-

-

கொஞ்சம் மனசை ரிலாக்ஸா வைங்க... கவலைபடாதீங்க. தோழிகள் வழி சொல்வாங்க. நானும் கொஞ்சம் யோசிக்கனும். வரேன்... மீண்டும். முதல்ல கவலையை ஓரம் வெச்சுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க. சரியா??? எங்க தோழிகள் யாரும் அழ கூடாது... அது எங்கள் மனதையும் நோகடிக்கும். அதனால் எங்க தான்யாவா எப்பவும் சிரிச்சுட்டே இருக்கனும்... நாங்க எல்லாம் இருக்கோம்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க முதல்ல ஒரு நல்ல டாக்டர் பாருங்க,குழந்தைக்காக எனக்கு தெரிஞச ஒரு டாக்டர் கூட இருகாங்க ,நீங்க சரி என்ரால் சொல்லுஙக,நான் டீடேய்ல் தரென்,

என்னால உங்க கஷ்டத்த உணர முடியுது.
Advise பண்றது easy ana அத அனுபவிபவர்களுக்கு தான் தெரியும் அது எவளவு பெரிய வலி என்று.ஆனால் இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரி பெண்களே.நீங்கள் உங்க மாமியார் சொந்தகளை எல்லாம் விட்டு தள்ளுங்க.

இப்போ செய்வது ஒன்று மட்டும் தான். உங்கள் கணவரை உங்கள் வழிக்கு கொண்டு வருவது.அவர் உங்கள் பக்கம் இருந்தால் யாரும் உங்களை அசைக்க முடியாது.

இன்னொன்று நீங்கள் இருவரும் நல்ல மருத்துவரிடம் செல்லுங்கள்.உங்கள் இருவருக்கும் என்ன குறை என்று கண்டறியுங்கள். There is no problem without solution.Every problem has some solutions.But we have to find out that.

நீங்கள் ஊங்கள் மனதை திடமாக வைத்து கொள்ளுங்கள். சந்தோஷமாக இருக்க முயற்சி செய்ங்க.கண்டிப்பாக நல்லதே நடக்கும்.சகோதரி உங்களுக்காக நாங்க Pray பண்ணிகறோம் . கண்டிப்பா நீங்க தாய் ஆவீங்க.தயவு செய்து சபிக்க பட்டவங்கனு சொல்லாதீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு.

கடவுள் நலவங்கள சோதிப்பார் அனால் கை விடமாட்டார்.Have faith in God.U ll get the solution soon. முடிஞ்சா yoga,Meditation பண்ணுங்க.All the Very Best..

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

தன்யா கவலைபடாதீங்க,இந்த உலகத்துல எல்லாருக்கும் பிடிச்ச வாழ்க்கை கிடைக்கிறது இல்ல.கிடைச்ச வாழ்க்கைய பிடிச்சதா அமைச்சிக்கிரோம்.
அவ்ளோதான்.இதுல யாரும் சபிக்க பட்டவங்களோ இல்ல வரம் வாங்கிட்டு வந்தவங்களோ இல்ல.எல்லாரும் மனுஷங்கதான் ஆனா அந்த மனுஷங்களுக்கு
மனசுதான் வித்தியாசப்படுது.எல்லாரும் நமக்கு பிடிச்சவங்களா இருக்கணும்னு நாம எதிர்பாக்குரோம் ஆனா அது நடக்காம போகும்போதுதான் ஏமாற்றம் வருது.
உங்கள மாதிரிதான் எனக்கும் மாமியார் வீடு ஒரு நரகமா இருந்தது.என் கணவரும் அவங்க அம்மா பண்ற எதுவும் பெரிசு பண்ண மாட்டாரு.அதனால எத்தனையோ
தடவை அடி வாங்கி இருக்கேன் உனக்கு கொழந்தை இல்லனு கஷ்டபடரீங்க,ஆனா எனக்கு கொழந்தை வயித்துல இருக்கும் போது எத்தனையோ அடி ஒதை,அதெல்லாம்
தாண்டி வந்துட்டேன் ஆனா இப்பவும் அவர் அப்படிதான் மாற மாட்டாருனு தெரிஞ்சிக்கிட்டேன் அதனால அவர திருத்துற வேளைய விட்டுட்டன்.சில நேரம்
நல்லா பேசுவாரு அப்பறம் கோபப்படுவாரு.இந்த குணம் கெட்ட மனுஷங்களுக்காக நாம எதுக்கு சாகணும் நீங்க ஏன் பைத்துயமா ஆகணும்.கொழந்தை மட்டும் வாழ்க்கை
இல்லங்க மொத்தல்ல இத நினைச்சி நினைச்சி கவலைபடறத விடுங்க கவலை பட்டு கவலை பட்டு உங்கள நீங்க வருத்திக்கிட்டா அது அவங்களுக்குதான் லாபம்.
மொதல்ல தெளிவா இருங்க சந்தோஷமா இருங்க கஷ்டம்தான் நானும் அதே நிலையில இருந்து இருந்துகிட்டு இருக்கவதான் வெளில சொல்ல முடியாத
பிரச்சனை எனக்கும் இருக்கு.ஆனா ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கிட்டேன் நாம சாகரதாலயும் அழரதாலயும் எதுவும் சரி ஆக போறது இல்ல அப்பறம் எதுக்கு அதெல்லாம்.
மனச தெளிவா வெச்சிக்க நிறைய தியானம் பண்ணுங்க சாமி கும்பிடுங்க,உங்களுக்கு புடிச்ச வேளையில ஈடுபடுங்க அருசுவைக்கு வாங்க.அருசுவைல அரட்டை அடிங்க
மனசு லேசா இருக்கும் நீங்க தெளிவா இருந்தா யாரும் உங்கள பைத்தியம் ஆக்க முடியாதுங்க.இன்னும் விரிவா வந்து பேசுரேன் பசங்க எழுந்துட்டாங்க.
நான் சொன்ன பதிவு யாரு மனசையாவது காயபடுத்தி இருந்தா என்னை மன்னிச்சிருங்க.

