தபால் தலை/நாணய சேகரிப்பு

யாருக்காவது தபால் தலை, நாணயங்கள் சேகரிப்பில் ஆர்வம் உண்டா. அது பற்றி பகிர்ந்து கொள்ளவும்.

அன்புடன்
ஜெயா`

haay jeya நான் சேகரிக்கிறேன்பா ஸ்கூல் படிக்கிற நாட்கள்ள இருந்து சேகரிச்சது இப்பவும் இருக்கு /

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று, உங்களுடைய பெயர் வித்தியாசமாகவும், அழகாகவும் உள்ளது.

நானும் கொஞ்சம் சேகரித்து வைத்திருக்கிறேன். நீங்கள் பதிவிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

எந்த மாதிரி சேகரிக்கிறீர்கள். இன்னும் தொடர்ந்து சேகரிக்கிறீர்களா. இதில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது. உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களேன். மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.

அன்புடன்
ஜெயா

ஜெயா இப்போ என் பையன்கூட சேர்ந்து செகரிக்கிறேன் பைஅய்ன் 3வது படிக்கிறார்.இலங்கை ,இந்தியா, அமெரிக்கா. இங்கிலாந்து/ குவைத். கட்டார். டுபாய்,ச்சவூதிஅரேபியா, பாகிஸ்தான், ஈரான், கொரியா.// இன்னும் பல நாடுகளின் முத்திரை இருக்கு, அதிகமா இருப்பது எங்க நாட்டு முத்திரைதான், நாணயம் ஜப்பான், ஜேர்மனி, சீனா. அமெரிக்கா. இங்கிலாந்து , டுபய். மலேசியா. தாய்லாந்து. இந்தியா. சவூதி, கொரியா, இன்னும் இருக்கு கொயின்ஸ்தான் அதிகமா இருக்கு எங்க நாட்டு பழைமையான நாணயங்கலும் இருக்கு.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

எனக்கும் இரண்டிலும் ஆர்வம் உண்டு ஜெயா.

முன்புபோல் தபால்தலைகள் அதிகம் கிடைப்பதில்லை இப்போது. ;( ஊரிலிருந்து தபாலே வரமாட்டேன் என்கிறது. எல்லோரும் மின்னஞ்சல், மின்வாழ்த்துமடல் என்று அனுப்புகிறார்கள். ;)

எங்காவது பயணம் போனால் சுவனீர் ஷாப்பில் கண்ணில் படும் முத்திரைகளை வாங்கிவந்து விடுவேன். நாணயங்களும் அதுபோல்தான்.

முத்திரைகள் நாணயங்கள் சேகரிக்க ஆரம்பித்தது ஆறாம்வகுப்புப் படிக்கையில். அப்போது "சமூகக்கல்வி வெளிக்கள ஏடு" என்று ஒன்று வைத்திருந்தோம் ஒவ்வொருவரும். ஒவ்வொரு அலகு கற்பிக்கும் போதும் ஆசிரியை என்னென்ன சேகரிக்க வேண்டும் என்று சொல்வார். ஒரு முறை முத்திரைகள், நாணயங்கள் சேகரிக்கவேண்டி இருந்தது. அப்போ ஆரம்பித்தது, கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்; இன்றுவரை தொடர்கிறது.

பெரிதாக ஆன்டிக் வால்யூ உள்ள நாணயங்கள் என்று இல்லாவிட்டாலும் ஓரளவு சேகரிப்பு வளர்ந்திருக்கிறது. நோட்டுகளும் சேர்க்கிறேன். பார்க்கிறவர்கள் எல்லோரும் பயமுறுத்தியதில், எல்லாமே இப்போது லாக்கரில் இருக்கிறது. ;)

நோட்டுகள் தனி ஆல்பத்தில் இருக்கிறது.

நாணயங்கள்... ஒவ்வொன்றிலும் குறைந்தது இரண்டு எண்ணிக்கையாவது சேர்க்கப் பார்ப்பேன். ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம். ;) நான்கு சேர்க்க முடிந்தால் சந்தோஷமாக இருக்கும். (என் இரண்டு வாரிசுகளுக்காக.)

சில வருடங்கள் முன்பு Canberra வில் Royal Australian Mint பார்க்கப் போயிருந்தோம். அப்போ என் சின்னவர் ஒரு ஆல்பம் வாங்கிக் கொடுத்தார். அது போதாதென்று தோன்ற, ரீஃபில் பாக்குகள் இரண்டு வாங்கி வந்தேன். ஒவ்வொன்றிலும் ஒரு நாணயம் மட்டும் இதில் இருக்கும். வெகு அருமையானவை என்றால் இருக்கும் அனைத்தையும் ஆல்பத்தில் போட்டுவிடுவேன். மீதி எல்லாம் குட்டிக் குட்டிப் பேழைகளில் தரம் பிரித்து வைத்திருக்கிறேன்.

ஆல்பத்தில் பிடிக்காத விடயம்.... கவனமாகப் புரட்டாவிட்டால் பாரமான நாணயங்களும் மேல் பாக்கட்டுகளில் இருப்பவையும் சட்டென்று விழுந்து வைக்கும். ;(

இந்தத் தலைப்பில் நிறையப் பேசலாம். ;) இப்போதைக்கு... நாணயத்தை செல்லோடேப் போட்டு ஒட்டிவைக்காதீர்கள். நிறம் மாறும். அதுபோல் சுத்தம் செய்கிற வேலையும் கூடுமானவரை வேண்டாம்.

