ஆரோக்கிய வாழ்விற்கு

இந்த இழையின் நோக்கம் இன்றைய நவீன உலகில் உணவு முறை பழக்க வழக்கங்களை எப்படி மாறிக் கொண்டால் நல்லது என்று தெரிந்து கொள்ளத் தான்.
முன்பு போல் அல்ல இன்று ஒரு வீட்டில் ஒரு பிள்ளை அல்லது ரெண்டு பிள்ளை அதனால் அவங்க பங்கு பாட்டி பங்கு அதுக்கும் மேல அம்மா பங்குன்னு ஆசையை சாப்பாடா ஊட்டி ஊட்டி எல்லாம் பூசணிக்காய் போல ஆகிட்டிருக்கு குழந்தைங்க.அதையெல்லாம் இன்றைய அம்மாக்கள் கண்டுகொள்வதாகவோ ஒரு பொருட்டாக எடுப்பதாகவோவும் தோணலை என் பிள்ளை வாய் எப்பவும் அசை போட்டுட்டே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்..நாளை இதனால் குழந்தைக்கு வரப் போகும் உடல்நலக் கேடு என்பது யோசிக்க வேண்டியவிஷயம்.
ஒரு 15 வருஷம் முன்பு வரை கூட ஓரளவு ஆரோகியமாக சாப்பிட்டு வளர்ந்து பழகியது மெல்ல மாறி சதா என்னேரமும் பீட்சா,கே ஃப் சி,மேக் என ஜன்க் ஆகி விட்டது.அது மட்டுமல்லாது இன்னும் அதுக்கும் மேல என்ன ஊட்டலாம் என்று மிச்சமீதி உள்ள கேப்பை நாமும் சிக்கன் மட்டன் மீன் வறுவல் சில்லி என்று நிறப்பி விடுகிறோம்...இந்த நிலை இப்படியே தொடர்வது பின்னாளில் வாயில் நுழையாத பேர் கொண்ட பல நோய்களும் நமது அடுத்த தலைமுறைக்கும் வந்து விடுமோ என்ற பயம் ரொம்பவே அதிகமா இருக்கு.
நாம எல்லோரும் அவரவர் வீட்டில் ஆரோக்கிய வாழ்விற்காக என்னென்ன முயற்சி எடுக்கிறோம் என்று இங்கு பகிர்ந்து கொள்ளுவோம்.

நல்ல இழை....தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட பழக்கப்படுத்தியுள்ளேன். ( for kids).

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

தளிகா எனக்கும் இதை பத்தி நிறைய சொல்ல இருக்கு. இங்கே இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் புஷ்டியாக தான் இருக்கும்.
சிலர் குழந்தைக்கு எவ்வளவு சாப்பாடு கொடுக்கிரதுன்னே தெரியாமல் கொடுப்பாங்க. கேட்டால் அது இன்னமும் வாயை திறந்து வாங்குது எப்படி நிறுத்த முடியும் என்று சொல்லி பெரியவங்க சாபிடற மாதிரியே ஊட்டுவாங்க. என்கிட்டே ஒருத்தர் கேட்டார் ஒரு வயது குழந்தைக்கு நான் ஒன்னரை இட்லி தான் தரேன் போதுமா என்றார்? எனக்கு சிரிப்பு தான் வந்தது. அது நாலு வாய் வாங்கினாலே போதும். குழந்தைக்கு எப்பவுமே எவ்வளவு சாப்பிடவேண்டும் என்று தெரியாது. அவர்களுக்கு கண் அளவு தான் எல்லாம். நாம் தான் கட்டுப்படுத்தணும். குழந்தை தானே என்று இப்போதே அவர்களின் வயித்தை பெரிதாகி விட்டு பெரியவர்களானதும் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் லோ லோ என்று அலைவார்கள்.

சாப்பாடு நேரம் முடிந்ததும் ஏதாவது நொறுக்குத் தீனி கேட்டால் நான் தருவதே இல்லை. சில மணி நேரங்கள் கழித்து என்றால் தருவேன். அதுவும் பழங்கள் காரட் வெள்ளரி என்றால் உடனே கூட தருவேன். காய் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சாப்பட்டுடனே காய்கறிகளை பிசைந்துக் கொடுக்கலாம். நான் அப்படி தான் தருவேன். முட்டை கூட அடிக்கடி கிடையாது. நான் வெஜ் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை தான். அதுவுமே பிஷ் அல்லது சிக்கன். ரெட் மீட் எப்போவாது தான். நட்ஸ் கொடுத்தாலும் அதிக பட்சம் ஐந்து எண்ணிக்கை தான். ரெய்சின்ஸ் பிஸ்தா வேர்க்கடலை பொட்டுக்கடலை என்றால் கொஞ்சம் அதிகமாகவே தருவேன். சிப்ஸ் பிஸ்கட் இதெல்லாம் எப்போவாது தான். முன்னெல்லாம் வெளியில் சென்றால் பிரெஞ்சு பிரைஸ் தான் ...இப்பொழுது எம் என்ற எழுத்தை பார்த்தாலே வண்டியை அந்த பக்கமா விடுறோம். நேற்று கூட கடைக்கு கூட்டிட்டு போகும் போது சாப்பிட ஆப்பிள் மற்றும் காராமல் சாஸ், காரட் ரான்ச், லோ பாட் சாக்லேட் மில்க் வாங்கி கொடுத்தேன். அழுதார்கள் தான் இருந்தாலும் இது சாப்பிடுவதாக இருந்தால் ஷாப்பிங் செய்யலாம் இல்லையென்றால் நட வீட்டுக்கு என்றேன்....கப்சிப்.