கவலை படாதீர்கல் தன்யா,10 வருடத்திர்க்கு பின்பு தான் எனக்கும் குழந்தை பிறந்தது.நம்மை சுற்றி உள்ளவர்களை பட்ரி கவலை படாதீர்கள்;மனதை ரிலாக்ஸ்ஸா வைத்து கொல்லுங்கள்.நிட்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.உங்களிடம் இன்னும் நிறைய சொல்லலாம் நேரமின்மையால் முடியவில்லை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தோழியே உங்களின் பதிவினை பார்க்கும்பொழுது மிகவும் கஸ்டமாக உள்ளது,முதலில் உங்களை நீங்கள் திடப்படுத்திக்கொள்ளுங்கள்,நிச்சயம் கடவுள் சோதனையைத் தருவது உலகம் எப்படி என தெரிந்துகொள்வதற்கும் எங்களுடைய மனம் பக்குவமடைவதற்கும் மட்டுமே.அது நீண்ட காலத்திற்கு நீடிக்கப்போவதில்லை என்பதே உண்மை.
நானும் 5 வருடமாக குழந்தைக்காக கடவுளின் மேல் நம்பிக்கை வைத்து காத்திருக்கின்றேன்.நிச்சயம் அந்த கடவுள் எல்லோருக்கும் நன்மையே செய்வார்,

அன்புள்ள சகோதரி
நீங்கள் சபிக்கப்பட்டவர் அல்ல, வாழ பிறந்தவர், ஜெயிக்க பிறந்தவர்,
குழந்தை இல்லாததால உங்களை ஒதுக்குகிறார்கள் என்றால் அப்படிப்பட்ட சின்ன மனசுகாரர்களின் செயல்களை எண்ணி உங்களை வருத்தி கொள்ளாதீர்கள். நீங்கள் நல்ல டாக்டரை பார்த்து தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுக்கவும். சீக்கிரமே குழந்தை உண்டாகும். உங்களுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் கணவரின் சொந்தகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் கணவரிடம் எடுத்து சொல்லி மனைவியை அடிப்பதும், தாலியை பிடுங்கி விரட்டுவதும் தவறு என்று உணர்த்த போவதும் இல்லை. உங்களுக்குள் பிரச்சனை என்றால் அதை கேட்டு உங்களை தான் குறை சொல்வார்கள். உங்கள் இருவர் சம்பந்தப்பட்ட குடும்ப விவகாரங்களில் அவர்களை தலையட அனுமதிக்காதீர்கள். அவர்களால் ஒன்றும் நன்மை நடக்க போவதில்லை, அதற்காக அவர்களிடம் எந்த விரோதமும் வேண்டாம், வாக்குவாதமும் வேண்டாம். அவர்களிடம் கொஞ்சம் விலகி இருங்கள்.
உங்கள் பதிவை படிக்கும் போது கோவம் தான் வருகிறது. பெதவங்களுக்கே பிள்ளைகளை அடிக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும் போது அவர் எப்படி உங்களை இப்படி ரத்தம் வரும் வரை அடிக்கலாம்.
முதலில் உங்களுக்கு உங்கள் மீது தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இருக்க வேண்டும். நீங்கள் வேலைக்கு போகிறீர்களா, அப்படி இல்லையென்றால் முதலில் நல்ல வேலையை தேடி கொள்ளுங்கள்.economical independence ரொம்ப முக்கியம். என்ன பண்ணாலும் வேற வழியில்லை அவர் காலடியில் தான் விழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தாலியை பறித்து கொண்டு உங்களை விரட்டுகிறார். நீங்கள் இருவரும் அமைதியாக இருக்கும் நேரத்தில், வாழ வழியில்லாமல் ஒன்னும் அவரை பொருத்து கொண்டு , அடிகளை தாங்கி கொண்டு இருக்கவில்லை, அவர் உங்கள் அன்பிற்குரியவர் என்பதாலும், நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அதீத அன்பாலும் தான் பொறுத்து கொள்கிறேன் என்று புரியவையுங்கள். கணவன் மனைவிக்குள் சண்டை வருவதும் சமாதானம் ஆவதும் சகஜம் தான். அனால் எல்லாவற்றிற்கும் ஒரு லிமிட் உண்டு. அந்த லிமிட் என்ன என்பதை புரிய வையுங்கள்.
கை நீட்டும் அளவிற்கு எந்த பிரச்சினையையும் கொண்டு போகாதீர்கள். ஒரு விஷயம் பேசும் போதே வாக்கு வாதம் வளர்கிறது, பிடிக்கவில்லை என்றால் உங்கள் மீது தப்பே இல்லையென்றாலும் பேச்சை நிறுத்தி கொள்ளுங்கள், இனியொரு முறை அடிக்கும் பழக்கம் வேண்டாம் என்று உறுதியாக கூறிவிடுங்கள்,

