பாசி பயறு பொடி

ஹலோ தோழிகளே!!!!

பாசி பயறு பொடியை முகத்திற்கு பூசலாமா?

எப்படி உபயோகிப்பது?

அதனால் என்ன பலன் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்...

நன்றி.

பாசி பயறு மாவு ரொம்ப ரொம்ப நல்லது.. அதை முகத்திற்கு மட்டும் அல்லாமல் உடம்புக்கும், தலைக்கும் கூட தேய்க்கலாம்.. பட்டு போல மென்மையான சருமம் கிடைக்கும்.. நீங்க டெய்லி இந்த மாவு உபயோகிக்கலாம்..

"எல்லாம் நன்மைக்கே"

ரொம்ப நன்றி packialakshmi....

மாவோடு என்ன கலந்து உபயோகிப்பது?

பாசி பயறை தனியாகவே அரைத்து உபயோகப்படுத்தலாம்.. நீங்க தலைக்கு மட்டும் தேவை என்றால் வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்..

"எல்லாம் நன்மைக்கே"

ஒரு கிலோ பாசிப்பருபுக்கு ஒரு முட்டை {முட்டையின் வெள்ளைகருவை)கலந்து வெயிலில் காய வைக்கவும்.நன்கு காய்ந்தபின் அறைத்துக்கொள்ளவும்.இதனை முகத்தில் போடலாம்.

பாசிப்பயரோடு கடலைபருப்பு,ஆவாரம்பூ,இலை,கஸ்தூரி மஞ்சள்,இவை எல்லாம் சேர்த்து வெயிலில் காய வைத்து அரைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொண்டு குளிக்கப் போகும் போது 3 ஸ்பூன் அளவு எடுத்து உடம்பில் தேய்த்து குளிக்கலாம்.

என்ன பலன் நு கேட்டிருக்கிங்க மகா உடல்,முகம் நல்லா ஷைனிங்கா வரும் இது மாதிரி எங்க அம்மா வெளி நாடு கிளம்பும் போது அரைத்து தருவாங்க நானும் பயன் படுத்துவேன் என் பொன்னுக்கும் பயன் படுத்துவேன் அவங்க 1 வருஷத்துக்கு தக்கென அரைத்து தருவாங்க பா...தோல் நோய்கள் எதுவுமே அண்டாது...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ரொம்ப நன்றி!!!

packialakshmi,parveen,kavitha.....

மேலும் சில பதிவுகள்