நான் அடிக்கடி யூடூபில் இருக்கும் ஜன்க் புட்ஸ் வீடியோ போட்டு காட்டுவேன். அதன் விளைவு நண்பர் வீட்டுக்கு போயிருந்தோம். என் மகள் கொய்யா பழம் சாப்பிட்டு இருந்தாள், அவரோ காண்டி கொடுத்தார், இவள் அது ஜன்க் புட் வேண்டாம் என்றாள். விஷயம் என்னனா நான் அவளையே பார்த்துட்டே இருந்தேன் அதனால் இல்லைனா வாங்கி வாயில் கமுக்குமா போட்டிருப்பாள். இப்படி குழந்தைகள் சொல்லுவதால் அடுத்த முறை அவர்களும் ஸ்வீட்ஸ் கொடுக்க தயங்குவார்கள் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி ராஜி லாவண்யா

இதை தான் எதிர்பார்த்தேன் மற்றவர்கள் சொல்லும்போது தான் நமக்கும் ஒரு ஆர்வம் வருது.சும்மா வேடிக்கைக்காக சொல்லலை நிஜமாகவே என்னை சுற்றி நான் பார்க்கும் பிள்ளைகள் எல்லாமே இது குழந்தைங்க தானா என்று சந்தேகப்பட வைக்குமளவு சாப்பிடுறாங்க.இந்த வயசில் என்னால் சாப்பிட முடியாத அளவுக்கு இரட்டி சாப்பிடுறாங்க.எனக்கு தெரிஞ்ச பல வீட்டிலும் இங்கு ஒரே வேளையில் மட்டன் குழம்பு,முட்டை,சிக்கன் வறுவல் தான்.ஒரு வீட்டில் தினம் இரண்டு சிக்கன் மதியம் ஒண்ணு இரவு ஒண்ணு அது இல்லாமல் என் மகன் சாப்பிட மாட்டானாம்.அதெல்லாம் பார்க்கையில் ஒரு வித வருத்தம்
எங்க வீட்டிலும் ரொம்பவே மாற்றி விட்டோம்.முன்பு அடிக்கடி நான் வெஜ் சமைத்துக் கொண்டிருந்தோம் இப்போ மீன் மட்டும் தான் அடிக்கடி மற்ற கறிவகைகள் எல்லாம் தவிர்த்து சிக்கன் மட்டும் எப்போவாவது என்றாகிவிட்டது..அதிகம் கடலை,பருப்பு,தானியம் என சமைச்சுடுவோம்..என் குழந்தைகளுக்கும் பெரிசா விருப்பமில்லாததால் வசதியா போச்சு..மிட்டாய்,இனிப்பு ,சிப்ஸ் என்னும்போது அதுவும் ரொம்பவே குறைத்து விட்டேன்.அப்படியே தவிர்க்க முடியாது தான் ஏனென்றால் குழந்தைகள் அவர்களை சுற்றி அதையே பார்த்து ஆஅஹ் ந்னு உக்காந்திருக்க கூடாதில்லையா..அதனால் ஏங்க விடாமல் எப்போவாவது கொடுத்து அது அதிகம் சாப்பிடக் கூடாது என்றும் சொல்லுவேன்.
ஆம் லாவ்ண்யா சில குழந்தைகளுக்கு அள்வெல்லாம் தெரியாது சாப்பிட்டுட்டே இருப்பாங்க நாம தான் சின்னதிலேயே கட்டுப்படுத்தனும் வயிறை வளர்த்து விட்டு பின்னாடி ரெண்டு ஓட்டம் ஓடவே கஷ்டப்படுவாங்க.
குறிப்பா ஒரு ஆறு மாச குழந்தை என்று வச்சுக்குவோம் அப்போ தான் நிறைய அம்மாக்கள் தவறு செய்கிறோம் சில குழந்தைகள் சாப்பிடாது சில குழந்தைகள் கொடுப்பதெல்லாம் சாப்பிடும் உடனே சந்தோஷத்தில் கப் கப்பா நிறைச்சு விட்டுடுவாங்க அல்லது இன்னும் சிலர் மூச்சு முட்ட அழுக அழுக கொடுத்து நிறப்புவாங்க..இது ரொம்ப தப்பு..குழந்தைகளுக்கு எவ்வளவு சாப்பிடலாமோ அதை விட அதிகமா தினிப்பது ரொம்ப கேடு.அப்பவே அவ் அவங்களுக்கு ஒவ்வொரு நோயா கொடுத்துட்டே இருக்கோம்.
ஆறு மாச குழந்தைக்கு 4 ஸ்பூன் சாப்பாடே தாராளம் இன்னும் சாப்பிடுதா ஒரு 1/2 கப் ஆனால் அதையும் மீறி புஷ்டியாக்கவே நிறைய ஊட்டி ஊட்டி பார்க்க குழந்தை அழகா தான் இருக்கும் ஆனால் உடலுக்கு ரொம்ப கேடு
இன்னும் சில வீடுகளில் ஒல்லியா குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைக்கு ரொம்ப வறுத்ததும் பொரித்ததும் எண்ணையும் ஐஸ்க்ரீமும் இனிப்புமா கொடுப்பாங்க உடம்பை தேத்த வேண்டுமென்று..ஒல்லியா இருந்தாலும் குண்டா இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.
நானும் முன்பு இந்த தவறு செய்திருக்கிறேன் கட்டாயப்படுத்தி குழந்தைகளை சாப்பிட வைப்பது..இது எவ்வளவு பெரிய கேடு என்று தெரிந்த பின் செய்வதில்லை மனசில் டென்ஷனும் இல்லை.முன்பு சாப்பிடாட்டி மனசு கேட்காது இப்போ அப்படியில்லை பசித்தால் எப்படியும் சாப்பிடும் என்று நிம்மதியா இருக்கேன்.
இப்போ இனி நான் சொல்ல போவதெல்லாம் சொந்த கருத்துமட்டுமில்லை நான் கேட்ட படித்த மற்றும் சில வகுப்புக்களுக்கு போன அனுபவத்தையும் சொல்லிடுறேன்.பிறகு..