உங்களுக்கும் உங்கள் கணவருக்கு இடையே வரும் சண்டைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதை தவிர்த்து விடுங்கள். அவரிடம் அதிகமாக வாக்குவாதம் செய்யாதீர்கள். சண்டை வருவதற்கான சூழ்நிலைகளை உருவாக்காதீர்கள். அவர் சொந்தங்களை பற்றி இனிமேல் அவரிடம் குறை சொல்லாதீர்கள். அவர்கள் உங்களை பற்றி என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை பாடாதீர்கள், நீங்கள் அவர் சொந்தங்களை பற்றி எந்த பேச்சையும் அவரிடம் எடுக்காதீர்கள், ஒருவேளை அதனால் தான் உங்களுக்குள் கருத்து பேதம் அதிகமாக வருகிறது என்று நினைக்கிறேன். போக போக அவரே நல்லவர் யார், உண்மையான அன்பு எது என்று புரிந்து கொள்வார். ஆரம்பத்தில் பல ஆண்கள் இப்படி தான் இருப்பார்கள், சொந்தங்களின் பேச்சை கேட்டு கொண்டு எடுப்பார் கைபிள்ளை போல். வருடங்கள் செல்ல செல்ல மனைவியின் அன்பையும் , அருமையையும் புரிந்து கொள்வார்கள். உங்கள் அன்பை மட்டும் அவருக்கு புரிய வையுங்கள்.

பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு உங்கள் பிரச்சனை இல்லை. இப்போது சந்தோசமாக இல்லறம் நடத்திகொண்டிருக்கும் பல பெண்கள் இது போல பல பிரச்சனைகளை சமாளித்து தான் வந்திருகிறார்கள்.

உங்கள் இருவருக்கும் உள்ள இடைவெளியை குறைத்து காதலை வளர்த்து கொள்ளுங்கள், உங்கள் கணவர் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்பொழுது நிறைய மாறி இருக்கிறார் தானே, அதெல்லாம் உங்கள் மீது இருந்த அன்பினால் தானே, நீங்கள் அவர் மீது கொண்ட அன்பை மட்டும் குறைத்து கொள்ளாதீர்கள், அன்பு ஒன்றுக்கு தான் எல்லா சக்தியும் இருக்கிறது, அது எப்படிப்பட்டவரையும் நம் வசம் மாற்றி விடும். ஆனால் antha அன்பை அவர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் அவருக்கு புரிய வைக்க வேண்டும். அது வரை பொறுமையாக நம்பிக்கையோடு இருங்கள். மனதில் உறுதியாக இருங்கள். காலம் கனிந்து வரும்.

(உங்கள் மனம் வருந்தும் படி எதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும்.)

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

தான்யா, பட்டிமன்றத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கே மன அழுத்தம் என பேசிய தான்யாவா நீங்க? நீங்க கலங்க கூடாது தான்யா. பட்டிமன்றத்தில் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது போராட்ட குணம் தான். அதை நான் பட்டியிலேயே சொல்லியிருக்கிறேன். எந்த அணி ஜெயிக்கும், எந்த அணி தோற்கும் என ஆராயாமலேயே தான் எடுத்துக் கொண்ட தலைப்பிலே விடாபிடியாக இருந்து கடைசி வரை போராடுவீர்கள். சாதாரண பட்டிமன்றத்தில் போராடும் நீங்கள் வாழ்வில் சோர்ந்து போகலாமா?

//நான் மட்டும் சபிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன். எனக்கு திருமணமாகி ஏழு வருடங்களாகியும் குழந்தை இல்லை. இதனால் குடும்பத்தில் எனக்கு அங்கீகாரம் இல்லை.//

தோழியே, வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சபிக்கப்பட்டு தான் இருக்கிறோம். உங்கள் கணவரோ, அவர் குடும்பத்தாரோ, இல்லை இந்த உலகமோ உங்களுக்கு அங்கீகாரம் தரவில்லை என ஒரு நாளும் எதிர்பார்க்காதீர்கள். கிடைக்காத அங்கீகாரத்தை நாமாக தான் பிடுங்கி எடுத்துக் கொள்ள வேண்டும். தோழியே, ஏழு வருடங்களுக்கே இப்படி சொல்கிறீர்கள். எனக்கு தெரிந்து 12 வருடம் கழித்து தற்போது பிரசவத்திற்கு தயாராக இருக்கிறார் என் ஓரகத்தி ஒருவர். இதற்கு என்ன சொல்வது. புரிகிறது தோழியே நீங்கள் கேட்பது. குழந்தை வரம் கிடைத்து பெறும் வரை அந்த அவமானத்தை சுமப்பவர்களுக்கு தானே வலி தெரியும், என்று நீங்கள் மனதில் நினைப்பதும் புரிகிறது. மனிதன் எழுதியதை மாற்றி எழுதலாம், கடவுளின் எழுத்தை மாற்ற முடியாதே. நாம் மாற்றி எழுதும் வரை கொஞ்சம் பொறுமையாக தானே இருக்கவேண்டும். அது நமக்கு புரிகிறது. நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு புரியவில்லையே. அவர்களுக்கு புரியும் வரையும் அமைதி காத்தே ஆக வேண்டும்.

