கோதுமை ஹல்வா

தேதி: March 12, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (66 votes)

 

சம்பா கோதுமை - ஒரு கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 1 முதல் 1 1/4 கப் வரை
பாதாம் - 15
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 15
எலுமிச்சை - ஒரு மூடி
கேசரி கலர் பொடி - கால் தேக்கரண்டி


 

கோதுமையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
மறுநாள் காலையில் மிக்ஸியில் கோதுமையுடன் ஒரு கப் நீர் சேர்த்து அரைத்து பாலை ஒரு சல்லடையில் வடிகட்டவும். மேலும் இரண்டு முறை அரை கப் நீர் சேர்த்து பால் எடுக்கவும். வடிக்கட்டிய பாலை 3 மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
பாதாமை வெந்நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி சிறிதளவு பாலுடன் சேர்த்து நல்ல நைசாக அரைக்கவும். அரைத்த கோதுமைப் பாலின் மேல் தெளிந்த நீரை வடித்து விடவும். கீழே பால் கெட்டியாக இருக்கும். அத்துடன் 3 கப் நீர் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் கேசரி பவுடரை சேர்த்து கலக்கவும்.
சர்க்கரையுடன் ஒரு கப் நீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை பாகாக்கவும்.
அதில் கோதுமைப்பாலை விட்டுக் கிளறவும். பாலில் அரைத்த பாதாமையும் சேர்க்கவும்.
கைவிடாமல் கிளறவும். ஹல்வா கெட்டியாகி, நன்கு பளபளப்பாக வரும்.
அடியில் ஒட்டும் போது நெய்யை உருக்கி சிறிது சிறிதாக சேர்க்கவும்.
நெய் பிரிந்து வந்து ஹல்வா கெட்டியான பின்பு, நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ஒட்டாமல் வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகளாக்கவும். அப்படியே கிண்ணத்தில் போட்டும் சாப்பிடலாம்
அட்மின் சொன்ன // இந்த ஒரிஜினல் அல்வாவை, கோதுமை அல்வான்னு சொல்ல வேண்டிய நிலைமை வந்துடுச்சு// ஒரிஜினல் கோதுமை ஹல்வா இதுவே! கொஞ்சம் சிரமப்பட்டு, திறமையாகச் செய்தால் மணமும், சுவையும் கிறங்க அடிக்கும்!

கோதுமைப்பாலுடன் 3 கப் நீர் சேர்த்துக் கிளறினால்தான் நன்கு வேகும். பாலை விட்டதும் கைவிடாமல் கிளற வேண்டும். எலுமிச்சை ரசம் பிழிவதால் ஹல்வா ஒட்டாமல் நல்ல ஷைனிங்காக இருக்கும். ஹல்வா செய்ய சற்று அதிக நேரம் பிடிக்கும். பொறுமையும், அதிக அக்கறையும் இருந்தால் எல்லாருக்கும் சுவையான ஹல்வா கொடுக்கலாம்!!!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ராதா, கோதுமை அல்வா அப்படியே சாப்பிட்டேன். சூப்பரா இருக்கு. எல்லாமே எனக்குதான்.

அருமையான அல்வா :) செய்ய பொறுமை வேணும்னு ஒரு “க்” வெச்சுட்டீங்க ;) அதனால நான் செய்வது ரொம்ப கஷ்டம். ஹிஹிஹீ. ஒரு பார்சல் அனுப்பிடுங்க... சாப்பிட காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹல்வாவை வெளியிட்ட அட்மின் சார், மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு நன்றி! நன்றி!

உமா..வாழ்த்துக்கு நன்றி...நீங்கள் அறுசுவைக்கு புதுசா? சேலத்தில் இருக்கீங்களா?

