சுடிதார் பேண்ட் தைக்கும் முறை

தேதி: February 27, 2012

5
Average: 4.3 (15 votes)

 

அளவு சுடிதாரின் பேண்ட்
பேண்ட் துணி
கத்தரிக்கோல்
சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ்
தையல் மிஷின்
நூல்
இன்ச் டேப்

 

வெட்டிவைத்துள்ள பேண்ட் துணியை தைப்பதற்கு தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் வயறுப்பகுதிக்கான இரு துணியையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். அதில் ஒரு பகுதியின் ஓரத்தை மட்டும் கால் இன்ச் தள்ளி தையல் போட்டு முடிக்கவும்.
அடுத்த பகுதியை தைக்க ஆரம்பிக்கும்போது இரு துணிகளின் ஒரத்தை தனிதனியாக ஒரு மடிப்பு வைத்து மீண்டும் மடித்து படத்தில் கோடிட்டு காட்டியது போல் குறுக்கே தையல் போடவும். இந்த தையலை போட்ட பின்னர் அதன் கீழ் ஓரங்கள் இரண்டையும் சேர்த்து தைக்கவும்.
இதனை தைத்து முடித்த பின்புதான் நாடா கோர்ப்பதற்கான பகுதியை தைக்க வேண்டும். வயிறுப்பகுதிக்கான மேல்பக்கத்துணியை ஒரு இன்ச் அளவு மடக்கி ஓரத்தை தைக்கவும்.
இப்போது நாடா கோர்ப்பதற்கான வயிற்று பகுதி தயார்.
அடுத்து கால்பகுதிக்கான பட்டியை வைத்து தைக்க ஆரம்பிக்கவும். முதலில் கால்பகுதிக்கான அடிப்பகுதியை நல்ல பக்கத்தில் வைத்து, அதன் மேல் பட்டி துணியை திருப்பி வைத்து ஓரத்தை முதலில் தைக்கவும்.
பிறகு கால்பகுதியை திருப்பி வைக்கவும். பட்டி துணியின் முனையை கால் இன்ச் அளவு உள்நோக்கி மடித்து கால்பகுதி துணியுடன் சேர்த்து வைத்து தையல் போட்டு முடிக்கவும்.
இப்போது கால்பகுதியை நல்லபக்கத்திற்கு திருப்பி பட்டி தைத்த பகுதியை பார்க்கும்போது ஒரு தையல் போட்டது போல் இருக்கும். முதலில் உள்ள தையலுக்கு கீழ் மீண்டும் ஒரு தையல் போட்டு முடிக்கவும். இதேப்போல் மற்றொரு கால்பகுதிக்கான பட்டித்துணியையும் தைத்து வைக்கவும்.
கால் அடிப்பகுதிலிருந்து தொடைப்பகுதி வரை உள்ள ஓரங்களை தைக்கவும். மற்றொரு கால்பகுதிக்கான துணியை தைத்து முடிக்கவும்.
இப்போது பேண்ட்டின் நடுப்பகுதி அளவு தைக்கப்படாமல் இருக்கும். தைத்து வைத்திருக்கும் பேண்ட் துணியின் இரு பகுதிகளை படத்தில் உள்ளது போல் பிரித்து வைத்து ஓரங்களை தைக்கவும்.
கால்பகுதியின் முன், பின் இரண்டு பகுதியிலும் ஃப்ரில் வைத்து தைக்க வேண்டும். முதலில் முன்பக்க கால்பகுதி துணியில் ஒரொரு ஃப்ரில்லாக மடக்கி மடக்கி தைத்து கொண்டே வரவும். ஒரு 10 ஃப்ரில் தைத்து முடித்ததும் சாதாரணமாக தையல் போட்டு கொண்டே பின்பக்க கால்பகுதிக்கு வரவும். முதலில் தைத்த ஃப்ரிலுக்கு நேராக பின்பக்கத்திலும் ஃப்ரில் வைத்து தைக்கவும்.
இப்போது வயிறுப்பகுதிக்கான துணியையும், ஃப்ரில் வைத்து தைத்த கால்பகுதிக்கான துணியை நல்ல பக்கத்திற்கு திருப்பி வைக்கவும். ஸ்ப்ரில் வைத்து தைத்த கால்பகுதி துணி, வயிற்றுப்பகுதி துணியை விட அதிகமாக இருந்தால் இன்னும் கூடுதலாக இருபக்கங்களிலும் ஃப்ரில் வைத்து தைத்துக்கொள்ளவும்.
தைத்து வைத்துள்ள வயிற்றுப்பகுதிக்கான துணியை தலைக்கீழாக திருப்பி, அதனுள் கால்பகுதியை நுழைத்து வைக்கவும் (படத்தில் உள்ளது போல்).
மேலே சொன்னவாறு துணியை திருப்பி வைத்து ஒரு இன்ச் தள்ளி சுற்றிலும் இரண்டு தையல் போட்டு முடிக்கவும்.
சுடிதார் பேண்ட் ரெடி. அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் தான் கற்றுக்கொண்ட சுடிதார் தைக்கும்முறையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அண்ணி,

இவளோ சீக்கரம் பேன்ட் வரும்ன்னு நினைக்கல. அழகா பண்ணி காட்டி இருக்கீங்க. இன்னும் நிறையா வகையா பண்ணி காட்டுங்க. வாழ்த்துக்கள் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுடிதார் டாப் மற்றும் பேன்ட் ரொம்ப நல்ல தைத்து இருக்கீங்க.

பொதுவாக மகளிர் அணியும் பிளவ்ஸ் கட்டிங் தெளிவாக யாராவது சொல்லுங்களேன்.வீட்டிலிருந்து கொண்டு செய்ய கூடிய சிறு சிறு இன்டர்நெட் ஆன்லைன் வேலைகளுக்கு என்னை தொடர்பு கொள்ளவும்.நன்றி.

ரொம்ப நன்றி செண்பகா மேடம்...... ஈஸியா சுடிதார் தைக்க சொல்லி கொடுத்து இருக்கீங்க... கண்டிப்பா ட்ரை பண்ணுவேன்.... ரொம்ப நல்ல குறிப்பு வெளியிட்ட அறுசுவைக்கும் நன்றி....

ஹலோ அக்கா ரொம்ப நல்லா படத்தோட சொன்னிங்க நானும் தைத்து பார்த்தேன் ரொம்ப தேங்க்ஸ் அக்கா. இது மாதிரி பிளவ்ஸ்
தைக்க சொல்லித்தாங்க அக்கா, கொஞ்ச வசதியா இருக்கும். இன்னும் கொஞ்ச டிசைன் சுடிதார்ல சொல்லி தாங்க அக்கா ப்ளீஸ்.

மகளிர் அணியும் பிளவ்ஸ் கட்டிங் சொல்லி கொடுங்கலலேன்.

ரொம்ப‌ உதவியாக‌ இருக்கும்..

bayanullatthaga ulathu.blouse epadi thaipathu endrum soli thaarungal.

இன்டர்நெட் ஆன்லைன் வேலைக்கு சொல்லிருதீங்கள‌....அத பத்தி கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ ப்ளீஸ்....

All is Well