ரிமோட் ஹோல்டர் மற்றும் கேணி

தேதி: March 15, 2012

5
Average: 4.8 (6 votes)

 

ரிமோட் ஹோல்டர் செய்ய :
எம்டி பாக்ஸ்
கலர் பேப்பர்ஸ்
கத்தி
கேணி செய்ய :
வட்டவடிவமாக கட் செய்த தெர்மாக்கோல்
ஐஸ்க்ரீம் குச்சி
பெயிண்ட்
சார்ட் பேப்பர்
கெட்டியான நூல்
சிறிய ப்ளாஸ்டிக் குடம்

 

<b> ரிமோட் ஹோல்டர் செய்வதற்கு </b> ரிமோட் இருக்கும் நீளத்தில் பாதியளவு பாக்ஸ் உள்ளே இருக்குமாறு எம்டி பாக்ஸை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளவும்.
ரிமோட்டின் அகலத்தை அளந்து அதைவிட அரை இன்ச் அதிகம் விடவும். ஒவ்வொரு ரிமோட்டுக்கும் ஒரு இன்ச் அளவுக்கு மேல் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
இப்பொழுது வரைந்திருக்கும் பகுதிகளை வெட்டி எடுக்கவும்.
பாக்ஸ் வெளியே விருப்பமான முறையில் அலங்கரித்து கொள்ளவும். எளிமையான முறையில் செய்யக்கூடிய ரிமோட் ஹோல்டர் தயார். (இனி டேபிள் கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கும்:)
வீட்டில் எப்படியும் ஏதாவது ஒரு பாக்ஸ் சேரும். தீர்ந்து போன டிஸ்யூ பாக்ஸ், குழந்தைகளின் டாய்ஸ் பாக்ஸ், கார்ன் பிளேக்ஸ் பாக்ஸ் இதெல்லாம் சுவற்றில் அல்லது கதவில் ஸ்டிக் செய்து வைத்து கொண்டால் கவர்களை போட்டு வைக்கலாம்.
கவர்களை எடுப்பதற்கு எளிதாக இருக்கும். வீடும் சுத்தமாக இருக்கும்.
<b> கேணி செய்வதற்கு </b> தேவையானப்பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சார்ட் பேப்பரை தெர்மாக்கோலின் சுற்றளவுக்கு நறுக்கி வைக்கவும். சார்ட் அட்டையின் உயரம் ஐஸ்க்ரீம் ஸ்டிக் அளவுக்கு இருக்க வேண்டும்.
தெர்மாக்கோலை சுற்றி சார்ட் பேப்பரை உருளை வடிவில் சுற்றி ஒட்டவும்.
அந்த சார்ட் முழுவதும் ஐஸ்க்ரீம் குச்சிகளை ஒட்டவும். மேலும் இரு ஐஸ்க்ரீம் குச்சிகளை படத்தில் இருப்பது போல் உயர்த்தி ஒட்டவும். அந்த இரு குச்சிகளையும் இணைப்பது போல் ஒரு பேப்பரை குச்சிப்போல் சுருட்டி இரு முனைகளிலும் க்ளூ தடவி ஒட்டி விடவும்.
ஐஸ்க்ரீம் குச்சிகளுக்கு விரும்பிய நிறத்தில் பெயிண்ட் செய்யவும். ஒரு சிறிய பிளாஸ்டிக் குடத்தில் கெட்டியான நூலைகட்டி பேப்பர் ஸ்டிக்கில் ஒரு முறை சுற்றி விடவும். கேணி ரெடி. மேலும் அலங்கரிக்க விரும்பினால் கிணறை ஒரு பேப்பர் தட்டில் ஒட்டி சுற்றியும் மண்ணை தூவி குட்டி ப்ளாஸ்டிக் மரம், செடி இப்படி ஒட்டி விடலாம். அது இன்னும் அழகாக இருக்கும்.
ப்ளாஸ்டிக் கண்ணாடி டப்பாவில் இது போல் செய்தால் குட்டீஸ்க்கு நல்ல பொழுது போகும் நிஜமாகவே தண்ணீர் இரைப்பார்கள். குட்டி ப்ளாஸ்டிக் குடம், வாளி இதெல்லாம் நம்மூரில் காய்கறி மார்கெட்டிலேயே கிடைக்கும். 2லிருந்து 5 ரூபாய் தான் இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஐடியாஸ் சூப்பர். அதுவும் கடைசி கேணி... சான்ஸே இல்ல... சம அழகு!!! வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்,எல்லாமே சூப்பர்,குறிப்பா கேணி ரொம்ப அழகா இருக்கு.நல்ல க்ரியேட்டிவிட்டி,வாழ்த்துக்கள்.

