அனடாமிக் தெரபி பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

தோழிகளே உங்களுக்கு அனடாமிக் தெரபி பற்றி தெரியுமா? இது இப்போதைய நடைமுறைக்கு சாத்தியமா?செவி வழி சிகிச்சை என்கிறார்கள் இதனால் பலன் அடைந்தவர்கள் யாராவது இருக்கின்றிர்கலா இந்த சிகிச்சையின் மூலம் பலன் அடைந்தவர்கள் யாராவது இருந்தால் தயவு செய்து இங்கே வந்து உங்க பதிவ போட்டுட்டு போங்க ப்ளீஸ்

வாங்க கவிதா. எப்படி இருக்கீங்க? நானும் 2 நாள் முன் தான் தெரிஞ்சுகிட்டேன். இதுக்கு ஒரு பைசா செலவு இல்ல. அதுனால அவர் சொன்ன ஐடியா கொஞ்சம் பாலோ பண்ணலாமேன்னு 2 நாளா நானும் ஹஸ் ம் பாலோ பண்றோம். அவர் சொல்ற எல்லா கருத்துமே நம்புற மாதிரி தான் இருக்கு. நீங்க கேட்டு இருக்கிங்களா? ஹோமியோபதி மாதிரி கொஞ்சம் லேட் ஆகும்னு நினைக்கிறேன். 1-3மாதம் பாலோ பண்ணினாதான் ரிசல்ட் தெரியும். 2 நாள் பாலோ பண்ணியதில் முட்டிவலி இல்லை. நண்பர் ஒருத்தர் இதேமுறை பின்பற்றி தொண்ணூறில் இருந்து எழுபது கிலோவாக மாறி இருக்கிறார். அவர் சொல்லித்தான் நாங்களும் பாலோ பண்றோம்.

அது ஒன்னும் பேரை கேட்டு பயந்துட வேண்டாம்..நம் வாழ்க்கை முறையை எப்படி சரியா அமைச்சுக்கறது என்பது தான்.இப்போ ஏனோ தானோன்னு இருக்கோம் அவர் சரியா சொல்லி தந்தபடி ஒழுங்கா சாப்பிட்டு தூங்கி குளிச்சு இருந்துட்டா நோய் நொடியில்லாமல் இருக்கலாம்..எனக்கும் இதில் ரொம்ப நம்பிக்கை உண்டு.2 வாரம் தொடர்ந்து வந்தாலே உடம்பெல்லாம் பறக்கிற மாதிரி லேசா ஆகிடும்

தளிகா.... இது என்ன தெரபி பா..... அவர்.. அவர்ன்னு சொல்றீங்க... யார் அந்த அவர்? இந்த தெரபி பத்தி கொஞ்சம் விளக்கமா சொன்னா நாங்களும் தெரிந்து கொள்வோம்.....

இதே ஆங்கில தலைப்பை கூகிலில் சென்னை’னு சேர்த்து தேடுங்க. பாஸ்கர் என ஒருவர் பற்றி தகவல் வரும். அவரை பற்றி தான் எல்லாரும் சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்