சின்ன அம்மை ஆலோசனை

தோழிகளே என் 3 வயது மகளுக்கு சின்ன அம்மை வந்திருக்கிறது.அவளுக்கு எல்லா தடுப்பூசியும் போட்டும் இப்பொழுது வந்திருக்கிறது.
நான் இங்க தனியாக இருக்கிறேன் எனக்கு உங்கள் ஆலோசனை தேவை அம்மை வந்தாள் என்ன செய்வது,செய்ய கூடாது மருத்துவரிடம் கேட்டோம் வந்து
ஒரு ஊசி போட்டு கொள்ள சொன்னார்கள்.ஆனால் சிலர் மருத்துவரிடம் போக கூடாது என்று சொல்கிறார்கள்,நான் வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து அந்த
கொப்பளங்களின் மேல் தடவலாமா அப்படி செய்தால் இன்னும் அரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இது எத்தனை நாள் தங்கும் எனக்கு 1 வயதில் இன்னொரு மகளும்
உள்ளாள்.ஆனால் அவள் இப்பொழுதுதான் அதிகமாக அக்காவுடன் ஒட்டி ஒட்டி விளையாடுகிறாள்.என்னால் ஒண்ணும் செய்ய முடியவில்லை.எனக்கு இது முதல் அனுபவம்
யாரும் இல்லாமல் எனக்கு மிகவும் குழப்பமாகவும் உள்ளது கொஞ்சம் தெரிந்தவர்கள் முடிந்தவரை உடனடியாக பதில் கூறுங்கள் நேற்று முதல்
உள்ளது.உதவுங்கள்.

அன்பு தோழிகளே... நான் இங்கே குறிப்பிட்ட HFMD நான் ஊரில் இல்லாத சமயம் என் தங்கை மகளுக்கும், என் தங்கைக்குமே வந்திருக்கிறது. அது என்ன என மருத்துவர்கள் தங்கைக்கு சரியாக சொல்லாமல் ஆண்டிபயாட்டிக் ஊசி போட்டு அதிகமாகி போனது. 1 வாரம் கையை தொட முடியாமல் தவித்திருக்கிறாள். அத்தனை எரிச்சல் இருந்ததாம். தழும்பு கருப்பாக நின்று மெதுவாக தோல் உரிந்து வந்ததாம். குழந்தைக்கு ஊசி போடாததால் அவளுக்கு அதிகமாகவில்லையாம்.

இது அவர்களுக்கு நான் HFMD பற்றி சொன்ன பிறகே அவர்கள் இது தான் தங்களுக்கு வந்தது என் சரியாக தெரிந்தது. குழந்தையை கையில் எடுத்து வைத்திருந்ததால் இவளுக்கும் வந்திருக்கிறது.

பாருங்க... நம்மை சுற்றி நமக்கே தெரியாம என்ன என்னவோ இருக்கு!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி தண்ணீர் ஊற்றியாச்சா சந்தோசம்ங்க.நம்ம தோழிகளுக்காக இதை கூட செய்யலன்னா எப்படி ;)

நீங்க அன்னிக்கு சாட்டில் சொன்னதை பிறகு வந்துதான் பார்த்தேன் நான் வந்து பார்த்தப்போ நீங்க இல்லை உடனே பதிலும் போட்டேனே வரலயா உங்களுக்கு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இல்லங்க... எனக்கு வரல. :) அதான் நான் அனுப்பினதை நீங்க பார்த்தீங்களான்னு தெரியாம கல்பனாவிடமும் சொன்னேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிகா என் பொண்ணுக்கு நாளைக்கு 9 ம் நாள் அவ ஒடம்புல எல்லா கட்டியும் காஞ்சி பக்கு வந்து இருக்கு
ஆனா அது பிஞ்சி கிழ விழல உள்ளங்கைல ஒரு கட்டி இன்னும் காயல மத்த இடத்துல எல்லாம் காஞ்சி இருக்கு அவளுக்கு
நாளைக்கு தண்ணி ஊத்தலாமா கொஞ்சம் சொல்லுங்க தண்ணி ஊத்தலாமா எப்போ எத்தனை மணிக்கு தண்ணீ
ஊத்தனும் என்ன சாப்பிட குடுக்கனூம் கொஞ்சம் சொல்லுங்க pls வனிதா அக்கா எனக்கு உங்க skype id குடுக்க முடியும
தப்பா கேட்டு இருந்தா சாரி

தாரளமா ஊத்துங்க... தலையில் இருந்து இறங்கினா முதல் நீர் விடலாம்னு சுவர்ணா சொல்லிருக்காங்க தானே :)

ஊற்றுங்க. வெய்யில் நேரத்தில் ஊற்றனும். காலையில் வெய்யில் வந்ததும் தண்ணியை பக்கட்டில் பிடிச்சு வெய்யிலில் வைங்க. கொஞ்சம் வேப்பிலையை பிச்சு தண்ணியில் போட்டு வைங்க. தண்னி வெய்யிலில் சூடு ஆகட்டும். சுடு தண்ணி ஊத்த கூடாதில்லையா... அதான் கொஞ்சம் சில்லுன்னு இல்லாம இருக்க வெய்யிலில் வைக்கனும்.