என் அத்தைம்மா அல்வா நல்லா செய்வாங்க. அவங்களுக்கு அல்வா ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா இந்த குறிப்ப அவங்ககிட்ட காட்டுகிறேன் நான். இன்னும் நிறைய குறிப்புகள் குடுத்து கொண்டே இருக்கணும் நீங்க. நீங்கள் என்றும் நலமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

உங்கள் அன்பு மகள்,
சுபா.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

ராதா... குறிப்பு, படம் எல்லாம் சூப்பர்.
அதுக்கும் மேல சூப்பர்... கடைசி பாரா ரெண்டும். ;))

‍- இமா க்றிஸ்

வனிதா....உங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க....கண்டிப்பா ஹல்வா பார்சல்ல அனுப்பிடறேன்!
ஹ்ம்ம்ம்....என் ரேட்டிங் டௌட்டை இங்கயே விளக்குங்க...இந்த ரெசிபில ஆவரேஜ்ல 4 ஸ்டார் இருக்கு....2 வோட்ஸ்னு போட்டிருக்கு...அப்ப என்ன அர்த்தம்? எனக்கு இன்னும் புரியல...

நீங்க உங்க குறிப்புக்கு ரேட்டிங் கொடுங்க... உங்களுக்கு எவ்வளவு பிடிச்சுதோ அத்தனை ஸ்டார் கொடுங்க. ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தா 5 கொடுங்க. அப்போ இடது பக்கம் ஆவெரேஜ் பாருங்க 3 வோட்னு இருக்கும். எத்தனை நட்சத்திரம் என்பது மாறி இருக்கும். இப்போ இருவர் உங்க குறிப்பை வோட் பண்ணிருக்காங்க. ஆவரேஜா 4ன்னா உதாரணமா ஒருவர் 3, ஒருவர் 5 கொடுத்திருக்கலாம்... ஆவரேஜ் 4 வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓகே...இதில மோசம்னு ரேட் குடுத்திருக்கறதா நீங்க 'சொல்ல விரும்பினேன்'ல சொன்னீங்க இல்லயா? அதை எப்படி தெரிஞ்சுக்கற்து?

ராதாம்மா கோதுமை ஹல்வா ரொம்ப நல்லா இருக்கு நான் இதை பண்ணிட்டு எவ்ளோ நல்லா இருந்ததுன்னு சொல்லுறேன் நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஆமாம் ராதா ஆன்ட்டி நான் சேலத்துல இருக்கேன். நியூ மெம்பர்தான். நீங்க எழுத்தாளரா? இப்பதான் உங்க டீடெயில்ஸ் பார்த்தேன். உங்க அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

ராதாம்மா, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி செய்தது. ஏறக்குறைய இதே மெத்தடில் தான். ஆனால் எலுமிச்சை ரகசியம் அப்போது தெரிந்திருக்கவில்லை. நான் செய்ததில் என்ன ஒரு கோளாறு. செய்த அன்று அல்வா அழகா விள்ளல்,விள்ளலா வந்துச்சி. மறுநாள் பார்த்தா கம்மர்கட் மாதிரி சர்க்கரை கட்டி கட்டியா இருந்தது. அதிலிருந்து அல்வா செய்தாலே இப்படி தான் ஆகும்னு மனதில் பதிஞ்சு போய், அல்வா செய்யுற நினைப்பை தூர போட்டுட்டேன். மறுபடி அந்த ஆசை வந்துருச்சி. கடைசியா சொன்னீங்களெ, அக்கறை,பொறுமை அது மட்டும் எந்த கடைல விக்குதுன்னு சொன்னீங்கன்னா. உடனே வாங்கி செய்துடுவேன் ;))

அல்வா சூப்பர்ங்கம்மா... தைரியம் இருந்தா நான் ஊருக்கு வந்ததும் செய்ங்க பார்க்கலாம். செய்யும் போதே போன் பண்ணி கேட்டுர மாட்டேனா? வாழ்த்துக்கள் :) படங்கள் ஒவ்வொன்ணும் சூப்பர் போங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கோதுமை அல்வா பார்க்கவே அழகா இருக்கு.. கோதுமை கிடைத்ததும் அல்வா செய்து பார்க்கிறேன்.. ரொம்ப சுவையா வரும் போல, கலரும், செய்முறையும் ரொம்ப நல்லா இருக்கு..

"எல்லாம் நன்மைக்கே"

அன்பு மகள்..சுபா....வாழ்த்துக்கு நன்றி...கண்டிப்பா எனக்குத் தெரிந்த குறிப்புகளை எழுதறேன்!