இந்தியாவிலிருந்து திரும்பும் போது சென்னை ஏர்போர்ட்டில் ஒரு அட்டை நாணயங்கள் வாங்கிவந்தேன். பலதும் என்னிடம் இருந்தவைதான், ஆனாலும் இல்லாதவற்றிற்காக ஆசையாக வாங்கினேன். நல்லவிதமாக அட்டையோடு ஒட்டிவைத்திருந்தார்கள். நாணயத்தின் மறுபக்கம் தெரியவில்லை. ;( அதை அட்டையிலிருந்து பிரிக்க முடியவில்லை. ஒருவாறு ஒரு நாணயத்தை மட்டும் கத்தியை விட்டு எடுத்தேன். இன்னமும் க்ளூ & கடதாசி ஒட்டிக் கொண்டே இருக்கிறது. நீரில் போட்டாலும் கழர மாட்டேன் என்கிறது. கர்ர்ர். ;( சுரண்டினால் நாணயம் கெட்டுப் போகும். இன்றுவரை நாணயத்துக்குப் பாதிப்பில்லாமல் எப்படி அதை நீக்குவது என்று யோசித்து யோசித்து ;) அப்படியே அட்டையோடு வைத்திருக்கிறேன். பாதுகாப்பான யோசனைகள் ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

கொஞ்சமா heat பண்ணி பாருங்க...வர வாய்பிருக்கு ..

நான் கூட சின்ன வயசுல விளையாட்டா ஆரம்பிச்சு நிறைய சேர்த்து வச்சுருந்தேன்..ஆனா பசங்க படத்துல வர மாதிரி என் தம்பி ஊருக்கு வந்திருக்கும் போது தெரியாம எடுத்து (திருடி ) அவன் girl friend (friend டு தான்...அப்போ அவன் fourth std தான் படிசுட்ட்ருந்தான்)க்கு கொடுத்துட்டான்...அது எல்லாம் இப்போ எந்த குப்பை ல கிடக்குதோ///

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நன்றி கோமதி. சரிவரும் என்று நினைக்கிறேன். முயற்சித்துவிட்டுச் சொல்றேன்.

ம்.. நானும் ஒரு கட்டத்தில் இருந்த தபால்தலையெல்லாம் ஒரு தோழிக்குக் கொடுத்துவிட்டேன். பிறகு மீண்டும் சேகரிக்க ஆரம்பித்தேன். நாணயங்கள் சேகரிப்பு தடையில்லாமல் தொடர்கிறது.

‍- இமா க்றிஸ்

nan palaya kasu niraya iruku athai yappati expisan panurathu pls tel me

இம்மா,
சுவனீர் ஷாப் என்றால் என்ன? அங்கு நாணயங்கள், தபால்தலைகள் வாங்க கிடைக்குமா?

""அதை அட்டையிலிருந்து பிரிக்க முடியவில்லை. ஒருவாறு ஒரு நாணயத்தை மட்டும் கத்தியை விட்டு எடுத்தேன். இன்னமும் க்ளூ & கடதாசி ஒட்டிக் கொண்டே இருக்கிறது"" என்று சொன்னீர்களே. அதை எடுக்க முடிந்ததா?.

தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்.

ஜெயா

Souvenir Shop - அந்தந்த இடங்களுக்கான நினைவுப் பரிசுப் பொருட்கள் விற்கிற இடம். நியூசிலாந்தில் உள்ள அனேகமான Souvenir Shop களில் முத்திரைகள், நாணயங்கள் கிடைக்கிறது.

அந்த நாணயங்களை இன்னும் பிரிக்க முயற்சிக்கவில்லை. அட்டையில் கூடவே விபரங்களும் இருக்கிறது. அதையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு பிரித்தால் நல்லது என்று நினைத்தேன். இப்போதான் விடுமுறை ஆரம்பித்திருக்கிறது. பார்க்க வேண்டும் விரைவில்.

philately india என்று கூகுள் செய்து பாருங்கள். அங்கு தபால்தலைகள் சேகரிப்போர், விற்பனை செய்வோர் பற்றிய விபரங்கள் கிடைக்கும். ஆன்லைனில் கூட வாங்கலாம்.

புதிதாக வெளியிடும் தபால்தலைகள், முதல்நாளுறைகள் உங்கள் பகுதி தபால்நிலையத்தில் கிடைக்கும் விசாரித்துப் பாருங்கள்.

indian cions என்று தேடுங்கள். ஏராளமான தகவல்கள் கிடைக்கும். புதிய நாணயங்கள் வெளியிட இருப்பதாகத் தெரிந்தால் முன்கூட்டியே உள்ளூர் வங்கியில் விசாரித்துப் பாருங்கள். எங்கு எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்பது தெரியவரும். நகைக்கடைகள், அடவுபிடிக்குமிடம், வெளிநாட்டுப் பணம் மாற்றிக் கொடுக்குமிடங்களிலும் நாணயங்கள், நோட்டுகள் கிடைக்கும்.

* சேகரிப்போர் க்ளப்புகள் இருக்கும். சில தொல்பொருட்காட்சிச்சாலைகளில் விற்பனைப் பிரிவில் நாணயங்கள், முத்திரைகள் இரண்டுமே பார்த்திருக்கிறேன்.
* செகண்ட் ஹாண்ட் கடைகளில் பாருங்கள்.
* வெளிநாட்டவர் தங்கிப் போகும் ஹோட்டல்களில் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லி வைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா.

எனக்கு உங்கள் அளவிற்கு தெரியவில்லை. என்னிடம் வெறும் 250 நாணயங்கள் மற்றும் சுமார் 700 தபால் தலைகள் தான் உள்ளன. என்னைப்போல் வெளிநாட்டு தொடர்பு இல்லாதவர்களுக்கு சமீப காலமாக இவைகள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. இனிமேல் நீங்கள் சொன்னதுபோல் முயற்சிக்கிறேன்.
எனக்கு நீங்கள் பதிலளிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஜெயா

மேலும் சில பதிவுகள்