சின்ன அம்மை ஆலோசனை

தோழிகளே என் 3 வயது மகளுக்கு சின்ன அம்மை வந்திருக்கிறது.அவளுக்கு எல்லா தடுப்பூசியும் போட்டும் இப்பொழுது வந்திருக்கிறது.
நான் இங்க தனியாக இருக்கிறேன் எனக்கு உங்கள் ஆலோசனை தேவை அம்மை வந்தாள் என்ன செய்வது,செய்ய கூடாது மருத்துவரிடம் கேட்டோம் வந்து
ஒரு ஊசி போட்டு கொள்ள சொன்னார்கள்.ஆனால் சிலர் மருத்துவரிடம் போக கூடாது என்று சொல்கிறார்கள்,நான் வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து அந்த
கொப்பளங்களின் மேல் தடவலாமா அப்படி செய்தால் இன்னும் அரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இது எத்தனை நாள் தங்கும் எனக்கு 1 வயதில் இன்னொரு மகளும்
உள்ளாள்.ஆனால் அவள் இப்பொழுதுதான் அதிகமாக அக்காவுடன் ஒட்டி ஒட்டி விளையாடுகிறாள்.என்னால் ஒண்ணும் செய்ய முடியவில்லை.எனக்கு இது முதல் அனுபவம்
யாரும் இல்லாமல் எனக்கு மிகவும் குழப்பமாகவும் உள்ளது கொஞ்சம் தெரிந்தவர்கள் முடிந்தவரை உடனடியாக பதில் கூறுங்கள் நேற்று முதல்
உள்ளது.உதவுங்கள்.

வனிதா அக்கா ரொம்ப நன்றி நானும் கவனமாதான் பாத்துக்குரேன் ஆனா எனக்கு இது முதல் அனுபவம் அதான் கொஞ்சம் பதட்டம்
உங்க பையனுக்கு இப்போ எப்படி இருக்கு அக்கா எத்தனை நாள் இருந்தது.எனக்கும் ஒடம்பும் சரி இல்லை தனியா ரொம்ப கஷ்டமா இருக்கு சனா
ரொம்ப மோசமா அவகூட ஒட்டிகிட்டே இருக்கா அம்மா இல்லாத கஷ்டம் ரொம்ப வருது.

கவலை வேணாம்... சரி ஆயிடும். அவனுக்கு இன்னும் இருக்கு... இன்னைக்கு தான் மூன்றாவது நாள். இப்ப தான் இரவில் தூங்கவே ஆரம்பிக்கறான்... இத்தனை நாள் இரவெல்லாம் அழுவான். எனக்கும் இது தான் முதல் அனுபவம்... கொஞ்சம் பயந்து தான் போனேன், ஆனா இப்போ இல்லை. சரி ஆகிடும். யாரும் இல்லன்னா கொஞ்சம் கஷ்டம் தான் தனியா பார்க்குறது. என்ன செய்ய, நாம தானே பார்த்தாகனும். சரி ஆயிடும் இன்னும் 2 நாளில் அப்பரம் ஃப்ரீ ஆயிடுவீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லா கேள்விக்கும் எனக்கு உடனே உடனே பதில் தந்து எனக்கு ஆறுதலா இருந்ததுக்கு முதல்ல நன்றி.இவ நைட்ல கொஞ்சம் அழுவுரா கொஞ்சம் தூங்குரா.
நான் பாக்காத போது சொரிஞ்சிட பாக்குரா ரொம்ப போராடி புடிச்சி வெச்சிருக்கேன்.அப்படி சொரிஞ்ச நிறைய வருமா.ரொம்ப கேள்வி கேட்டே இருக்கேன் சாரி அக்கா