இம்மா....வாழ்த்துக்கு நன்றி...ஏங்க கடைசி ரெண்டு பாரால நான் குறிப்பிட்டதுல தப்பு எதுவும் இல்லயே?!

பலர் கொடுக்கும் போது கண்டு பிடிப்பது சிரமம். முதலில் வரும் ஒரு ரேட்டிங் 1 வந்தா சரியா தெரிஞ்சுடும். இல்ல முதல்ல இருந்த ஒவ்வொரு ரேட்டிங் வரும்போதும் என்ன வந்திருக்கு ஆவரேஜுன்னு கவனிச்சாலும் திடீர்னு அவரேஜ் டவுன் ஆகினா என்ன ரேட்டிங் கொடுத்தா அங்க போயிருக்கும்னு கண்டு பிடிக்கலாம். ஆனா நான் சொன்ன நபர் எனக்கு பல முறை முதல் ஆளா வந்து 1 கொடுத்து மாட்டினாங்க. :)

//இப்போ உங்க கிட்ட சொல்லி அவங்க மாட்டாம 1 ரேட்டிங் கொடுக்க வழி கிடைச்சிருக்கும் ;)//

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தனா....செய்து .பார்த்து சொல்லு...பாராட்டுக்கு நன்றி.

கல்பனா...ஊருக்கு இதோ வரேன், அதோ வரேன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்க? ஹல்வா செய்ய பொறுமைதான் வேணும்...தைரியம் எதுக்கு? வரப்போ காங்கோல இருந்து ஏதாவது பேயைப் பிடிச்சுட்டு வரலாம்னு ஐடியாவா?! இங்க வரப்போ என் வீட்டுக்கு வந்துடு....உனக்கு நேராவே ஹல்வா பண்ணிப்புடறேன்...சரியா??

பாக்யா....எப்படி இருக்க? ஜப்பான்ல சம்பா கோதுமை கிடைக்குமா? அதில பண்ணினா நல்லா வரும்...செய்து பார். உன் முயற்சிக்கு பாராட்டுக்கள்!

ரொம்ப நன்றி வனிதா....கொஞ்சம் புரிஞ்ச மாறி இருக்கு...ஸோ இந்த ரேட்டிங்கையும் அப்பப்ப கவனிக்கணும்னு இப்பதான் தெரிஞ்சிண்டேன்...இனி பார்க்கறேன்.

ம்.. எதுக்கு இப்பிடி யோசிக்கிறீங்க!! தப்பா ஒண்ணும் எழுதல. ;) உங்க எழுத்துல, அந்த இடங்கள்ல மெல்லிசா ஒரு நகைச்சுவை ஓடினா மாதிரி இருந்துதா.. ரசிச்சு சிரிச்சுட்டு எழுதினேன். இப்பிடி புரிஞ்சுக்கிட்டீங்களா? ம்.
//பொறுமையும், அதிக அக்கறையும் இருந்தால் எல்லாருக்கும் சுவையான ஹல்வா கொடுக்கலாம்!!!// கடைசில 3 தடவை ஆச்சரியக்குறி போட்டு இருந்தீங்க. ;)))

‍- இமா க்றிஸ்

ஓ...அதைத்தான் சொன்னீங்களா? நான் எதைச் சொல்றீங்கனு புரியாமதான் கேட்டேன்...ஹல்வா கொடுக்கற்துங்கறதுக்கு ஒரு தனி அர்த்தம் உண்டில்லயா? அதற்காகத்தான் அப்படி எழுதினேன்! எப்படியோ என் நகைச் சுவையைப் புரிஞ்சிக்கிட்ட உங்களுக்கு நன்றிங்க!!

ராதாம்மா கலர்ஃபுல் ஹல்வா சூப்பரா இருக்குங்கம்மா,எனக்கும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க ஏன்னா செய்ய பொறுமை வேனும்னு சொல்லீட்டீங்களே அது நிச்சயமா என்கிட்ட இல்லைங்கம்மா ;)
வாழ்த்துக்கள்:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா....நான் ஒரு ஹல்வா கடை திறந்துட்டு எல்லாருக்கும் அழைப்பு அனுப்பிடறேன்....வந்து சாப்பிட்டு போகலாம்! ஓகேயா? கடைக்கு பேர் என்ன தெரியுமா? 'அறுசுவை ஹல்வா கடை'!!!