//என் கணவரின் உறவினர் வீட்டுக்கு, விஷேசங்களுக்கு போனால் என்னை மனுஷியாகவும் மதிப்பதில்லை. .//

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே தானே இருப்பான் தான்யா. உங்கள் கணவர் உங்களை மதித்தால் தானே அவர் வீட்டார் உங்களை கொண்டாட. விடுங்க. இதுக்கெல்லாம் நிச்சயம் பீல் பண்ணவே கூடாது. நம் கஷ்டத்தை பார்த்து மனம் குளிர்பவர்களுக்கு அந்த சந்தோஷத்தை ஒருபோதும் தரக்கூடாது. அவர்கள் எதிரில், உன் பேச்சும், நடத்தையும் என் தலைமுடியை கூட அசைத்து பார்க்க முடியாது என்ற ரீதியில் நடந்து காட்ட வேண்டும். எத்தனை நாள் தான் உங்களை காயப்படுத்தி குளிர்காய்வார்கள். ஒரு நாள் வெயிலுக்கு வந்து தானே ஆக வேண்டும். அப்போது பார்த்துக் கொள்ளுங்கள் அவர்களை ஒரு கை அல்ல. இரண்டு கையாலும்.

//அவர்கள் என்னை பார்க்கும் பார்வை எனக்கு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தி, என் மன உறுதியை குலைத்து ஏதோ மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் ஆக்கிவிடுகிறது. இதனால் வீட்டுக்குள்ளேயே என்னை நான் முடக்கி கொண்டேன்//

தான்யா, அவர்கள் பார்வையை பார்த்து நீங்கள் ஏன் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறீர்கள். உங்களை நீங்கள் குறைவாக மதிப்பிட்டதால் தான் அவர்களின் பார்வை உங்களுக்கு தாழ்வாக தெரிகிறது. இனி அவர்களை நேர்கொண்ட பார்வையோடு தைரியமாக பாருங்கள். நீங்கள் உங்கள் தாயின் கருவறையில் உருவாகும் போதே கடவுள்,உங்களுக்கு குழந்தை பிறக்காது, அந்த பாக்கியம் கிடையாது என்று முத்திரையா குத்தி அனுப்பினார். பின்பு ஏன் இந்த அவநம்பிக்கை தோழியே? நான் உங்களிடம் ஒரு உதாரணம் கேட்கிறேன் தோழியே.. ஒரு காலத்தில் எல்.ஐ.சி பாலிசி என்றாலே இறந்த பிறகு தான் கிடைக்கும் என்ற ஒரு மூடநம்பிக்கையே இருந்தது. ஆனால் இப்போது பாருங்கள் அந்த மூட நம்பிக்கைக்கு மூடுவிழா செய்துவிட்டு எத்தனை பேர் எத்தனை எத்தனை கோடிகளில் இன்ஷியூர் செய்து வைத்திருக்கிறார்கள். அந்த பணத்தை அவர்கள் இருந்து முழுமையாக அனுபவிப்பார்களா? கண்ணால் முழுமையாக பார்ப்பார்களா என்பதை பற்றி கவலை கொள்ளாமல், நம்பிக்கையோடு பிரிமியம் கட்டி வருகிறார்கள். ஆக, தோழியே, வாழ்க்கையே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் போய் கொண்டிருக்கிறது. நீங்கள் ஏன் அந்த நம்பிக்கையை சுமக்க தைரியமில்லாமல் தூர எறிந்து விட்டீர்கள்?

வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதிலும் ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த முடக்கம் வீழ்ச்சியின் காரணமாக இருக்க கூடாது. எழுச்சிக்கு காரணமாக இருக்கவேண்டும். முடக்கத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு இழையில் உங்களுக்கு ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருந்தீர்கள். அந்த படிப்பு படிக்க முடியவில்லையானாலும், அதற்கு ஈடாக வேறு ஒரு படிப்பை எடுத்து படியுங்கள். உங்கள் கணவரிடம் உரிமையை நிலைநாட்டி படிக்க வைக்க சொல்லுங்கள். அதுவும் முடியாமல் போனால், உங்கள் தந்தையை அணுகி பாருங்கள். மெத்தபடித்த இந்த சொத்தை படிப்பாளிகளின் வார்த்தைகளுக்கு மறந்தேனும் செவி சாய்க்காதீர்கள். பெருமைக்கு படித்த இதுபோன்றவர்களுக்கு முன்னால் அதே பெருமையை உங்களுடையதாக்கிக் கொள்ள, முடிந்த வழிகளில் எல்லாம் இறங்கி பாருங்கள். நிச்சயம் வழி இருக்கும். வலி தான் இருக்க கூடாது.

