தேதி: March 8, 2012
தெர்மாக்கோல்
ஐஸ்க்ரீம் ஸ்டிக் - 17
பச்சைநிற உல்லன் நூல்
பெவிக்கால்
சிறிய பொம்மை
கத்தரிக்கோல்
பேப்பரிக்/போஸ்டர் பெயிண்ட் - ப்ரவுன் நிறம்
ரிப்பன் லேஸ்
கத்தி
தடிமனாக உள்ள தெர்மாக்கோல் ஒன்றில் 11 செ.மீ x 8 செ.மீ அளவில் ஒரு செவ்வக வடிவம் வரைந்து கத்தியால் வெட்டி எடுத்துக் கொள்ளவும். 7 ஐஸ்க்ரீம் குச்சியின் இருப்பக்கமும் ப்ரவுன் நிறத்தில் பெயிண்ட் செய்யவும். இரண்டு குச்சியில் மட்டும் பெயிண்ட் செய்யாமல் வைக்கவும்.

பச்சைநிற உல்லன் நூலை சிறு சிறு துண்டாக கத்தரிக்கோலால் நறுக்கி வைக்கவும். தெர்மாக்கோலின் மேல் பெவிக்கால் தடவி நறுக்கி வைத்துள்ள உல்லன் நூலை புற்களை போல் பரப்பி விடவும்.

8 ஐஸ்க்ரீம் ஸ்டிக்கின் ஒரு பக்கத்தில் மட்டும் போஸ்டர் கலர் ப்ரவுன் நிறத்தை பெயிண்ட் செய்யவும்.

தெர்மாக்கோலின் நீளப்பக்கத்தில் முன்னும், பின்னும் இரண்டு, இரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகளை பெவிக்கால் வைத்து ஒட்டவும். இதேப்போல் வலது, இடது பக்கத்திலும் 8 செ.மீ அளவில் நறுக்கி எடுத்துக் கொண்டு ஒட்டி காயவிடவும்.

உல்லன் நூல் ஒட்டிய இடத்தில் மேல் வலது, இடது ஓரங்களில் நடுவில் ஒவ்வொரு ஐஸ்க்ரீம் குச்சியை சொருகி விடவும்.

ஐஸ்க்ரீம் குச்சியின் வளைவுவான இரு முனைகளை கத்தரிக்கோலால் வெட்டி விடவும். இரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகளை பொம்மை உட்காருவதற்கு போதுமான இடைவெளிவிட்டு வைக்கவும். அந்த பொம்மையின் வலது, இடது ஓரங்களில் ஐஸ்க்ரீம் குச்சி அகலம் அளவுக்கு இடைவெளிவிட்டு விட்டு மீதி பாகங்களை வெட்டி விடவும்.

ஐஸ்க்ரீம் குச்சியை வலது, இடது ஓரங்களில் அகலம் அளவிற்கு வெட்டி எடுத்து பெவிக்கால் தடவி ஒட்டி, சிறிய பலகை போன்று அமைத்துக் கொள்ளவும்.

ஐஸ்க்ரீம் குச்சியில் செய்த பலகையில் ஒரு பக்கத்தின் முன்னும், பின்னும் பெவிக்கால் வைத்து ரிப்பன் லேஸை சுற்றி தேவையான உயரத்திற்கு வளைவாக வைத்து பார்த்து விட்டு மீதி லேஸை நறுக்கி விடவும். லேஸின் ஒட்டாமல் இருக்கும் பகுதியை பலகையின் அடியில் பெவிக்கால் வைத்து ஒட்டி காயவிடவும்.

மற்றொரு முனையையும் இதுப்போல் சுற்றி எடுத்து கொள்ளவும்.

விருப்பமான பொம்மையின் அடியில் பெவிக்கால் தடவி பலகையின் மேல் வைத்து ஒட்டவும்.

முன்பு பெயிண்ட் செய்து வைத்துள்ள ஐஸ்க்ரீம் குச்சி ஒன்றை எடுத்து, ஊஞ்சலின் சங்கிலியாக உள்ள ரிப்பன் லேஸ் வழியாக விடவும். இதனை புற்கள் போல் செய்து வைத்துள்ள மேடையின் இரு பக்கங்களில் உள்ள ஐஸ்க்ரீம் குச்சியின் மேல் வைத்து ஒட்டவும்.

