மெத்தையில் படுக்கும் போது ஏற்படுகின்ற சூடு குறைய என்ன செய்வது?

நான் 5 வாரம் 3 நாள் கர்ப்பிணி . எனக்கு உடம்பு அதிக சூடாக இருக்கிறது. மேலும் உதட்டில் உள்ளே , நாக்கு போன்றவற்றில் கொப்பளம் இருக்குது. மெத்தையில படுத்தா உடம்பு ரொம்ப எரியுது. உள்ளங்கைளாம் heater போல கொதிக்குது. நான் கீழ படுத்தா அடிக்கடி எந்திருக்க கஷ்டமா இருக்கும். அதனால , மெத்தை மேல என்ன போட்டு விரிச்சு படுத்தா சூடு ஏறாது? இப்போ chairல ரொம்ப நேரம் உக்காந்தா சூடு புடிச்சா கீழ turkey towel மடிச்சு போட்டு அது மேல உக்காந்தா சூடு ஏறாதுணு எங்க டாக்டர் அப்போ சொன்னாங்க.நான் சென்னைல இருக்கும் போது கல்யாணத்துக்கு முன்னாடி. அது போல பெரிய turkey towel போட்டு அதுல படுத்தா சூடு ஏறாமா இருக்குமா, இல்ல வேற ஏதாவது செய்யணுமா? ப்லீஸ் எனக்கு சொல்லுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு.

மெத்தையில் நல்ல தடிமனான காட்டன் பெட்ஷீட் விரித்து padungal.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நல்ல காட்டன் துனிகளை அனியலாம்.......தினம் இரண்டு முறை நல்ல குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.படுக்கை அறை நல்ல காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்,முடிந்தால் டேபில் ஸ்பேன் யூஸ் பன்னலாம். முடிந்த வரைக்கும் காட்டன் பெட்ஸீட்கலயே உபயோகியுங்கள்......

அன்புடன்.....
ஜெயஜோதி.....

தோழிகளே.......
உங்கள் வாழ்க்கை பாதையை மலர்களால் தூவ
முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் புன்னகையால்
தூவுங்கள்........so smile please...

மெத்தையில் படுக்கும் போது சூடாக உள்ளது மற்றும் உட்காரவும் towel உபயோக படுத்து கீர்கள் ...தங்களுடைய உடம்பு
basic கவே சூடு என்று நினைகிறேன் ...தாங்கள் இதை குறைபதற்க்கு எழுமையான முறை என்னவென்றால் நிறைய
தண்ணீர் குடியுங்கள் ,மற்றும் மோர், illaneer ,பண கல்கண்டு அருந்தி வர சூடு thaniyum ...தோழி கூறியது போல் படுக்கைக்கு
செல்லும் முன் குளிக்கவும் ...எவ்ளோ தண்ணீர் குடிக்க முடியுமோ avlo குடியுங்கள் ...குறைந்தது 3 லி குடித்து வர உங்களுகே நன்கு வித்தியாசம் தெரியும் அதில் பண கல்கண்டு சேருங்கள் ...ட்ரை செய்துவிட்டு பதிவு போடுங்கள் ...
உறங்கும் முன் காற்றோட்டமாக ஒரு நடை சென்று வாருங்கள் ...

ரொம்ப நன்றி தோழிகளே ....

மேலும் சில பதிவுகள்