடிதார் பேண்ட் துணியில் வெட்டும் முறை : </b> சுடிதார் பேண்ட் துணியை நீளவாக்கில் இரண்டாக மடித்து, அடியில் உள்ள முனையை மேல்நோக்கி மடிக்கவும். இந்த துணியின் கரை உள்ள பக்கத்தை உங்களிடம் இருப்பது போல் வைக்கவும். கரை உள்ள பக்கத்திலிருந்து அளந்து வைத்துள்ள பேண்ட்டின் உயரத்தை 35 இன்ச் என்று குறிக்கவும்.
அடுத்து பேண்ட் துணியின் மேல் ஓரத்திலிருந்து இன்ச் டேப்பை வைத்து தொடை அளவு 19 இன்ச் அளவை குறிக்கவும்.
கால் உயரத்துக்கு கீழ் காலின் அடிப்பகுதி அளவை 9 1/2 இன்ச் என்று குறிக்கவும்.
அடுத்து தொடை அளவு முடிந்த இடத்தில், பேண்ட் ஃப்ரில் வைத்த நடுப்பகுதி அளவு 7 1/2 இன்ச் குறிக்கவும்.
காலின் அடிப்பகுதி அளவிலிருந்து, நடுப்பகுதி அளவு வரை படத்தில் உள்ளது போல் ஒரு வளைவு வரைந்து அதனை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள பேண்ட் துணியில் வயிற்று பகுதியின் உயரம், அகலம் அளவை அளந்து குறித்துக் கொள்ளவும். பின்னர் அவற்றையும் தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
காலின் அடிப்பகுதி வெட்டிய பிறகு அதற்கு கீழுள்ள துணியை பட்டி தைப்பதற்காக காலின் அடிப்பகுதி அளவுக்கு சிறிய துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது வெட்டின கால்பகுதிக்கான துணி தனித்தனியாக இருக்கும்.
வயிறுப்பகுதிக்கான துணியை இவ்வாறு தனித்தனியாக மடித்து வைக்கும் போது ஒரு பக்கமுனை மட்டும் மடித்து வைத்தது போல் இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்