குழந்தைகளை நேரமெடுத்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்..அதாவது ஒரு மணிநேரம் இல்லை ஆனால் சீக்கிரம் நம்ப வேலையை முடிப்பதற்காக முழுங்கு முழுங்கு என்று முழுங்க வைப்பதும் தண்ணி குடிச்சு இறக்க வைப்பதும் அடிச்சு திட்டி சாப்பிட வைப்பதும் ரொம்ப தவறு உணவு அவங்க உடம்பில் ஒட்டவே ஒட்டாது ஜீரணமாகாது சாப்பாடு மேல் ஆர்வம் வராது உணவில் உள்ள சத்துக்களும் முழுமையா கிடைக்காது.பொறுமையா அதுங்க வாயில் வச்சுட்டு உம்முன்னு உக்காந்திருக்கும் திட்டாமல் சில நிமிஷம் விட்டு இறக்கிய பின் அடுத்தது வாய் கொடுக்கலாம்.பல் உள்ள குழந்தைகளை நல்ல மென்னு சாப்பிட சொல்லி உற்சாகப்படுத்தலாம்.சாப்பிடும்போதே தண்ணி குடிச்சு குடிச்சு இறக்க கூடாது

என் பொண்ணு எவ்ளோ நேரம் ஆனாலும் சாப்பாட்டை வாய்லயேதான் வைத்திருப்பா. அப்போ நான் என்ன செய்ய ?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க மென்னு சாப்பிட நியாபகப்படுத்துங்க எதாவது மும்முறமாக வேறு பக்கம் கவன்ம் இருப்பதால் தான் வாயில் வச்சிட்டு மறந்துடறாங்க போல டிவி ஆஃப் பண்ணி விடுங்க நடந்து சாப்பிட அனுமதிக்காதீங்க இப்போ சாப்பிடுவதை தவிற நமக்கு வேற வேலை இல்லை என்பதை புரிஞ்சுக்குவாங்க.பசி இருந்தா கண்டிப்பா நாம சொல்லாமலே இறக்கி விடும்..நமக்கு தான் பயன் அய்யோ என் குழந்தை சாப்பிடவே சாப்பிடாது என்று அப்படியெல்லாம் இல்லை யாருமே பசிச்சா தானா உணவை தேடி தான் போவோம் கொஞ்சம் பசியின் அருமையையும் அவங்களை புரியவிட்டால் தான் உணவின் மேல் ஆர்வம் வரும்

மேலும் சில பதிவுகள்