நீர் கட்டி மாதிரி வந்தா அது முக்குளிப்பான் அம்மை, மனல்வாரி(விளையாட்டு அம்மா) மேல் எல்லாம் தடிப்பு தடிப்ப சிவந்து இருக்கும் அது தான் விளையாட்டு அம்மா மூன்று நாள்ல சரி ஆகிடும். உங்க குழந்தைக்கு முக்குளிப்பான் போட்ருக்கு. அரிப்பு ஊசி போடலாம் தப்பில்லை. நீங்க அம்மை போட்ருக்கு கடவுள் விஷயம்னு நெனச்சா சாமிக்கு காசு எடுத்து முடிந்து வச்சுட்டு ஊசி போடுங்க அப்போதான் அரிப்பு குறையும். நல்ல வெள்ளை நிற காட்டன் துணியில் திருநீர் வைத்து மடித்து கட்டிகள் இருக்கு இடத்தில் தடவி விடுங்க. இது நீரை உரிந்துடும். குழந்தைய சொரிய விடாம நீங்களே வேப்பிலை வைத்து லேசாக தடவி விடுங்க இதமா இருக்கும். வயுறும் வெந்து போயிருக்கும், அதனால சூடாக எதுவும் குடுக்காதிங்க. ஜவ்வரசி பாயசம் செய்து குடுங்க, தேங்காய் பால் சேர்த்து வயிறு மற்றும் வாய் புன்னுகள் சரியாகிடும். இப்போ இளநீர் குடுக்க கூடாது , அம்மை குறையுற போதுதான் குடுக்கணும். கட்டி நல்லா அமுங்கி காய ஆரம்பிக்கும் பொழுது குளிப்பாட்டலாம். பால் மற்றும் திராட்சை பழம் நிறைய குடுங்க. அம்மை இறங்கின பிறகு ரொம்ப பசிக்கும் குழந்தைக்கு சாப்பாடு நிறைய குடுங்க. அம்மை இறங்கின பிறகும் கொஞ்ச நாளைக்கு ரொம்ப வெயிலில் கூட்டிட்டு போக வேண்டாம்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

என் பொன்னுக்கும் அம்மை போட்டு இருக்கு. நான் என் பொன்னுக்கும் நான் செய்வதை சொல்றேன். குழந்தைக்கு வேப்பிலை போட வேண்டாம். தண்ணீர் ஊற்றும் போது தேய்க்கவும். ஊசி போட வேண்டாம். நகம் வெட்ட வேண்டாம். மோர் குடிக்க கொடுக்கவும். அரிக்கும் போடு வேப்பிலையால் தடவி விடவும். சின்ன வெங்காயம் கொடுக்கவும். தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொடுக்கவும்.தண்ணீர் ஊற்றும் போது வேப்பிலை, சின்ன வெங்காயம், மஞ்சள் மற்றும் கொஞ்சம் வெண்ணைய் சேர்த்து அரைத்துக் தடவவும். காரம், புளி, உப்பு சேர்க்க வேண்டாம்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

வனி பையனுக்கு இப்போ எப்படி இருக்கு. கண்டிப்பா தேங்காய் பால் கலந்த ஜவ்வரிசி பாயசம் குடுங்க. வெளியில் எப்படி கட்டிகள் இருக்கோ அதேபோல் வாய் மற்றும், வயிற்றின் உள் இருக்கும்.
ராதிகா சொரிந்தால் ரொம்ப வராது ஆனால் தழும்பு வரும். அதனால் முடிந்த வரைக்கும் சொரிய விடாமல் பாத்துக்குங்க.
பயப்புடாதிங்க எல்லாம் சரி ஆகிடும். எனக்கு பிறந்ததில் இருந்து கல்யாணம் ஆகும் வரை வருடா வருடம் அம்மை போட்டிடும். எல்லா வகையான அம்மையும் போட்ருக்கு. அதனால் என்னோட சொந்த அனுபவத்தில் சொல்றேன் அரிப்புக்கு ஊசி அல்லது மருந்து குடுக்கலாம்

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

ithai yeppadi kulanthaikaluku varaamalirukku paathukkaapathu

வினயா இத வராமலா தடுக்க முடியாது ஒரு முறையாவது கொழந்தைங்களுக்கு வரும் அப்படி வரதும் நல்லதுதான்.வந்தா எப்படி இருக்கணும்னு
இங்க நிறைய பேரு சொல்லி இருக்காங்க அத படிச்சி பாருங்க.வந்தா கொஞ்சம் சுத்தமா இருக்கணும் அவ்ளோதான் தானா வந்த மாதிரி தானா போய்டும்

வெய்யில் காலத்தில் அதிக உஷ்னமாகாம பார்த்துக்கனும். இதெல்லாமே உடலில் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கவங்களுக்கு தான் அதிகமா வரும். நல்ல சத்தான உணவு, வெயில் சூட்டை தனிக்கும் உணவு, நிறைய நீர் இதெல்லாம் ஓரளவு இது வராம தடுக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாங்க... நேற்று அம்மாவை கேட்டேன், நான் சொன்னா பயந்துப்பேன்னு தான் விளையாட்டு அம்மைன்னு சொல்லிருக்காங்க ;( இது சின்ன அம்மை தான். குறைந்தது 7வது நாள் தான் தண்ணி ஊற்றனும்னு சொன்னாங்க. அவனுக்கு முகத்தில் வந்ததே வாயில் தான். அது 2 நாளில் சரி ஆயிடுச்சு. ஆண்டவன் அருளால் 3வது நாளே வத்த துவங்கிடுச்சு. இப்போ அதிக பிரெச்சனை இல்லை. வியாழன் தான் முதல் தண்ணி ஊற்றனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்