இங்க அம்மா ராகு காலம், எமகண்டம் இல்லாம பார்த்து ஊற்ற சொன்னாங்க. மற்றபடி வேற எதுவும் நேரமெல்லாம் பார்க்க தேவை இல்லை. மதிய நேரம் வெய்யில் இருக்கும் போதே ஊற்றிடுங்க... மாலை நேரம் குளிர ஆரம்பிக்கும் போது ஊற்ர கூடாது. அவ்வளவு தான்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு அடுத்தடுத்து 3 தண்ணி ஊற்றுங்க.

skype ஐடி??? என்கிட்ட இதெல்லாம் எதுவுமே இல்லையே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா இங்க எல்லாரும் 11 ம் நாள் ஊத்த சொல்ராங்க சீக்கிரமா ஊத்தினா எல்லாருக்கும் வந்துரும்னு சொல்றாங்க.
எனக்கு ஒண்ணுமே புரியல 3 தண்ணி ஊத்தி எத்தனை நாள் கழிச்சி school அனுப்பலாம் கா உங்களுக்கு facebook use
இல்லையா அக்கா நீங்க மாலத்தீவுனு சொன்னீங்க இப்போ இங்க இருக்கீங்க அப்போ பசங்க school எங்கே இங்கயா அங்கயா
தப்பா நினைக்காதீங்க அக்கா நான் நம்ம அருசுவைல நிறைய பேர fb ல பாத்து இருக்கேன் எனக்கு உங்கள பாக்க
ரொம்ப ஆசை நான் உங்களுக்கு மனசுல ஒரு உருவம் குடுத்து வெச்சி இருக்கேன் அத பாக்க ஆசை என்னால உங்கள்\
நேர்ல பாக்க முடியும்னு தோணல அதான் உங்க photoவாது பாக்கலாம்னு தப்பா இருந்தா சாரி

அப்படின்னா வெயிட் பண்ணி 11ஆம் நாளே ஊற்றுங்க... ஒன்னும் பிரெச்சனை இல்லை. ஸ்கூல் அனுப்புறது பற்றி எனக்கு தெரியலங்க... தோழிகள் அனுபவம் உள்லவங்க சொல்லட்டும். என் மகன் 2.5 வயது தான்... இன்னும் பள்ளிக்கு போகல.

மகள் மட்டும் தான் பள்ளிக்கு போறா... அவ சென்னையில் அம்மாவிடம் தான் இருக்கா. நானும் மகனும் தான் மாலே போய் வருவோம் அடிக்கடி. எங்கையும் என் போட்டோ இருக்காதுங்க... :) ஏன்னா அவருக்கு என் போட்டோ இணையத்தில் வருவது பிடிக்காது. அது மட்டுமில்லாம நானும் அதை விரும்புவதில்லை... அதனால் தான் எதிலும் அக்கவுண்ட்டும் இல்லை. என்னை எப்படி கற்பனை பண்ணிருக்கீங்களோ... அப்படியே இருந்துடுறேன். :) [அழகா இருக்கனா??? கற்பனையில்?? ஹிஹிஹீ]

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா எனக்கு ஒரு உதவி.இப்போ என் பெரிய பொண்ணுக்கு பரவாயில்லை அவளுக்கு தண்ணி ஊத்தியாச்சு.அவ
school போறா.இப்போ என் சின்ன பொண்ணுக்கும் போட்டு இருக்கு.ஆனா அவளுக்கு சும்மா விளையாட்டு அம்மை மாதிரி இருக்கு.நாளைக்கு
தண்ணி ஊத்த போறேன்.இப்போ அது இல்ல என் கேள்வி என் பெரிய பொண்ணுக்கு அம்மை தழும்பு கண்ணுக்கு மேல விழுந்துருக்கு.அது மறைஞ்சிருமா.
இல்ல மறையாதா வருத்தமா இருக்கு பதில் சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்