ஹலோ... ரேனுகா MaM.....உங்கள் IDEA சுப்பர். இது ஒரு நல்ல முயர்சி

god with us

நல்ல உபயோகமான டிப்ஸ்.....
உங்க கேணி ரொம்ப நல்லா வந்து இருக்கு........ கடைசி படம் ரொம்ப அருமை... வாத்துக்களும் பூஞ்சாடிகளும் சூப்பரோ சூப்பர்... பேப்பரில் தானே செய்தது? ...

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க ரேணு.
சூப்பர் க்ராஃப்ட். கேணி ஐடியா கலக்கல். அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

ரிமோட் ஐடியா சூப்பர். கேணி நல்ல யோசனை ரேணு. பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நிச்சயமா பார்க்கவே ரொம்ப க்யூட்டா இருக்கு. திரும்ப வந்தாச்சு சந்தோஷம் ரேணு. வெல்கம்

நீண்ட நாட்கள் கழித்து உங்க கைவினை பார்ப்பது மகிழ்ச்சியா இருக்கு. எம்டி பாக்ஸ் வைத்து ரிமோட் ஹோல்டர், கவர் போட்டு வைக்கறது நல்ல ஐடியா. கேணியும் சூப்பர். வாழ்த்துக்கள் ரேணு.

அறுசுவை டீம்க்கு மிகவும் நன்றி,என் குறிப்பை வெளியிட்டமைக்கு.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் வனி,எப்படி இருக்கீங்க?குட்டிஸ் நலமா?
இப்ப எங்க இருக்கீங்க? நன்றி வனி,ஐடியாஸ் உபயோகபட்டால் ஓ.கே

ரீம் உங்க வாழ்த்துக்கு ரெம்ப நன்றிப்பா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் firthouse m உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி,மிகவும் நன்றி.

ப்ரியா உபயோகபடும் தானே என் ஐடியா.இதெல்லாமா அனுப்பனும் என்று தோனுச்சு,பத்தில் ஒருத்தருக்காவது உதவும் என்று தான் அனுப்பினேன்.ஆமாம் பிரியா கேனியை சுற்றி இருக்கும் அனைத்தும் பேப்பரில் செய்தது தான்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இமா எப்படி இருக்கீங்க?உங்க கிட்ட பேசி 2 வருஷம் ஆச்சு தெரியுமா?என்னை நினைச்சீங்களா இல்லையா?நான் நிறையா க்ராப்ட் பண்ணினேன்.போட்டோஸ் எடுத்தேன் ஆனால் விளக்கம் எழுதல.ஒரு வருஷமா செய்திருக்கேன் நிறையா அப்பப்ப ஒவ்வொன்னா அனுப்பறேன்.இலா எப்படி இருக்காங்க.?செபா அம்மா எப்படி இருக்காங்க?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

யாழினி மிக்க நன்றிப்பா பாராட்டு மற்றும் வரவேற்ப்புக்கு.இதுக்கு முன்னாடி நம்ம பேசி இருக்கோமா?தப்பா எடுத்துகாதீங்க.எனக்கு உங்களை பற்றி தெரியல.சாரிப்பா கொஞ்சம் சொன்னீங்கன்னா பரவால

வினோஜா உங்கள் சந்தோஷமான வரிகளை பார்த்து எனக்கு சந்தோஷம்.ரெம்ப நன்றிப்பா உங்க வாழ்த்துக்கு.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

halo

அருமையாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரேணுகா எப்படி இருக்கீங்க , பிள்ளைகள் நலமா? ரொம்ப அழகா செய்து காண்பித்து இருக்கீங்க ,
ஏற்கன்வே உங்கள் கை வினை பொருளில் ஏரோபிளேன் பார்த்து இருக்கேன்.
உஙக்ளுக்கு மிகவும் பொறுமை..

Jaleelakamal

படம் இணைத்ததுக்கு மிகவும் நன்றி அண்ணா

எப்படியோ விட்டு போச்சு சாரி அண்ணா .

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆசியா அக்கா நலமா?இப்ப எங்க இருக்கீங்க? ஊரிலா இங்கு தானா? பசங்க எப்படி இருக்காங்க?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஜலிலா அக்கா நலமா?உங்க பசங்க எப்படி இருக்காங்க?ஊருக்கு எப்ப போறீங்க?அந்த பிளேன் ஞாபகம் இருக்கா அக்கா.இப்ப அது இல்லை தெரியுமா?இவர் தூக்கி போட்டுட்டார் எனக்கு தெரியாமல்,இனி ராகுலுக்கு எதும் செய்யும் போது கட்டாயம் நீங்க சொன்ன மாதிரி போட்டோ எடுத்து வைக்கிறேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

its very cute. well idea for 'WELL'.

very nice ,parkka romba alaga irukku

unmai pesuvathu