பேப்பர் மாஸ்க்

தேதி: March 5, 2012

4
Average: 3.9 (9 votes)

 

சார்ட் பேப்பர்
போஸ்டர் கலர்
ப்ரஷ்
பென்சில்
ஸ்கேல்
மெல்லிய எலாஸ்டிக்
கத்தரிக்கோல்
ப்ளேடு

 

சார்ட் அட்டையை அவரவர் முகத்திற்கு தேவையான அளவு நறுக்கி எடுத்துக் கொண்டு மேலே இரண்டு கட்டங்கள் வரையவும். அதன் கீழ் புருவம், கண் வரைந்த பின்னர் மூக்கு பகுதிக்கு இடைவெளிவிட்டு வாய் பகுதியை வரைந்துக் கொள்ளவும். பேப்பரின் மேல் கட்டத்தில் முழுவதும் முக்கோணம் போல் வரிசையாக வரைந்து முடிக்கவும்.
முகத்தின் மூக்குப்பகுதி வரை மஞ்சள்நிறத்தில் பெயிண்ட் செய்யவும்.
அதன் கீழ் சிவப்பு நிற பெயிண்ட் செய்யவும்.
முக்கோணம் போல் வரைந்த பகுதியை மட்டும் கத்தரிக்கோலால் படத்தில் உள்ளதுப்போல் நறுக்கி விடவும்.
சிவப்பு நிற பெயிண்டைக் கொண்டு புருவம் வரையவும். கன்னம் பகுதியில் சுழிகள் வரைந்து விடவும். நெற்றி பகுதியில் வரைந்த பார்டரிலும் அதே நிறத்தால் பெயிண்ட் செய்யவும்.
ப்ளேடு கொண்டு கண் மற்றும் வாய் பகுதியை தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும். வாய் பகுதிக்கு கீழ் தாடிப்போல் நெளி, நெளியாக வரைந்து விடவும்.
முக்கோணத்தின் நடுவில் அடர்ந்த நீலம் மற்றும் பச்சைநிறத்தால் மாறி, மாறி சிறு புள்ளிகள் வைக்கவும்.
கன்னம் பகுதியில் வரைந்துள்ள இரு சுழிகளும் இடையில் உள்ள இடைவெளி அளவிற்கு பேப்பரை நறுக்கி எடுத்துக் கொண்டு பென்சிலால் படத்தில் தெரியும் வடிவத்தை வரைந்து அதில் மஞ்சள்நிறத்தில் பெயிண்ட் செய்யவும். பின்னர் அவற்றை தனியே நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அந்த மூக்கின் ஓரங்களில் பெவிக்கால் தடவி இரு சுழிகளும் இடையில் ஒட்டவும். சார்ட் அட்டையின் பெயிண்ட் செய்த பக்கத்தை தவிர மீதி பக்கங்களை ஒரே சீராக நறுக்கி விடவும்.
கண்ணின் இரு ஓரங்களின் சற்று உள்ளே பஞ்சிங் மிஷினால் துளையிட்டுக் கொள்ளவும்.
சார்ட் அட்டையை திருப்பி வைத்து மெல்லிய எலாஸ்டிக்கை இரு துளையிலும் கோர்த்து முடிச்சு போட்டு விடவும்.
சார்ட் அட்டையில் செய்த மாஸ்க் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சூபெரான மாஸ்க் பார்க்க ரொம்ப சிம்புளா அழகா இருக்கு செய்வதும் சுலபம் கலர் ரொம்ப பொருத்தமா இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

ஹைய்யா... யாழினிக்கு ஸ்கூலில் பூனை குட்டி மாஸ்க் கொடுத்தாங்க. நான் கூட போன முறை இவர் வீட்டு குட்டீஸ்கு 2 மாஸ்க் அதே போல செய்து கொடுத்தேன்... இது அழகா இருக்குங்க. இம்முறை ஊருக்கு போகும் போது இந்த மாஸ்க் தான் செய்து கொடுக்க போறேன். கலர் சூப்பர். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா