எனக்கு திருமனமாகி 10மாதம் ஆகுது,எனக்கு period வந்துவிட்டால் என் மாமியார் ஒதுக்கி வைக்ராங்க,எதயும் தொட விட மாட்றாங்க அது கூட பரவால,என் புருஷன தொட விட மாட்றாங்க ,நான் அவரோட எஙகயாவது பொய்ட்டு வந்தா உடனே அவர் எதயும் தொடமா குளிக்க போகனும்,எனக்கு சாப்பாடு தனியா வச்சிடுவாங்க,இதனால ரொம்ப அசிஙகபட்றேன் வீடுக்கு வர எல்லாருக்குமே தெரிங்ஜிடுது,எங்க அம்மா வீட்ல இபடி இல்ல,இதனைக்கும் நான் bramin கிடயாது
இதுக்கு ஒரே வழி நான் கர்ப்பம் தரிக்கனும் ஏதாவது வழி இருந்தா சொல்லுஙக ,,,நான் கடைசி மூன்ரு மாதமாக சிகிச்சை எடுக்கறென்,தினமும் folic acid 5mg மாத்திரை சாபிடுகிறென்.pls help me anybody
karps
அய்ய...இதுகேல்லமா feel பண்ணுவாங்க...எதையும் தொட விடல்லன்னா ஜாலி யா ஓரமா ஒதுங்கி நிம்மதியா ரெஸ்ட் எடுங்க...எங்க அம்மாவும் பாட்டியும் தான் இப்டில்லாம் சொல்லுவாங்க...அங்கேயே நம்ம கேக்க மாட்டோம்.என்னை பார்த்து எங்க அம்மாவும் இப்போ ப்ரீ யா இருக்க ஆரம்பிச்சுட்டங்க...பாருங்க உங்க மாமியாரே உங்களுக்கு சாப்பாடு செஞ்சு வக்குறாங்க...என்ஜாய் ....
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
hi
ரொம்ப டார்ச்செர் பன்ராங்க பா ,இந்த கஷ்டத யார்கிடயும் சொல்ல முடியாம வேதன பட்ரென்
karps
என்னங்க இதுகெல்லாம் ஃபீல் பன்ரீங்க. எஞ்சாய் பன்னுங்க ஒரு வேலையும் இல்ல நல்லா ரெஸ்ட் எடுக்கலாம் தூங்கலாம் சமயலும் அவங்களே செய்துடராங்க அப்படின்னா நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க அந்த நாள்ல உள்ள வலியும் வேதனையும் ஒரு பொன்னுக்கு தாண் தெரியும் நல்லா ரெஸ்ட் எடுப்பீங்களா இதுக்கு போய் ஃபீலிங்
அன்புடன்
ஸ்ரீ
sri mam
என் புருஷன தொட கூடாதுனு சொல்ராஙகலெ அத தாங்கவே முடில,பாப்பா இல்லனு குத்தி காமிச்சிடே இருகாங்க,எனக்ககா யாராவது ப்ரார்த்தனை பன்னுஙக ,
karps
இப்போ என்ன பண்ணலாம்...மாமியார் கூட சண்டை போடலாமா????
பேச விடுரங்கல்ல...தொட தான கூடாது...இதெல்லாம் பெருசு பண்ணாதீங்க...வயசானவங்க கொஞ்சம் அப்டி இப்டி தான் இருப்பாங்க...மத்தபடி உங்ககிட்ட நல்லா பழகுனங்கன்னா நீங்க கொஞ்சம் விட்டு கொடுத்து போய்டுங்க...என்ன பண்றது... உங்களுக்கு ரெம்ப wounding கா இருந்ததுன்னா உங்க hubs கிட்ட நாசூக்கா சொல்லி பாருங்க...அவர் reaction படி யோசிச்சு நடங்க... நீங்க இதுக்காகவெல்லாம் பீல் பண்ணாம இருங்க...சீக்கிரம் குட்டி பையனோ பொண்ணோ வந்து உங்க மாமியார நல்லா கவனிக்க சொல்லுவோம்...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
கற்பகம்
அன்பு தோழி... இன்னும் உங்களுக்கு மெசுரிட்டி போதல ;) சின்ன பிள்ளையாவே யோசிக்கறீங்க. அதான் இவ்வளவு வருத்தபடறீங்க. இதில் கவலைபட ஏதுமில்லை. நல்லா ஓய்வு எடுங்க, யாரையும் தொடக்கூடாதுன்னா சரின்னு விடுங்க. உங்க ஹஸும் அப்படி தான் சொல்வாரா??? இல்லன்னா மாமியார் கண்ணில் படாத போது தொட்டு பேசினா ஒன்னும் ஆக போறதில்லையே ;) மாமியாருக்கு தெரியாது தானே. ஹிஹிஹீ.
பிள்ளை பெற்றெடுத்தா இதில் இருந்துலாம் சுதந்திரம் கிடைக்குமா??? 10 மாசம் தான்... அப்பறம்??? பிள்ளை பிறந்ததும்??? பிள்ளையையும் தொட கூடாதுன்னு சொல்வாங்களோ??? இந்த காலத்திலும் இப்படியா??? விடுங்க... வயசானவங்க தானே... நாம சொல்றது அவங்களூக்கு புரியாது... இதுக்காக சண்டை போட்டா அவங்க கோவம் அதிகமாகும், அவரும் வருத்தபடுவார் தானே... அதனால் அவருக்காக விட்டு கொடுத்து போங்க. சரியா??? உங்களுக்காக அந்த நாட்களில் அவங்களே எல்லாம் செய்து கொடுக்கறாங்க தானே... அந்த பாசத்துக்காக விட்டு கொடுங்க. சரியா??? சின்ன பிள்ளையாட்டும் ஃபீல் பண்ன கூடாது இனி... :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hi gomathi mam
நன்றி,சன்டை போட பிடிக்காமல் தான் அமைதியாய் இருகென்.
vanitha mam
நன்றி,உஙக பதிலுக்கு ,தேதி வர பத்து நாலுக்கு முன்னாடியே பயம் வந்துடுது,உஙகல அக்கானு கூபிடலாம ,அவரும் அவஙக அம்மாகு ரொம்ப பயபடுரார்,அவரும் என்ன தீன்டதகாதவர் மாதிரியே பாக்ரார்
hi friends
enaku 4 to 6 powercut so evening oru 7 clock arusuvaiku varuven munja vanga,illana nalaiku 3 pakalam bye friends
i jolly
என்ன மேடம் ஜாலியா இருப்பீங்களா. எனக்கு இப்படி யாராவது சமச்சு தந்தா நல்லா இருக்கும்.
GOD IS LOVE