சின்ன அம்மை ஆலோசனை

தோழிகளே என் 3 வயது மகளுக்கு சின்ன அம்மை வந்திருக்கிறது.அவளுக்கு எல்லா தடுப்பூசியும் போட்டும் இப்பொழுது வந்திருக்கிறது.
நான் இங்க தனியாக இருக்கிறேன் எனக்கு உங்கள் ஆலோசனை தேவை அம்மை வந்தாள் என்ன செய்வது,செய்ய கூடாது மருத்துவரிடம் கேட்டோம் வந்து
ஒரு ஊசி போட்டு கொள்ள சொன்னார்கள்.ஆனால் சிலர் மருத்துவரிடம் போக கூடாது என்று சொல்கிறார்கள்,நான் வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து அந்த
கொப்பளங்களின் மேல் தடவலாமா அப்படி செய்தால் இன்னும் அரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இது எத்தனை நாள் தங்கும் எனக்கு 1 வயதில் இன்னொரு மகளும்
உள்ளாள்.ஆனால் அவள் இப்பொழுதுதான் அதிகமாக அக்காவுடன் ஒட்டி ஒட்டி விளையாடுகிறாள்.என்னால் ஒண்ணும் செய்ய முடியவில்லை.எனக்கு இது முதல் அனுபவம்
யாரும் இல்லாமல் எனக்கு மிகவும் குழப்பமாகவும் உள்ளது கொஞ்சம் தெரிந்தவர்கள் முடிந்தவரை உடனடியாக பதில் கூறுங்கள் நேற்று முதல்
உள்ளது.உதவுங்கள்.

HFMD (Hand Foot Mouth Disease) - இது என்னன்னு குழப்பமா இருக்கா?? இதை பற்றி இங்க பலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் இன்று தான் எனக்கு தெரிய வந்தது. என்னை போல் இதை பற்றி தெரியாதவங்களுக்கு உதவும் என்றே இந்த பகிர்வு.

இது ஒரு வகையான வைரஸ் தொற்று தான். பார்க்க அச்சு பிசகாம சின்ன அம்மை அல்லது மனம்வாரி என சொல்லும் வேர்குரு போன்ற அம்மையை போலவே இருக்கும். ஆனால் இது வேறு. இதை பற்றிய சில தகவல்:

ஸிம்ப்டம்ஸ்:

1. அதிகப்படியான காய்ச்சல்

2. தொண்டை வலி

3. உள்ளங்கை, உள்ளங்கால், கை விரல்களின் மேல் பகுதி, கால் விரல்களின் மேல் பகுதி, உதடு, வாய், தொண்டை, டயபர் ஏரியா - இந்த இடங்களில் சிவப்பு கொப்பலங்கள்.

4. டயபர் ஏரியா சில நேரங்களில் வராமலும் இருக்கலாம்.

5. கை, கால், வாய் என எதாவது ஒரு இடத்தில் மட்டுமே கூட வரலாம்.

இது ஆரம்பிப்பதே கை, கால் அல்லது வாயில் தான் துவங்கும். இதுவே இதை அம்மையில் இருந்து வேறு படுத்தி கட்ட உதவும். அம்மை முதலில் முகத்தில் போடும் என நம் வீடுகளில் சொல்வார்கள். ஆனால் அம்மை முதலில் முதுகு தண்டுவடத்தில் தான் வருமாம். அம்மை என்பது உடல் முழுவதும் பரவலாக வர கூடியது, ஆனால் HFMD என்பது குறிப்பிட்ட அந்த இடங்களில் மட்டுமே வருவது. ஆனால் அம்மை போலவே நீர் கட்டிகளாக தான் இருக்கும். இது பொதுவாக அரிப்பு இருக்காது. அம்மை அரிப்பு கொடுக்கும். இந்த வைரஸால் பாதிக்கப்படுவது 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிகம். சில நேரம் கர்ப்பினி பெண்கள். இதுவும் அம்மை போல் செல்ஃப் கியூரபில். அம்மைக்காவது வேசினேஷன் இருக்கு, ஆனா இதுக்கு அதுவும் கிடையாது. கிருமி தாக்கிய 3-7 நாட்களில் காய்ச்சலை தொடர்ந்து இவை வெளிப்படும். வந்தால் 7 - 10 நாட்களில் மறைந்து போகும். மருந்து தேவை இல்லை.

