பேப்பர் சர்வியட் ஃபோல்டிங்ஸ் பாகம் - 2

தேதி: March 1, 2012

5
Average: 4.9 (7 votes)

 

நான்காக மடிக்கப்பட்டு வரும் பேப்பர் சர்வியட்கள் மட்டும்தான்

 

<b>Bishop’s Crown: </b> முதலாவது மடிப்பைப் பிரித்து வைத்து, அதன் நீளவாட்டாக மெல்லிய நீள்சதுரம் ஒன்று வருவதுபோல் மடிக்க வேண்டும்.
ஒரு பாதியை நடுக்கோட்டுடன் சேர்த்து சரித்து மடிக்கவும்.
மறுபக்கமும் இப்படியே மடிக்கவும்.
முக்கோணத்துக்கு மேலதிகமாக இருக்கும் பகுதியை பின்புறம் மடித்துவிடவும்.
இதேபோல் மறுபக்கமும் மடிக்கவும்.
நடுவில் தெரியும் மடிப்பு வழியே மீண்டும் இரண்டாக மடித்துக்கொள்ளவும். இப்போ இரண்டு முக்கோணங்களின் நடுவே சதுரமாக ஒரு பகுதி தெரியும்.
சதுரக் கடதாசிகள் அனைத்தையும் ஒன்றாகப் பிடித்து ஏதாவது ஒரு பக்கமாக மடித்து வைக்கவும்.
இரு முக்கோணத்தினுள் ஏதாவது ஒன்றில் இந்த சதுர கடதாசியை சொருகி விடவும்.
அடியிலுள்ள மடிப்பை மெதுவாக விரித்து விட்டால் மேசையில் விழாமல் வைக்கலாம்.
<b>மற்றொரு சுலபமான செய்முறை</b> சர்வியட்டை முழுவதாகப் பிரித்து நடுவில் மட்டும் சேர்த்தாற்போல் பிடிக்கவும்.
இதனை அப்படியே க்ளாசில் சொருகிவிடலாம். மிக அழகாக இருக்கும்.
மிகவும் எளிமையாக செய்யக்கூடிய பேப்பர் சர்வியட் ஃபோல்டிங்ஸ் ரெடி. இது உணவு பரிமாறுதல் தொடர்பான கைவினை என்பதால் பயன்படுத்தப் போகிறவர்கள் நலன்கருதி கைகள், வேலை செய்யும் மேற்பரப்பு போன்றவற்றை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பேப்பர் சர்வியட் போல்டிங்ஸ் மாடல் எல்லாமே ரொம்ப ஈஸியா இருக்கு. சாதாரண நீயூஸ் பேப்பரில் தான் இப்ப செய்து பார்த்தேன் நன்றாக வந்ததது. விசிறி, கீரிடம் டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்மா.

Imma இதுவரைக்கும் யாரும் தந்ததே இல்லை..இமா தராட்டி தெரிஞ்சிருக்காது..;யூ ஆர் க்ரேட்

ரொம்ப சூப்பர் இமா அக்கா

Jaleelakamal

சூப்பர்... பார்த்ததும் நீங்க தான்னு கண்டு பிடிச்சுட்டேனே ;) எனக்கு இதில் 3 வகை தான் தெரியும்... எங்கையாது ஹோட்டல், ரெஸ்டாரண்ட் போகும் போது ஃபோல்ட் செய்திருப்பதை பார்த்தா பிரிச்சு திரும்ப மடிச்சு பார்ப்பேன்... இல்லன்னா வீட்டுக்கு பார்ட்டி நேரத்தில் செர்வ் பண்ண வருபவர்கள் செய்து வைப்பார்கள்.... அப்படி கத்துகிட்டது தான். ஒரு முறை கொடைகானலில் ஹோட்டல் ரூமில் ஒரு சின்ன டவலை யானை போல ஃபோல்ட் செய்து வெச்சிருந்தாங்க. கியூட் இமாஜினேஷன்ஸ். நீங்க செலக்ட் செய்திருக்க ஒவ்வொரு கலரும் சூப்பர். போட்டோஸ் வழக்கம் போல் ”நான் இமாவுடையது” என சொல்லும்படி பளிச் பளிச்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா சூப்பர் சர்வியட் நான் இதுலாம் இப்ப தான் பார்க்கறேன். ரொம்ப அழகா செய்திருக்கீங்க. எனக்கும் செய்து பார்க்கனும் போல இருக்கு விளக்கம் அவ்வளவு எளிமை. அதில் எனக்கு அந்த வெள்ளையில் பச்சை புள்ளி வைத்தது தான் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. செம க்யூட்.

அன்பு இமா,

அழகா இருக்கு, அருமையாக இருக்கு. இதெல்லாம் நாமும் செய்து பார்க்கணும்னு ஆசையாகவும் இருக்கு.

தாங்க்யூ இமா

அன்புடன்

சீதாலஷ்மி

கருத்துகள் விட்டுச் சென்ற வினோஜா, தளீ, வனி, ஜலீ, யாழினி & சீதாலக்ஷ்மி... மிக்க நன்றி. ;)
அத்துடன்... இங்கும், முதலாவது பகுதியிலும் ரேட்டிங் கொடுத்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்