இந்த சின்ன வயசில பொறுமை இல்லயா? எங்க போய் சொல்ல? ஹ்ம்ம்..

VERY VERY SUPER I WILL TRY THIS ATTRACTIVE LOOK SO BEAUTIFUL

அல்வா சூப்பரா கிண்டி இருக்கீங்க. பார்க்கவே அசத்தலா இருக்கு. ரொம்ப ரொம்ப பொறுமை வேணும் போலம்மா. இந்த ரிஸ்க்கெல்லாம் இப்ப எடுக்க விரும்பல கொஞ்சம் நாள் கழிச்சு செய்து பார்க்கறேன்மா. அதனால் அப்படியே அந்த தட்டோட அல்வாவ மட்டும் அனுப்பிடுறீங்களா?

அன்பு ராதா பாலு

உங்க அனுபவமும் பொறுமையும் அல்வாவில் தெரியுது! பாக்கறதுக்கே அழகாக இருக்கு.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

உஷா...பதிவுக்கும், பாராட்டுக்கும் நன்றி...

முகில்....ஒஹோ.....கல்யணத்துக்கு அப்பறம எல்லாருக்கும் ஹல்வா கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டயா?!! சரி சரி!! தட்டு அல்வாவே....தஞ்சைக்கு ஓடிப்போ!! அனுப்பிட்டேன் பிடிச்சுக்கோ!!

அன்பு சீதா....வருகைக்கும், பதிவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....நலமா இருக்கீங்களா?

ஒரிஜினல் அல்வா குறிப்பை கொடுத்த ராதாவுக்கு அல்வா பார்சல், சாரி சாரி ஒரு பெரிய "ஓ" போடுங்கப்பா! குறிப்பு சக்கையாய் இருக்கு. வாழ்த்துக்கள். கூடவே கொடுத்துள்ள அந்த டிப்ஸ் மற்றும் ஆச்சிரியகுறி ரகசியம்.....எல்லாம் சூப்பர்!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆஹா... கோதுமை ஹ‌ல்வா குறிப்பு அசத்தல்! செய்முறை விளக்கம் அருமையா சொல்லியிருக்கிங்க. கூடவே படங்கள் எல்லாமும் பளிச், பளிச்! ஆக மொத்தம், சூப்பர்ர்ர்!!

அன்புடன்
சுஸ்ரீ

அல்வா அட்டகாசம்..லைஃப்ல ஒரே முறை கோதுமை அல்வா ட்ரை பண்னீனேன் தீபாவளிக்கு...வந்துச்சு ஆனா நீங்க சொல்றமாதிரி தண்ணீர் சரிபாதி சேர்க்காததாலயோ என்னவோ..ஒரு பச்சை வாசம் இருந்துச்சு..
அப்புறம் பாதாம் சீவல் மட்டும்தான் போட்டிருக்கேன்..நீங்க சொன்னமாதிரி பாதாம் பால் சேர்த்தா கூடுதல் சுவை வருமின்னு தெரியுது..எலுமிச்சை சேர்ப்பதும் இப்பதான் தெரிஞ்சுட்டேன்

பளபளப்பா ஜொலிக்குது அல்வா,வாழ்த்துக்கள் ராதாம்மா..:)

பின்குறிப்பு:- கடைசில பட்டிக்கு ஏன் அல்வா கொடுத்தீங்க இந்த த்டவன்னு நினைச்சேன்...அல்வா செஞ்சதாலதானா :)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

லாவண்யா...படா ஆளுப்பா நீங்க....அல்வா செய்யக் கத்துக் கொடுத்தவளுக்கே அல்வாவா?! ஜோர்தான்...அப்பறம் இது புரியலயே.
.//குறிப்பு சக்கையாய் இருக்கு//. இதுக்கு என்னங்க அர்த்தம்? எந்த ஊர் பாஷை?கொஞ்சம் விளக்கிடறீங்களா?! அட...ஆச்சரியக் குறி ரகசியம் தெரிஞ்சு போச்சா?!
பாராட்டுக்கு நன்றிங்கோ!!