இந்த நோய் வந்தால் சாப்பிடுவது சிரமமாகும். வாய் முழுக்க வரும் என்கிறார்கள். இதுவும் உஷ்னத்தால் வெய்யில் காலத்தில் ஏற்படுவதே. அதனால் அம்மை வந்தால் கொடுப்பது போல் இதுக்கும் நிறைய நீர் ஆகாரம் தான் கொடுக்கனும்.

எப்படி தொற்றும்:

1. நேரடியாக நோய் தாக்கியவரை தொடுவதால்.

2. நோய் தாக்கியவரின் தும்மல், இருமல், சளி போன்றவை மூலம்.

3. மோஷன் மூலம். அதுவும் நோய் மறைந்தும் 2 வாரங்களுக்கு இதன் தாக்கம் மோஷனில் இருக்குமாம்.

4. கட்டியில் இருந்து வெளியேரும் நீர் பட்டால்.

தடுப்பது:

1. கை, காலை எப்பவும் சுத்தமா வெச்சுக்குறது. நோய் தாக்கப்பட்டவரி தொட்டால் உடனே கைகளை சோப் போட்டு நல்ல சுத்தம் பண்ணனும். டயபர் மாற்றினா உடனே சுத்தம் செய்யனும்.

அம்மை தடுப்பூசி:

முன்பெல்லாம் அம்மை தடுப்பூசி ஆப்ஷனல் வேசின். விரும்பினால் போடலாம். 1 முறை போட்டால் போதுமானது. இப்போதெல்லாம் அம்மை தடுப்பூசி கட்டாயம் 15 மாதத்தில் பிள்ளைகளுக்கு போடனும். அதுவும் 5 வருடத்துக்கு ஒரு முறை டோஸ் ரிபீட் செய்யனும். போடாதவங்க குழந்தை நல மருத்துவரை அனுகுங்க. இதனால் வரவே வராதா என்றால் நிச்சயம் சொல்ல முடியாது. என் பிள்ளைகள் எல்லாருக்கும் போட்டிருக்கு... ஆனா மகனுக்கு வந்திருக்கு. வீரியம் குறையும்... அதுவும் நண்மை தானே.

இன்று கவிசிவா பதிவை கண்டு தடுப்பூசி விஷயமாக மருத்துவரிடம் பேசியபோது இந்த வகை வைரஸ் தொற்று பற்றி கேள்விபட்டேன். உடனடியா மருத்துவரை அனுகி, என் மகனுக்கு வந்தது என்ன என கண்டரிய முயன்றேன். அப்போது இரண்டு குழந்தை நல மருத்துவர்களிடம் நேரிலும் போனிலும் பேசி சேகரித்த தகவலே இவை. உங்களுக்கும் பயன்படும் என நம்புகிறேன். :) மிக்க நன்றி கவிசிவா. உபயோகமான தகவல் எனக்கும் என் குடும்பத்தினருக்கும்.

சொல்ல மறந்த விஷயம் ஏதும் இருந்தா மீண்டும் வரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சென்னையில் தான் இருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்மை வருவதற்க்கு முன் காய்ச்சல் விடாமல் அடிக்கும்.
அம்மை கொப்புளங்கள் வந்ததும் தலையனைக்கு அடியில் வேப்பிலை வைக்க வேண்டும். வெளி ஆட்களை வீட்டிற்க்குள் அனுமதிக்க கூடாது.
ஐந்தாம்நாள், ஏழாம்நாள் அல்லது ஒன்பதாம்நாள் அம்மை முத்துக்கள் சுருங்க ஆரம்பிக்கும். அன்று மாலை தண்ணீரை வெயிலில் சிறிது நேரம் வைத்திருந்து தலைக்கு தண்ணீர் விட வேண்டும். தண்ணீர் ஊற்றிய பின் வேப்பிலை, மஞ்சள், ஆமணக்கு மூன்றையும் அம்மியில் வைத்து அரைத்து முகம் மற்றும் உடல் முழுதும் பூசி வர வேண்டும்.
புண்கள் நன்கு ஆறும் வரை பச்சை தண்ணீர் மட்டுமே ஊற்றி வர வேண்டும். அம்மை தழும்புகள் மறையும் வரை தேங்காய் கத்தரிக்காய் உணவில் சேர்க்க கூடாது.
தயிர்சாதம், மோர்சாதம், இளநி சாப்பிட தரலாம். வெங்காயம் தயிர் சாதத்துடன் சேர்ட்த்து தரலாம்.

