9 மாத கர்ப்பம், சிசேரியன் செய்த இடத்தில் வலி

ஹாய் தொழிஸ்,
என் மனைவிக்கு இப்போ 9 மாத கர்ப்பம், இன்று காலைமுதல், முதல் குழந்தைக்கு சிசேரியன் செய்த இடத்தில் வலி, மற்றும் அடி வயிறு விட்டு விட்டு வலிக்குது என்கிறார்,
due date மார்ச் 18 மற்றும் 25 கொடுதிருகிரர்கள், இந்த மாதிரியான வலி நார்மல் தானா இல்லை ஏதேனும் ப்ரோப்லமா? சிசேரியன் மூலம் பெற்றெடுத்த தாய்மார்கள் உதவவும். பிரசவ வலி எப்படி இருக்கும் என்று அவங்களுக்கு தெரியாதாம்,

முதலில் டாக்டரை பாருங்க... சிசேரியன் என்பதால் அந்த இடத்தில் வலி வரும், ஆனா அது சாதாரணம்னு சொல்ல முடியாது... சிட்ரெட்ச் ஆகும் போது சில நேரம் பழையல் தையல் போட்ட இடத்தில் கிழிபட வாய்ப்பு அதிகம். அதனால் உடனடியாக மருத்துவரை அனுகுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் இரு குழந்தைகளும் சிசேரியன் மூம் தான் பிறந்தார்கள். நீங்க சொல்வது போல் சிசேரியன் செய்த இடத்தில் வலி இருப்பது நார்மல்தான்.குழந்தை முட்டுவதால் அடிவயிற்றில் வலியும்,சில நேரங்களில் சிசேரியன் தையல் போட்ட இடத்தில் வலியும் இருக்கும்.ஆனால் வலி சிறிது நேரத்தில் மறைந்துவிடும்/குறைந்துவிடும்.வலி தொடர்ந்து இருந்தால் உடனே மருத்துவரை போய்ப்பாருங்க. நல்ல படியாக குழந்தையை பெற்றெடுக்க உங்க மனைவிக்கு வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்