பெண்களின் படைப்பு என்ற இழையில் நீங்கள் சொன்னவை தான். உங்க கணவர் உங்களுக்கு உறவு முறை என்று. மகள் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்று தள்ளி விடும் பெற்றோரை கண்டால் ஆத்திரம் தான் வருகிறது. தோழியே, நீங்கள் தவறாக நினைத்தாலும் சரி.. பெண்ணின் விருப்பத்துக்கு மீறி இது போன்ற கொடுமைகளில் வாழ்நாள் முழுக்க உழல நிர்பந்திப்பதும் ஒரு வித கொலை தான். சொந்தங்களை விட அந்நியர்களே மேல் என்று நினைக்கும் அளவிற்கு இருக்கிறார்கள் இன்றைய சொந்தக்கார மாப்பிள்ளைகளும்,சொந்தங்களும். உங்கள் கணவர் படிப்புக்கு செலவு செய்ய மறுக்கும் பொருட்டு, உங்கள் தந்தையாக பார்த்து விரும்பி தானே சொந்தத்தில் உங்களை மணம்முடித்து வைத்தார். அதனால படிப்பு செலவுக்கு நீங்கள் அவரிடமே கேளுங்கள்.

புலி பதுங்குவதை மட்டும் பாய்வதற்காக தான் என்று எண்ணும் நாம், முடக்கத்தை மட்டும் ஏன் வீழ்ச்சியின் வித்தாக நினைக்க வேண்டும்.

//என் கணவரின் முழு ஆதரவு அவரின் சொந்த பந்தங்களுக்குதான். அவருக்கும் நான் ஒரு பொருட்டே அல்ல. என் பெற்றோரோடு நான் உறவாடினால் என்னையும், அவர்களையும் ஒதுக்கி வைப்பார். என் பெற்றோரை நான் திட்டினால் அதை ரசித்து என்னிடம் அன்பாக பேசுவார். என் சொந்தங்களை அவர் விரும்பமாட்டார்.//

தான்யா, உங்கள் கணவர் என்று இல்லை பாதிக்கு பாதி கணவன்மார்களுக்கு மனைவி என்னும் அடிமை மட்டுமே போதும் என நினைப்பார்கள். அடிமையை பற்றியே அக்கறை இல்லாத போது அடிமையின் உறவுகளை பற்றி ஏன் அக்கறைப்படப்போகிறார்கள். உங்கள் கண்வரைப் போன்றவர்கள் அதை வெளிக்காட்டி விடுவார்கள். ஒருசிலர் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பார்கள்.திருமணம் என்பது பெண்ணுக்கு ஒன்வே டிராபிக் மாதிரி அமைந்துவிடும். திருமணத்திற்கு பிறகு அவள் கணவனையும், அவன் சார்ந்த குடும்பத்தையும் மட்டுமே அன்பு பாராட்டி, உறவு பேணி கட்டி காத்து அரவணைத்துச் செல்லவேண்டும். என்றைக்கு 3 முடிச்சு போட்டு (இழுத்து) கொண்டு வரப்பட்டாளோ அன்றோடு தாய்வீட்டு உறவு மறைமுகமாக அறுக்கப்பட்டது என்றே அர்த்தம். வரதட்சனை என்னும் பெயரில் நகை,நட்டு,சொத்து, பாத்திரம்,பணம், அசையா சொத்து, அசையும் சொத்து என இத்தனையும் தந்து வலிய சென்று படுகுழிக்குள் விழும் அவலத்தை நம் தாய்த்திரு நாடு இந்தியாவை தவிர வேறெங்கும் காணவே முடியாது. அதனால் நீங்கள் இந்த விஷயத்தில் சிறிது தேற்றிக் கொள்ளலாம்.

//சில சமயம் தாலியை பறித்துக் கொண்டு என்னை விரட்டுவார். அவர் சொந்தங்களோ ''அவன் தாலியை பறிச்சா, நீ விட்டுடுவியா'' என்று என்னை இன்னும் கேவலமாக நடத்துவார்கள். அவர் என்னை ரத்தம் வரும் அளவு அடித்தாலும், ''நீ தப்பு செஞ்சா அப்படிதான் அடிப்பான்'' இதெல்லாம் குடும்பத்தில் சாதாரணம் என்கிறார்கள்//

தான்யா, நீங்கள் ஒரு இழையில் உங்கள் கணவரும், புகுந்த வீட்டாரும் மெத்த படித்தவர்கள் என்று சொன்ன ஞாபகம். எதற்காக படித்தார்கள்? ஏன் படித்தார்கள் என தெரியாமலேயே படித்து பட்டம் வாங்கி வைத்திருக்கிறார்கள்.

//அவர் முதுகுக்கு பின்னால் அவரை பற்றி பேசும் மோசமான விமர்சனங்கள், அவருக்கு புரிவதேயில்லை. இவரை யூஸ் அன்ட் த்ரோவாக பயன்படுத்திக்கொள்ளும் சொந்தங்களை பற்றி அவருக்கு தெரிவதேயில்லை.//

நீங்கள் சொன்னதை வைத்து பார்க்கும் போது, உங்கள் கணவர் வெறும் அம்பு தான். உங்களுக்கெதிராக எய்துபவர்கள் அந்த குடும்பத்திலேயே வேறு யாரோ தான். யார் என்று கண்டுபிடியுங்கள். ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் அறியுங்கள். பெண்களுக்கெதிரான பெரும்பாலான கொடுமைகள் பெரும்பாலும் மூட்டி விடுபவையே. கால நேரம் அறிந்து அந்த ஆண் அந்த தீய சக்திகளின் பிடியில் இருந்து வெளியில் வந்தால் அவருக்கும், அவர் சார்ந்த மனைவிக்கும் நல்லது. இந்த இடத்தில் பெண்களுக்கு பெண்களே பெரும் எதிரிகளாக இருப்பது தான் பெரிய கொடுமையே.