அன்புடன்
THAVAM

வனிதாக்கா என் பொண்ணுக்கு எல்லா இடத்துலயும் கொப்பளம் இருக்கு நீங்க சொன்ன மாதிரி உள்ளங்கை கால் வாய் டயப்பர் ஏரியா முதுகு தண்டு ஒடம்பு தலை எல்லா
இடத்துலயும் வந்திருக்கு.இது அம்மைதானா இல்ல நீங்க சொன்ன அந்த நோயா,அவளுக்கு அரிப்பு இருக்கு நான் தான் நைட் எல்லாம் ஒக்காந்து ஒக்காந்து அவள
கண்காணிச்சிட்டே இருப்பேன் சொறியாம.இது நாலாம் நாள்.எப்போ தண்ணி ஊத்தலாம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க pls

இது அம்மை தான். சந்தேகம் வேணாம். அம்மை முழுசா வத்தனும். காயனும். அப்ப தான் தண்ணி ஊற்றனும். அதுவரை அதை யோசிச்சு குழம்பாதீங்க. நீர் வடிஞ்சு காய துவங்கியதும் சொல்லுங்க. எத்தனை நாள் ஆயிருக்குன்னு கணக்கு பார்த்து ஊற்றலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்மை தலை,முகம் இரண்டு இடங்களிலும் வத்தி கழுத்துக்கு கீழே வந்த பின் தான் தண்ணீர் ஊற்றனும்,இங்க பக்கத்துல்ல அனுபவமுள்ள பாட்டிக்கிட்ட கேட்டேன் உங்களுக்காகவும்,வனிக்காகவும்.
அவங்க சொன்னாங்க அம்மை சிரச விட்டு இறங்கினாத்தான் தண்ணீர் ஊத்தனும் அப்படீன்னு அதான் முகத்துக்கு கீழே வந்தபின்.
அப்புறம் செவ்வாய்,வெள்ளி,ஞாயிறுலாம் தண்ணீர் ஊற்றலாமாம் இது ரொம்பவே உகந்த நாள்ன்னு சொன்னாங்க.
தண்ணீரில் வேப்பிலை,மஞ்சள் பொடி போட்டு ஊற்றனும்,அதாவது அம்மை நன்கு இறங்கின பின்னர்தான் ஊற்றனும் ஒரு வாரமோ பத்துநாளோ கழுத்துக்கு இறங்கும் வரை காத்திருந்து தான் தண்ணீர் ஊற்றனும்.கண்டிப்பா சோப் போட்டு குளிப்பாட்டகூடாது,கடலைமாவு,பயத்தமாவு போட்டு குளிப்பாட்டலாம்,ஒரு வாரமா குளிக்கலையேன்னு தேய்த்து குளிப்பாட்ட கூடாதுன்னும் சொன்னாங்க.
முதல் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் இடைவேளை விட்டு இரண்டாம் தண்ணீர் அதுபோல மூன்று தண்ணீர் ஊற்றும் வரை இடைவேளை விட்டு ஊற்றுங்க அதன் பின் வழக்கம் போல தினம் குளிக்கலாம்.
நான் வெஜ் சாப்பிடுவாங்கன்னா அடிக்கடி குடுக்கலாம் அப்பதான் சீக்கிறம் இறங்கும்னு சொன்னாங்க.மீன் கொடுக்கலாம்.
பழைய சாதத்துல தயிர் போட்டு வெங்காயமும் கொடுத்தா ரொம்ப நல்லதாம்
பெரியவங்கன்னா எது வேனாலும் கொடுக்கலாம் இங்க இருவருமே சிறுவர்கள் அதானால பார்த்து கொடுங்க எது ஒத்துக்கும்னு உங்களுக்குதான் தெரியும்.

