இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் போதுமா?

ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் என்றால்,
1. இப்போது உள்ள சூழ்நிலையில் ஒரு குழந்ந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர முடியுமா?
2. ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டு, படிக்கவே இயலாத ஏழை குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்யலமா?
3. அல்லது ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் நம் குழந்தை பிற்காலத்தில் உறவுகள் இல்லாமல் கஷ்டப்படுமா?
4. சிரு குழந்தைக்கு விளையாட துணை இல்லாமல் வேதனைப் படுமா அல்லது பிடிவாதக்காரர்களாக மாறி விடுமா?
என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

கேள்விய தமிழில் கேட்டுட்டு தலைப்பை ஆங்கிலத்தில் போடலாமா? அதை தமிழில் மாற்றுங்கள். அப்போதுதான் பதில் வரும்.

Thank you. I change it in tamil.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

தலைப்பை மாற்றிட்டீங்க நன்றி. இந்த லிங்க் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/5663. உங்க மற்ற கேள்விக்களுக்கு தோழிகள் வந்து பதில் சொல்வார்கள்.

எத்தனை காலம் ஆனாலும் என்ன கலாச்சாரம் மாறினாலும் இரண்டு அல்லது அதற்கும் மேல கூட இருக்கலாம்.ஒன்று என்பது அவர்களுக்கே பின்னாளில் யாருமில்லாத நிலை போல ஆகிவிடும்..இன்று சொந்தபந்தங்களும் முன்பு போல் இல்லை அவரவருக்கு அவரவர் வேலை என்றாகிவிட்ட காலம் இதில் உடன்பிறப்பும் இல்லையென்றால் கஷ்டம் தான்

இரண்டு குழந்தைகள் கண்டிப்பாக வேண்டும் .ஒத்த புள்ளையா பிறந்து வளர்ந்ததுனால சொல்றேன்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கண்டிப்பாக இரண்டு வேண்டும். இப்பொழுதெல்லாம் கூட்டுகுடும்பம் இல்லை. அதுவும் வெளிநாட்டில் வாசம். அதனால் சொந்தக்காரங்கலையே போட்டோவில் தான் பார்க்க வேண்டிய சூழ்நிலை. அப்படியிருக்கும் போது இரண்டு குழந்தைகலாகவது இருந்தால் நல்லது.

என்னங்க வசதி அவர்களுக்கு நாம் ஏற்ப்படுத்திக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்று சொல்லுங்கள் பார்ப்போம். முன் காலத்தை விட இப்பொழுது அனைவரின் பொருளாதார மட்டமும் உயர்ந்து தான் உள்ளது. கணக்கெடுப்பின் படி ஒரு இந்தியரின் சராசரி வருமானம் அமெரிக்கனின் சராசரி வருமானத்தை விட அதிகமாம். முன்பெல்லாம் வீடு கட்ட பணம் சேர்த்து வைப்பார்கள். எப்போழுதேல்லாம் அப்படியா நினைத்தவுடன் லோன் எடுத்து வீடு. எதற்க்காக பாங்குல லோன் கொடுக்க இப்படி நம்பலை தொரதுறாங்க, தங்கம் விலை உயர்ந்துக் கொண்டே தான் இருக்கு ஆனால் நகைக்கடையில் கூட்டம் அலைமோதுது. பொருளாதாரம் என்றெல்லாம் காரணம் சொன்னால் அது சரியாகாது. இரண்டு குழந்தைக்கு பிறகுமே மற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவி நம்பளால் செய்ய முடியும்.

இது என் தனிப்பட்ட கருத்து மட்டும் தான்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கும் இரண்டு குழந்தை பெற்று கொள்ளவே விருப்பம், ஆனால் பொருளதார சூழ்நிலை காரணமாகவும், வேலைக்கு போவதாலும் நிறைய சங்கடங்கள் உள்ளது. எனக்கு மாமியார் இல்லை. என் முதல் குழந்தையை பார்த்துக் கொள்ளவே கிரெச் இல்லாமல் அம்மாவை கூட்டி வந்திருக்கிறேன். இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டால் நான் எப்படி பார்த்துக் கொள்வது சொல்லுங்கள்.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

லாவண்யா அத்து.நான் மனசில் நினைத்ததை சரியா சொலிட்டீங்க.தாமரை வளர்க்க என்றால் அது ஒரு மூன்றோ நாலோ வருட கஷ்டம் தான் அதற்குள் பக்குவம் வந்துடும் அதுவே பின்னாளில் வருஷக்கணக்கா அந்த பிள்ளைகள் ஏங்கிகிட்டிருக்கும் ..உண்மையை சொல்ல போனால் இரண்டு கூட எதோ ஒண்ணு எக்ஸ்ட்ரா என்பதற்காக தான்;-) ஒரு நாலு ஐந்து குழந்தைகளை பெற்று வளர்த்தால் பின்னாடி குடும்பம் ஜாம் ஜாம்னு இருக்கும்

நான் மனசில் நினைத்ததை சொல்கிறேன். எனக்கு 3 பிள்ளைகள் பெற்று கொள்ள ஆசை.அப்போதான் வீடு ஜாம் ஜாம்னு இருக்கும்.but my badluck இன்னும் கொடுத்து வைக்கவில்லை.i agree with u thalika

இன்றைய சூழ்நிலையில் கண்டிப்பாக இரண்டு குழந்தைகள் தேவைதான். ஒரு குழந்தையாக வளரும்போது அந்தக் குழந்தைக்கு பிடிவாதமும், தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வெறியும், அதனால் பெற்றோர்கள் மேல் ஆத்திரமும் ஏற்படுவதைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

//ஒரு நாலு ஐந்து குழந்தைகளை பெற்று வளர்த்தால் பின்னாடி குடும்பம் ஜாம் ஜாம்னு இருக்கும்//
எனக்கு நான்கு குழந்தைகள். எல்லாரும் ஒன்று சேரும்போது சந்தோஷமாக இருக்கும். அவர்களும் ரொம்பவே எஞ்சாய் பண்ணுவார்கள். இரண்டு பேர் வெளிநாட்டில் இருந்தாலும் வரும்போது ஒரே நேரம் வருவார்கள்! ஒரே கும்மாளமும், குதூகலமுமாக வீடு இரண்டுபடும்! தளிகா சொல்வது போல் அதுவும் ஒரு மகிழ்ச்சிதான்! ஆனால் இந்தக் காலத்துக்கு அட்லீஸ்ட் இரண்டு கண்டிப்பாக தேவை.

மேலும் சில பதிவுகள்