//என் தங்கையின் வாழ்க்கைக்காக நான் பொறுமையாகவும், விட்டுக்கொடுத்தும்தான் போகிறேன்.//

இதுவும் இன்றைய பெரும்பாலான பெண்களின் நிலைதான் தான்யா. தன் பெற்றோருக்காகவும், உடன்பிறந்தோர் நலனுக்காகவும் புகுந்த இடத்தில் பல இன்னல்களை சந்திக்கும் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள்.

//அவர் அண்ணன் இவருக்கு நேர் எதிர். மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்பவர். அதனால் அவர் அண்ணி செய்யாத அக்கிரமங்கள் இல்லை குடும்பத்தில். ஆனாலும் அவர் அண்ணியை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்கள்.//

நல்லதுக்கே காலம் இல்லை பார்த்தீங்களா? நீங்க அடங்கி அடங்கி போறீங்க உங்களை போட்டு மிதிச்சுட்டே இருக்காங்க. உங்க கணவரின் அண்ணன் மனைவி அடக்குமுறையை கையாண்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு அடங்கி போறாங்க. இதுதாங்க உலகம் தான்யா. இப்பவாச்சும் புரிஞ்சுக்கோங்க. எல்லா இடத்துலயும் நம்ம மொழி செல்லுபடியாகாது. மொழி புரியாத இடத்தில் அவங்க மொழியை தான் நாம் கத்துக்கனும். அப்பதான் அவங்களோட ஒரே அலைவரிசைல வாழ முடியும். முதல்ல நீங்க மனசுல தைரியத்தையும், ம்னோதிடத்தையும் வளர்த்துக்கோங்க. மத்தது தானா வரும். பொறுத்தார் பூமி ஆள்வார்ங்குற பழமொழி இடத்துக்கு தகுந்த மாதிரி மாறுபடும். இங்கே பொருந்தவே பொருந்தாது. பொறுத்தார் பூமியை மட்டும் இல்லை, தன்னையே ஆள முடியாதபடி ஆய்டும். தொட்டத்துகெல்லாம் மத்தவங்க்களுக்கு பயந்து பயந்தே வாழ் வேண்டி இருக்கும். அஞ்சறிவு ஜீவராசிகளை துன்புறுத்தும் போது அது திருப்பி தாக்கும்படி யார் சொல்லி தந்தாங்க? அதுங்களுக்கா தோணுது. நாம திருப்பி தாக்க கூட வேண்டாம். அட்லீஸ்ட் சின்ன அளவில், எதிராளிக்கு புரியும்படி சின்ன எதிர்ப்பை காட்டலாமே. அடுத்தமுறை இது போன்ற சம்பவங்கள் நடப்பது குறையுமே

//.பைத்தியம் போல் ஆகிவிட்டேன் என்று அவர் சொல்லி சொல்லி உன்மையிலேயே நான் தான் தவறாக இருக்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.//

ஒருத்தர் சும்மாவே பைத்தியம் ஆக முடியாதுங்க தான்யா. அவர் குடும்பத்தாரோ, அல்லது அவர் நண்பர்களோ தொடர்ந்து உங்களுக்கெதிராக எதையாவது சொல்லிக் கொண்டே இருந்திருப்பார்கள். அதனால் பெருத்த குழப்ப நிலையில் அவர் அப்படி சொல்லியிருப்பார். உங்கள் கணவர் அடிப்படையில் நல்லவராக தான் இருக்க தோன்றுகிறது. எதிர்பட்டவர் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டு இப்படி உங்களை நோகடித்துக் கொண்டு இருக்கிறார். அதனால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான். உங்கள் கணவரை உங்கள் அன்பால் திருப்ப பாருங்கள். 30 வருடம் ஆண்டவனும் இல்லை, 30 வருடம் அழிந்தவனும் இல்லை. உங்களுக்கும் நல்லகாலம் நிச்சயம் உண்டு. அவர் குடும்பத்தார் லீலைகளை அவரே ஒருநாள் அறிவார். அப்போது நீங்களும், உங்கள் அன்பும், தியாகமும் அவருக்கு நன்றாக புரியும். இந்த இடத்தில் உங்கள் கணவரின் நிலையை பார்க்க பரிதாபமாக உள்ளது தான்யா. உடன்பிறந்தோர், பெற்றோர் குணம் தெரியாமலேயே அவர்களுக்கு கறிவேப்பிலை மாதிரி இருக்கிறாரே.

தோழிகள் சொன்னது போல, நீங்கள் உங்கள் கணவரை எப்படியாவது வற்புறுத்தி ஒரு நல்ல டாக்டரிடம் அழைத்துச் சென்று இருவருமே மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். நிச்சயம் பதில் இருக்கும்.உங்களுக்கு பிடித்த கடவுளிடம் உங்கள் பாரங்களை இறக்கி வையுங்கள். மனதில் பாரங்களை சேர விடாமல் உடனுக்குடன் இறக்கி வைத்து விடுங்கள். உங்களுக்காக என் பிரார்த்தனை நிச்சயம் இருக்கும் தோழியே. நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் நல்லது நடக்கும்.

