கர்ப்பமா இருக்கும் போது எப்படி நடந்துக் கொள்வது?????

நான் இப்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு இது முதல் குழந்தை. என் நாத்தனாருக்கு 5 நாட்கள் முன்பு 2வது குழந்தை பிறந்துள்ளது. அவரும் இப்போது வீட்டிற்கு வந்துள்ளார். ஏற்கனவே அவருக்கு 1 வயதில் ஒரு குழந்தை இருக்கிறாள். இப்போது வீட்டில் என்னால் முடிந்த அளவு வேலை செய்திட்டு இருக்கேன். இப்போ இன்னும் வேலை அதிகமா இருக்கு. என் உடம்பையும் நான் பாத்துக்கனும். உதவிக்கு மாமியார் இருக்காங்க. நான் எப்படி நடந்துக்கொள்வது. எந்த மாதிரி இருக்கனும். ப்ளிஸ் சொல்லுங்க...

தோழி யூனுஸ், தாயாகும் உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இங்கே உங்களின் தேவை என்ன என்பதை தெளிவாக சொல்லவில்லை தோழியே. அதிக வேலை என்கிறீர்களா? இந்த சமயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? எதுவாக இருந்தாலும், உங்களால் முடிந்த வேலையை செய்யுங்கள். உங்களுடன் உங்கள் மாமியார் இருப்பதாக சொன்னீர்கள். நிச்சயம் அவருக்கு உங்கள் நிலை நன்றாக தெரியும். ஆகையால் உதவியாக தான் இருப்பார். கூடுமானவரை நீங்களும் உங்கள் நாத்தனாருக்கு முடிந்த அளவிற்கு உதவுங்கள். உங்களுக்கு மாதம் அதிகமாக அதிகமாக அவர்களே வேலைகள் தருவதை குறைத்துக் கொள்வார்கள். தவிர நீங்கள் சீமந்தம் முடித்து தாய் வீட்டு செல்வீர்கள். அங்கே நல்ல ஓய்வு கிடைக்கும். முடிந்த வரை சத்தான ஆகாரமாக உண்டு, மனதை அமைதியாக வைத்திருங்கள். நாத்தனாரின் குழந்தையை பார்க்கும் போது உங்கள் மனமும் சந்தோஷத்தில் குதூகலிக்கும். பெரும்பாலான நேரத்தை குழந்தையோடு செலவிடுங்கள். அவர் குழந்தையை கவனிக்கும் முறையை பார்த்துக் கொள்ளுங்கள். அவை உங்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது இந்த அனுபவங்கள் கைகொடுக்கும்.

குழந்தையை சுமந்திருக்கும் இந்த நேரத்தில் மனதளவில் எந்த பாரத்தையும் கொண்டு செல்லாதீர்கள். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்க பழகுங்கள். அட்லீஸ்ட் டெலிவரி வரைக்குமாவது. மனதை எந்த அளவிற்கு அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், வைத்திருக்கிறீர்களோ அதே அளவு மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் பிறக்கும் குழந்தையும் இருக்கும். இது அனுபவத்தில் கண்ட உண்மை. இப்போது வரும் டிவி சீரியல்கள் பக்கம் தலைவைத்தும் படுக்காதீர்கள் ;( நல்லதே நடக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கள் பதிலுக்கு நன்றி. இது பொது தளம் என்பதால் சில விஷயங்களை சொல்ல முடியவில்லை. நீங்கள் விரும்பினால் என் மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உதவி எனக்கு தேவை. shayasonline@gmail.com

Love is Life Beautiful

அன்பு தோழி ...
தாங்கள் ஏதோ குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது ...தங்களுக்கு வேலை செய்வது மிகவும் கடினமாக இருந்தால் ...எதாவது காரணம் சொல்லி தங்களுடைய அம்மா வீட்டுக்கு சென்று ஓய்வெடுங்கள்..
அதிகமாக வருத்தி கொள்ள வேண்டாம் ...எப்பொழுதும் சந்தோசமாக இருங்கள் ...தாங்கள் விரும்பும் சூழ்நிலையில் சென்று இருங்கள் ....

மேலும் சில பதிவுகள்