சுஸ்ரீ....எப்படி இருக்கீங்க? பாராட்டுக்கு நன்றிங்க....

இளவரசி...தண்ணீர் சேர்த்தால்தான் கோதுமைப் பால் நன்கு வேகும். அதனால் பச்சை வாசனை வராது. பாதாமை சீவியும் சேர்க்கலாம். குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்க்கலாம். எலுமிச்சை பளபளப்புக்காக. இந்த முறையில் ட்ரை பண்ணிப் பாருங்கள்.

பட்டிக்கு அல்வா கொடுத்தது நேரம் இல்லாததால்! அல்வா செய்ய ஒரு வாரம் தேவையில்லை மேடம்!!
எப்பவுமே சண்டையில் நாமும் ஒருவராக இருப்பதைவிட ஒரு ஓரமா, ஜன்னல் வழியா எட்டிப் பார்ப்பது ஸ்வாரசியமான அனுபவம்தான? அதான் தலையை வெளியிலயே காட்டலயாக்கும்!!

Radha madam,

///மறுநாள் காலையில் மிக்ஸியில் கோதுமையுடன் ஒரு கப் நீர் சேர்த்து அரைத்து பாலை ஒரு சல்லடையில் வடிகட்டவும். மேலும் இரண்டு முறை அரை கப் நீர் சேர்த்து பால் எடுக்கவும். வடிக்கட்டிய பாலை 3 மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.////

Irandavathu Moondravathu murai Paal edupathai satru vilakamaga koora vendukiren.

Nandri
Dhivya Anand

ராதா மேடம் நான் இதுபோலதான் செய்வேன்.ஆனால் பாதாம் சேர்த்து செய்ததில்லை.செய்து பார்க்கிரேன்.ரொம்ப அழகா செய்து அசத்தலா இருக்கு.வாழ்த்துக்கள்.

ராதா அம்மா
அல்வா அப்படியே எடுத்து சாப்பிடணும் போல இருக்கு.
இப்போ எல்லாம் வீட்டுல இவ்ளோ பொறுமையா செய்யறதுக்கு நிறைய பேரு (என்னையும் சேர்த்து தான் )ரெடியா இல்ல.
இதுல நான்ஸ்டிக் யூஸ் பண்ணலாமா?
அப்புறம் தண்ணீர் சேர்க்க சொல்லியிருக்கிங்க ..ஓகே ஆனா மேலாக உள்ள தண்ணீரை ஏன்யூஸ் பண்ணக் கூடாது?
குறிப்புக்கு நன்றி படம் எடுக்க உதவி செய்தவருக்கும் சொல்லிடுங்க.(அதுவும் நிங்களே வா )சூப்பரா இருக்கு ரெண்டுமே!!!

திவ்யா....நல்ல சந்தேகம். முதல் பால் எடுத்ததுபோலவே அடுத்த இரண்டு முறையும் வடிகட்டிய சக்கையுடன் தண்ணீர் சேர்த்து பால் எடுக்க வேண்டும். மூன்று முறை எடுத்தபின்பு அந்த சக்கையில் பிசுபிசுப்பு இருக்காது. அதில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது புரிந்ததா? தங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.

பர்வீன் பானு....பாராட்டுக்கு மிக்க நன்றி...பாதாம் சேர்த்தால் வாசனையாக இருக்கும். நானாக செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. அதையே எழுதியிருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்வீட் எதுன்னா அது கோதுமை அல்வாதா. அவ்வளவு இஸ்டம். ரோஹித் வயித்துல இருக்கும்போது இங்க எங்க செல் மெம்பர் ஒருத்தர்கிட்ட பேசும்போது எனக்கு இந்த அல்வா ரொம்ப பிடிக்கும்னு சொன்னதும் அவர் அடுத்த நாளே செஞ்சு கொண்டு வந்து கொடுத்தார். உங்க அல்வா பாத்ததும் எனக்கு அந்த நாட்கள் நியாபகம் வந்துருச்சு...உங்க வீட்டுக்கு வந்தா நீங்களும் செஞ்சு கொடுப்பீங்களா..?;-)

அதுக்கு முன்னாடி நானும் கொஞ்சம் ட்ரயல் பாத்துக்கறேன்;-)
அருமையான குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி;-)

Don't Worry Be Happy.