தோழியே உங்களுக்கு ஒன்றை இங்கே அழுத்தமாக சொல்லிக் கொள்கிறேன். அட்வைஸ் செய்வது சுலபம். அந்த நிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் கஷ்டம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். நான் இதை உங்களுக்கு வெறும் அறிவுரையாக சொல்லவில்லை. நானும் சிலபல சம்பவங்களை நிகழ்ச்சிகளை பார்த்து வந்தவள் தான் என்கிற முறையில் சொல்கிறேன். ஊருக்கு மட்டும் தான் இந்த உபதேசம் என்று மட்டும் நினைக்க வேண்டாம் தோழியே. நான் மேற்சொன்னபடி தான் என் நடைமுறை வாழ்க்கையிலும் இருக்கிறேன். இனி எதிர்காலத்திலும் இருப்பேன். இங்கே சொன்னதில் எள்ளளவும் நாடகத்தனமோ, வெறும் வாய் வார்த்தைகளோ கிடையாது. அத்தனையும் உண்மை.

எனக்கு அதிக மனக்கஷ்டம் வந்தால் சமீபமாக கேட்கும் பாடல்,"ஆட்டோகிராப்" படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் தான். நீங்களும் கேட்டுப்பாருங்கள் அதன் ஒவ்வொரு வார்த்தையையும் மனதின் ஆழத்திற்கே சென்று விதையாக ஊன்றி வையுங்கள். ஒருநாள் அவை விருட்சமாகி உங்கள் வாழ்க்கை பாதையையே மாற்றி காட்டுகிறதா? இல்லையா என்று பாருங்கள். தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்களை படியுங்கள். பாறையை போல மனதை இறுக்கமாக்குங்கள். உணர்வுகளுக்கு , உணர்ச்சிகளுக்கு ஒருபோதும் இடம் தராதீர்கள். இந்த மாதிரி மனிதர்களிடம் இப்படி இருந்தால் தான் வாழ்க்கையில் போராடி ஜெயிக்க முடியும். கண்களில் ஒருபோதும் கண்ணீர் வைக்காதீர்கள். ஏனென்றால், ஒரு துளி கண்ணீர் தான் நம் உறுதியான மனக்கோட்டையை அசைப்பதோடல்லாமல் தரைமட்டமாக்கிவிடும். சுயபச்சாதாபம், கழிவிரக்கத்திற்கு வழிவகுத்துவிடும்.

அன்பு தோழியே, உங்களுக்கு இருக்கும் இவை அனைத்தையும் சோகங்களாக எண்ணாதீர்கள். மனதின் பாரங்களாக நினையுங்கள். இவை தீர்க்க முடியாதவை அல்ல. சீக்கிரமே இந்த பாரங்கள் கரைந்து போகும். இங்கே சிரித்து பேசுபவர்கள், அரட்டை அடிப்பவர்கள் அத்தனை பேரும் சந்தோஷ மனநிலையில் இருக்கிறார்கள் என எண்ணுகிறீர்களா? அவரவர் ஆயிரம் பிரச்சனைகளோடு அவற்றிற்கு ஒரு வடிகால் தேடி தான் இங்கே வருகிறார்கள். உங்களை போன்ற தோழிகள் இங்கே சொல்லி விட்டீர்கள். சொல்லாதவர்கள் எத்தனை பேரோ?

என் அக்காவின் வாழ்விலும் இது போன்ற இதைவிட மோசமான விளைவுகளை சந்தித்துள்ளவள் என்ற முறையில் சொல்கிறேன். இது போன்ற சூழ்நிலையை நெருங்கிய மற்றுமோர் தோழி வாழ்விலும் பார்த்திருக்கிறேன். என்னால் முடிந்த தீர்வுகளையும் தேடி தந்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். எல்லாவற்றிற்கும் தீர்வு என்பது உண்டு. அதை எப்படி நாம் கண்டறிந்து பிரச்சனையை களைகிறோம் என்பது தான் முக்கியம். இதற்காக என்னை பெரிய இது..அது என்று எண்ணிவிடவேண்டாம். சமயங்களில் பெற்ற பிள்ளைகளே தகப்பனுக்கே தகப்பனாகி போய் விடுவார்கள். அதே முறையில் தகப்பனாக நின்று தீர்த்து வைத்துள்ளேன் என்று சொல்ல வந்தேன்.

தோழி கார்த்திகா சொன்னது போல, இனிமேல் உங்கள் கணவர் உங்களை அடித்தாலோ, தாலியை கழட்டி எறிந்தாலோ கொஞ்சம் கடுமையாகவே எதிர்ப்பை தெரிவியுங்கள். அப்படி கழட்டுவதாக இருந்தால், யார் முன்னிலையில் கட்டினாரோ அவர்கள் முன்னிலையிலேயே கழட்டி எறிய சொல்லுங்கள். மெத்த படித்தவரென்பதால் கொஞ்சமாவது மான மரியாதைக்கு கட்டுப்படமாட்டாரா? அதனால் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்.