பயப்படாதீங்க பொறுமையா இருங்க அம்மை நன்கு வத்தி கழுத்துக்கு கீழே இறங்கட்டும் பின் தண்ணீர் ஊற்றலாம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

anbu thozhigale,
ennoda friend oru ikkattana problethla irukka,
avaluku neengadhan help pannanum. avaluku age 40. oru officela work panra.
avanga company customers kitta pesumpodhu strict ah pesuva. avanga customerla oruthar,(Regular) name sundar. (age 35) sundar job vishayama oru naal pesumpodhu,avan sollirukkan, "ungala paakanume" appadinnu. iva job pathikekka dhan, paakanumnu solrarnu ninachitta. unga voice nalla iruku, appdinnu solli irukan. ivalum oru rj per solli avar voice mathiri iruku unga voicem. appdinnu solli irukka. night radiola sgs keettu irukum podhu iva sir unga voice mathiriye irukulla, appdinnu sms anupi iruka. udane avan r u sleeping appadinnu kettu irukan. ippadiye avanga sms anupittu irundhanga.
avanuku innum marriage agala, avanga sistersku marriage pannadhala avanuku age age ayiduchinu sonnan iva sonna, kavalapadathinga, ungalukaga god kitta
pray panren seekram ungaluku marriage agum appdinnu sonna. ivan oru husband & wife eppdi irupangalo appdi ellam irukanum avakitta sonnan inga dhan friends probleme, avaloda hus. ivala madhikkaradhe kidayadhu,ivaluku fever vandha kooda paaka mattar oru husbandku uria endha activities avarkitta kidaiyadhu avaloda expectation ah sundar sonnadhum konjam konjama ava manusu
maariduchi.
ava clear ayitan but iva romba confusr ayitta. avan mela oru anudhabam avangitta eppaavum aesitte irukanumnu ninaikira. oru naal avan pesalina kooda iva upset ayidra. naan evvlo solli pathutten, avan ninaiva irukka
avanuku marriage agi wife vittutu poitta emergencya marriage, emergencya vittu poitta. en friend mental mathiri ayitta, avan confusion illama ivakitta sollittan, enna maranthuru, hotel ku edhuku povanga appdidhan neeyum appdinnu solliyum, ivalala avana marakka mudiyala enaku friend ah irungannu ph panni ketuiruka. avan respon panna ve illa,
pls friends, avala idhula irundhu meetu kondu vara enna seyyalam. pls help
me.

pls,
arusuvai thozhigal en frienduku vazhi kaatungal.

அருமையா அனுபவமுள்ளவர்கிட்ட இருந்து எங்களூக்காக தகவல் சேர்கரிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சுவர்ணா... நீங்க சொன்ன தகவல் எனக்கு ரொம்பவே பயன்பட்டுச்சு. நான் குழந்தைக்கு தண்ணி ஊற்ற துவங்கிட்டேன் :)

அன்றே மெயில் பதிவு போட நேரம் இல்லை... அடுத்த நாள் சாட்டில் சொன்னேன்... நீங்க பார்த்த மாதிரி தெரியல. அதான் காணாமல் போன இந்த இழையை மேலே தூக்கிட்டேன். மீண்டும் நன்றி சுவர்ணா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேடம் நீங்க சொன்ன ஹோமியோபதி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டாச்சு வீட்டில் எல்லாரும் :) நீங்க சொன்ன அன்றே தேடி டாக்டரை அனுப்ப சொல்லி, 2 நாள் முன் சாப்பிட்டோம். பெரியவங்க நாங்க எப்பவும் கூடவே இருக்கோமே... அதனால் எல்லாருமே சாப்பிட்டோம். பயனுள்ல தகவலுக்கு நன்றி கவிசிவா :) உங்க பதிவால் நான் நிறைய தெரிஞ்சுகிட்டேன் இம்முறை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்