விரும்பினால் இன்னும் ஒரு நான்கு ஐஸ்க்ரீம் குச்சியில் பெயிண்ட் செய்து படத்தில் உள்ளது போல் வலது, இடது ஓரங்களில் முன்னும், பின்னும் வைத்து ஒட்டவும். ஐஸ்க்ரீம் ஸ்டிக் ஊஞ்சல் ரெடி.

Comments
ஐஸ்க்ரீம் ஸ்டிக் ஊஞ்சல்
சோ க்யூட். அருமையான ஐடியா/. வாழ்த்துக்கள். டீம்.
Aha ...வாழ்த்துக்கள்.
Aha ...வாழ்த்துக்கள்.
நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்
வாழ்த்துக்கள்
நல்ல க்ரியேடிவிடி,ரொம்ப க்யூட்டாக இருக்கு.சூப்பர்ப்.
ஐஸ்க்ரீம் ஸ்டிக் ஊஞ்சல்,
வாவ்...ரொம்ப அழகு.புல் ஐடியா... நல்லா இருக்கு.வழக்கம் போல் அருமையான கைவினை.பாராட்டுக்கள்.
ஐஸ்க்ரீம் குச்சி
வாவ் ரொம்ப அழகா இருக்கு பச்சைப்பசும் புல் தரை.... கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு .பிள்ளைகளுக்கு நல்ல கைவேலை காட்டிக்கொடுத்திருக்கிறீர்கள் நன்றி. ஆனாலும் ஒரு சந்தேகம் “தெர்மாக்கோல்” என்பது என்ன “ரெஜிபோமா”/.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
ஊஞ்சல்
ஹை! குட்டி ஊஞ்சல்ல க்யூட் பிள்ளையார். ;)
பிடிச்சு இருக்கு எனக்கு. யாருக்காச்சும் பண்ணிக் கொடுக்கணும்.
பூங்காற்று... ஆமாம், 'தெர்மாகோல்' ரெஜிஃபோம்தான். ;)
- இமா க்றிஸ்
ஐஸ்க்ரீம் ஸ்டிக் ஊஞ்சல்
கைவேலை மிகவும் அழகாக இருக்கிறது அறுசுவை டீம். பாராட்டுக்கள்.
நன்றி
பாராட்டிய அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.
இமாம்மா இது பிள்ளையார் கிடையாது. குட்டியானை அமர்ந்து கொண்டு ஹாய் சொல்லுவது போல் உருவம் கொண்ட பொம்மை. பிடிச்சு இருக்கா ரொம்ப எளிதுதான் செய்து பாருங்க. காற்று வீசும் திசையில் வைத்தால் தானாகவே ஆடிக் கொண்டிருக்கும்.
ரேவதி, பத்மா
ரொம்ப கியூட் :) அந்த பொம்மை இன்னும் அழகு. நான் இது போல் ஒரு கைவினை எங்கோ பார்த்தேன். அவர்கள் குட்டி க்ரிஷ்னர் வைத்திருந்தாங்க. கூடவே இது போல் இல்லை, தொட்டில் போல் செய்திருந்தாங்க. அதை விட இது பளிச்... ரொம்ப அழகா இருக்கு. அதை பார்த்த போது செய்ய தோனல, ஆனா இதை பார்த்ததும் செய்ய தோனுது. உள்ள இருக்கு குட்டியானை சரியான அழகு... சிரிச்ச முகமா இருக்கார்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
டீம்ம்ம்.. ;)
//இது பிள்ளையார் கிடையாது. குட்டியானை// ம். ;) எனக்கு யானைன்னா பிள்ளையார்தான். பிள்ளையாரை ரொம்பப் பிடிக்கும். ;) சொல்லிட்டீங்கல்ல, செய்துருறேன். கொடுக்கிறதுக்கு யாராச்சும் கண்டுபிடிக்கணும்.
- இமா க்றிஸ்
ICE CREAM STICK UNJAL
MIKA ALAKU, NAN PUDIVAL, NANNUM TRY PUNARAN
.ந்ல்லா இருக்கு.வாழ்த்துகள்
.ந்ல்லா இருக்கு.வாழ்த்துகள்
SUPER
NALLA IRUKUDHU NICE.