தான்யா, இன்னும் எனக்கு இது குறித்து யோசனைகள் வந்தால் தொடர்ந்து தருகிறேன். இதுவரை நான் சொன்னது எதாவது உங்கள் மனதை வருத்தப்படுத்தியிருந்தால், நானும் அதற்கு வருந்துகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தான்யா... குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி........... என்வே தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் நிமிர்ந்து நில் .என்பதற்கேற்ப துவண்டு போயிடாமல் துணிந்து நில்லுங்கல் தோழி அறிவிரை சொல்ல அனுபவம் போதவில்லை என்றாலும் சொல்கிறேன், உங்க கணவருக்கு பிடிக்காத செயல்களை செய்யுற்தில் இருந்த்து தவிர்ந்து கோங்க, தவறு அவங்க பக்கம் இருந்தாலும் சாரி, சாரி என்று அடிக்கடி சாரிகேளுங்க. உங்களுக்கு தெரியும் நீங்க ரைட் என்று இதை யாருக்கும் படம் பிடித்துக் காட்ட வேண்டிய தேவையில்லை ,கணவர் வேலைவிட்டு வரும் போது அவரை அன்பா சிரிச்ச முகத்தோட எதிர்கொள்ளுங்க இரசையான விடயங்கள் பற்றி அவர்கூட பேசுங்க அவருக்கு என்ன கலர்ல ட்ரெஸ் ப்ண்ணினா அழகா இருக்கும் முடி எப்படி வெட்டினா அழகா இருக்கும் என்பதை பேச்சு வாக்கில் சொல்லுங்க ,என் மனைவி என்னை எப்படி ரசிக்கிறா என்பது கொஞ்சமாவது புரியாதா? கணவர் சொந்தங்களை எண்ணி மனம் கலங்கவே வேண்டாம் தடுக்கி வீழ்ந்தாலும் கைகொட்டி சிரிக்கும் மனிதர்களே அதிகம் உண்டு கைதூக்கி விட சிலரே உண்ண்டு அந்த சிலரில் அறுசுவைத்தோழிகள் இருக்கிறோம், கலங்க வேண்டாம். சும்மா இருக்கும் போது ஏதாவது புக்ஸ் படிங்க கார்ட்னிங் இட்ரெச்ட் இருந்தா அத செய்யுங்க , பூக்கள் பார்க்கும் போதும் மனசுக்கு இதமாயிருக்கும், “எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு’

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்க பதிவ படிக்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது. வீட்டுக்கு வீடு வாசப்படி. என்ன பண்ண ? ஆனா நாம தான் எக்காரணத்துக்காகவும் சோர்ந்து போக கூடாது. முதலில் அழுவதை விடுங்கள். என்னை பொறுத்தவரை உங்கள் மாமியார் வீட்டில் யார் முன்னாடியும் எதற்காகவும் அழுகாதீங்க and கவலை படாதீங்க. உங்களுக்குன்னு ஒரு நல்லா வேலை தேடுங்க. வேலைக்கு போனாலே போதும் உங்க மன கஷ்டம் பாதி போய்டும். உங்க மேல நீங்க முதல்ல நம்பிக்கை வைங்க. நம்மளால தான் மத்தவுங்க பைத்தியம் ஆகணும். நாம ஏன் மத்த uselessக்காகவெல்லாம் பைத்தியம் ஆகணும். confidence boss confidence boss . மத்தவுங்க பேசும் போது உங்க ரெண்டு காதையும் use பண்ணுங்க. ஒண்ணுல வாங்கி ஒண்ணுல விட்டிருங்க. ஆரம்பத்துல இது ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா போக போக பழகிடும். உங்கள ஏதாவது குறை சொல்றாங்களா அத காதிலேயே வாங்கிகாதீங்க. உங்கள சுத்தி இருக்குறவுங்க தான் பைத்தியம். lifela குழந்தை மட்டும் தான் வேணுமா ? எவ்வளவோ இருக்கு. உங்க கணவர் கிட்ட நாமலே இப்படி சண்டை போட்டிட்டு இருக்கோம் இதுல குழந்தை வேற வந்து கஷ்டப்படனுமா ? முதல்ல நாம நல்லா இருப்போம்னு சொல்லி புரிய வைங்க. நீங்க அவர் கிட்ட மனசு திறந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசுங்க. சும்மா சைக்கிள் கேப் கிடைச்சாலும் ஆட்டோ என்ன ஹெலிஹோப்டேரே ஓட்டிடுங்க.

தன்னம்பிக்கையோட இருங்க. தைரியமா இருங்க. நீங்க யாரால பைத்தியம் ஆகுரீன்களோ அவுங்கள நீங்க பைத்தியம் ஆக்குங்க. ரொம்ப கஷ்டமா இருக்கும் போது தனியா ரூம்ல போய் கதவ சாத்திகிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு நல்லா சத்தமா அழுது எல்லாத்தையும் கொட்டி தீத்திடுங்க. தினமும் உங்க கூட நீங்களே பேசி உங்க தைரியத்த வளர்த்தக்கோங்க.

(ஏதாவது தப்பா நீங்க கஷ்டபடுற மாதிரி பேசி இருந்தா மன்னிப்பாயா ?)

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்