சிக்கன் சிந்தாமணி

தேதி: March 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

சிக்கன் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
சிவப்பு மிளகாய் - 10
தேங்காய் - அரை மூடி
கடலை எண்ணெய் - 25 மி.லி


 

சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும். தேங்காயை துருவவும்.
கடலை எண்ணெயில் வெங்காயம் மற்றும் மிளகாயை நன்கு வதக்கவும்.
அதில் சிக்கனை சேர்க்கவும்.
சிக்கன் நன்கு வதங்கி அதிலுள்ள தண்ணீர் வற்றிய பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
நன்றாக வெந்த பின்பு தேங்காயை சேர்க்கவும். தேங்காயை சேர்த்த உடன் இறக்கி விடவும்.
சுவையான, காரசாரமான சிக்கன் சிந்தாமணி தயார். சாதத்திற்கும், தயிர் சாதத்திற்கும் மிகவும் அருமையான சைட் டிஷ். இதில் காரம் அதிகமாக தான் சேர்க்க வேண்டும் அது தான் சுவை தரும். இதே முறையில் மட்டன், கைமா, நாட்டுக்கோழியிலும் சிந்தாமணி தயார் செய்யலாம். மட்டனில் பச்சை மொச்சை சிறிது வேக வைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு. பள்ளிபாளையம் சிக்கன் போலவே இருக்கு செய்முறை. :) காரமா இருந்தாலே நான் வெஜ் தனி சுவை தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிக்கன் சிந்தாமணி நல்ல பெயர்.. செய்முறை மிக எளிதாக இருக்கிறது, காரமா இருப்பதால் கொஞ்சம் இருந்தாலே மீல்ஸ் முடித்துக்கொள்ளலாம்... நல்ல குறிப்பு.. வாழ்த்துக்கள்...

"எல்லாம் நன்மைக்கே"

கம்மியான பொருட்களை வைத்து நல்ல டிஷ் குடுத்து இருக்கீங்க.பேரும் வித்தியாசமா இருக்கு.வாழ்த்துக்கள்.

குறைவான பொருட்களை வைத்து காரசாரமான ரெசிப்பி நல்லா இருக்கு. இதே மாதிரி ஆசியா உமர் மேடம் சிக்கன் சிந்தாமணி ரெசிப்பி கொடுத்து இருக்காங்க. இது கோயமுத்தூர் ஸ்பெஷலா?

very nice receipe
good combination with rice

தேங்காய் துருவி போடாம கட்செய்து போட்டேன், மிகவும் சுவையாக இருந்தது..:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.