ராக்கி....நன்றி
1. நான்ஸ்டிக் நான் உபயோகித்ததில்லை. அடிகனமான ஹிண்டாலியம் வாணலிதான் இதற்கெல்லாம் ஏற்றது.

2. பால் எடுத்தபின் மேலே தெளிந்திருக்கும் நீர் கலங்கலாக இருக்கும். அதனால்தான் அதை வடித்துவிட வேண்டும். கீழே தங்கியிருக்கும் திக்கான பாலுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

3. அல்வா செய்ததும் நானே....அதை படம் பிடித்ததும் நானே!!!
சந்தேகம் தீர்ந்ததா தோழி?!

அன்பு ஜெயா....எங்கே சென்றீர்கள் இத்தனை நாளாய்? சொந்த ஊர் விஜயமா?
அந்த நாள் நியாபகம் அல்வாவால் வந்ததே நண்பரேனு பாட்டு பாடிடுங்க!!!என் வீட்டுக்கு வாங்க...கண்டிப்பா செய்து தரேன்! ஏற்கெனவே அல்வா சாப்பிட வரிசைல இருக்காங்க நம்ம தோழிகள்...சென்னையில ஒரு அறுசுவை தோழிகள் கூட்டம் ஏற்பாடு பண்ணினா போச்சு. நான் எல்லாருக்கும் அல்வா கொடுத்துடறேனே?! (இது பொய்யில்லை...நிஜம்!!)

என்ன செய்ய குட்டி வாலுன்னால சிஸ்டம் ஹேங்காயிருச்சு. அதை சரிபண்ணிக்கொண்டு வர இத்தனைநாள்;) சென்னையில் அறுசுவை தோழிகள் கூட்டம்னா ஜூலை ஆகஸ்ட்டு ஏற்பாடு பண்ணுங்க அப்பதான் ஊருக்கு வரேன்;-) கண்டிப்பா உங்களைப் பாக்க முயற்சி பண்றேன். நீங்க பொய் சொல்ல மாட்டிங்கன்னு தெரியும்., ரொம்ப தேங்க்ஸ்;-)

Don't Worry Be Happy.

லாவண் குறிப்பிட்ட அந்த ”சக்கையாய்” அது செம சக்கைங்கிற வார்த்தையில இருந்து வந்துருக்குன்னு நினைக்கிறேன்.. கவுண்டமணி அடிக்கடி சொல்வாறே செம சக்கை.! செம சக்கை! அதுதானே லாவண்;)

Don't Worry Be Happy.

ராதா,
கோதுமை ஹல்வா பார்க்கவே சூப்பரா இருக்குங்க.விளக்கங்களும் அசத்தல்.இப்போதைக்கு விருப்ப பட்டியலில் சேர்க்கிறேன்.கூடிய விரைவில் செய்து பார்த்து சொல்கிறேன்.அருமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

அது ( சக்கை ) அட்ரா சக்கை., அட்ரா சக்கை ;-)

லாவண் சீக்கிரம் வந்து கரக்ட் பண்ணுங்க;-)

Don't Worry Be Happy.

அடுத்த பட்டியின் நடுவரே...சென்னைல அறுசுவைக் கூட்டத்தை நம்ம மூத்த தோழிகள் நடத்தினா நானும் கலந்துக்க தயார். சக்கைக்கு அர்த்தம் கேட்டு உங்களையும் குழப்பிட்டேனோ? இப்படி இருக்குமோ? கோதுமையை சக்கையா பிழிஞ்சு பால் எடுக்கற்தனாலயோ? ஹுஹூம்....லாவண்யா வந்துதான் விவரமா சொல்லணும் அது செம சக்கையா, அட்ரா சக்கையா, இல்ல கோதுமை சக்கையானு...வந்து எங்க சந்தேகத்தை தீர்த்துடுங்க லாவண்யா!!

ஹர்ஷா....உங்களின் பதிவுக்கும், பாராட்டுக்கும் நன்றி....அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.