பஹ்ரைனில் வசிப்பவர்கள் யரேனும் இருந்தால் எனக்கு பதில் கூருங்கள்.

பஹ்ரைனில் வசிப்பவர்கள் யரேனும் இருந்தால் எனக்கு பதில் கூருங்கள். எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிரது ஆனால் குழந்தையில்லை. நான் கடந்த 8 மாதமாக அல்-ஹிலால் ஹாஸ்பிடலில் (Al-hilal Hospital) ட்ரிட்மெண்ட் எடுத்துகொண்டுவறுகிரேன் ஆனால் ஒன்றும் பலனில்லை எனக்கு ரெகுலர் ப்ரியட்ஸ் இருந்தது ஆனால் ட்ரிட்மெண்டுக்கு பிறகு 4,6,8 நாள் தள்ளி தள்ளி ப்ரியட் வந்துவிடுகிரது. பஹ்ரைனில் வசிக்கும் தோழிகள் இருந்தால் குழந்தைக்கான ட்ரிட்மெண்ட் எங்கு எடுத்தால் நல்ல் ரிசல்ட் கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

உமா நீங்க பஹ்ரைன்ல பாக்ரத விட இந்தியா போனிங்கனா அங்க ஒரு இடம் இருக்கு பா என் நாத்தனாருக்கு
கொழந்தையே பிறக்காதுனு இருந்தாங்க ஆனா அங்க போனதும் இப்போ ரெண்டு கொழந்தைக்கு அம்மாவா இருக்கா.
நான் கேட்டு சொல்ரேன் பா.இங்க எனக்கு தெரிஞ்சு amh hospital ல அனுராதா நல்லா பாப்பாங்க.முன்னாடி கிம்ஸ்ல
வாணி டாக்டர் இருந்தாங்க அவங்க நல்லா பாப்பாங்க இப்போ அவங்க அங்க இல்ல எங்க இருக்காங்கனு கேட்டு
சொல்றேன் பா

நீங்க எங்க பா இருக்கீங்க பா.

ரொம்ப நன்றி ரியா, நான் குதைபியாவில் (Ghudaibiya) இருக்கிரேன் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள். நான் இந்திய போவாதாகயில்லை. நான் கடந்த வாரம் தான் இந்தியாவில் இருந்து வந்தேன் என் கணவருடைய தம்பிக்கு கல்யாணம் அதான் 10 நாள் லீவு எடுத்து சென்றுவந்தோம். என் கணவர் வீட்டில் ரொம்பவும், என்னையும் என் அம்மாவையும் ஆவமானபடுத்தி விட்டார்கள். ஏனக்கு 3 வருடமாக குழந்தை இல்லை என்பதால் அவர்களை ஏமாற்றி என்னை என் கணவருக்கு கட்டி வைத்து விட்டாதாக ரொம்பவும் கடுமையாக பேசி விட்டார்காள். என்னால் என் அம்மா தான் ரொம்பவும் அவமானபட்டார்கள். என்னை பார்க்க பார்க்க அம்மா அழுதுக்கொண்டே இருக்கிறார்கள். அதான் இனி இந்திய போவதில்லை நான் அங்கு போனாலே குழந்தைய பற்றி தான் கேட்கிறார்கள் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. முடிந்தால் எனக்கு உதவுங்கள். என்னை எல்லோரும் ஓதுக்குவது போல் தோன்றுகிறது. எனக்கு இங்கு யாரும் தோழிகள் இல்லை. இந்த பிரச்சனையில் எனக்கும் என் கணவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போய் விட்டாது. நாங்கள் இருவரும் வேலைக்கு போவதால் இதுவரை பேசிக்கவேயில்லை. அவர்கள் வீட்டில் பேசியது சரி என்பதுபோல் அவர் நடந்து கொள்கிறார். இந்த 3 வருடத்தில் எத்தனையோ சண்டை வந்துள்ளது ஆனால் நாங்கள் பேசாமல் இருந்ததில்லை. இதுவே முதல் முறை. யாருமே என்னுடன் பேசாததால் நீங்கள் பேசியவுடன் என் கவலைகளை உங்களிடம் கொட்டி விட்டேன் என்னை மண்ணித்துவிடுங்கள்.

நானும் குதேபியாதான் பா அஜீப் பக்கத்துல இருக்கேன் பரவாயில்லை பா இதுக்கு எதுக்கு சாரி எல்லாம்
எல்லாரும் ஒரு வித கஷ்டத்துலதான் இந்த அருசுவைல இருக்காங்க இங்க சொல்லிதான் ஆறுதல் பட்டுக்குறாங்க
நானும் அப்படிதான் எனக்கு கஷ்டம் வந்தா இங்க உள்ளவங்ககிட்டதான் கொட்டி தீர்வு கேப்பேன் அத தான நீங்களும்
கேக்குறீங்க அதுக்கு எதுக்கு மன்னிப்பு

ஹாய் உமா .

நீங்க பஹ்ரைன் ல எங்க இருக்கீங்க.? American Mission Hospital ல Dr பானு நல்ல பார்ப்பாங்க,

எதுக்கும் கவலைபடாதிங்க. எல்லா பிரச்னையும் சீக்கிரமே சரியாயிடும். நீங்க மனம் தளராம நம்பிக்கையோட இருங்க. தொடர்ந்து treatment எடுங்க.

சீக்கிரமா உங்களுக்கு பாப்பா வரும். பழசெல்லாம் மறந்துட்டு உங்க கணவர் கூட சகஜமா பேசுங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

உமா al shifa hospitala Dr சுனிதா வும் நல்லா பார்ப்பாங்களாம். சோனியா friend அங்க தான் physiotherapist ஆ இருக்காங்க. அவங்க கிட்ட கேட்டு சோனியா சொன்னங்க. நீங்க A M H or Al Shifa ல பாருங்க. கண்டிப்பா treatment success ஆகும்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

uma neega al hilal la entha dr kita treatment edukurega . radha nagaraj na shine mary kita change panuga . nan first radha dr kita 6 month treatment eduthu oru use ilathathal dr shine mary kita cange paninen . avanga kita 4th month tratment la conceive anen . epa enoda baby ku 6 month aguthu .

நன்றி அருசுவை தோழிகளே, எனக்கு பதிலலித்த அனைத்து நல்லுலங்களுக்கும் மிக்க நன்றி. அனிதா கடந்த 8 மாதமா அல்-ஹிலால்ல டாக்டர் ராதா கிட்ட தான் ட்ரிட்மெண்ட் எடுக்கிரேன் ஆனால் ஒரு பயனும் இல்லா நீங்க சொன்ன ஷய்ன் மேரி (Dr.Shine mary) தமிழ அல்லது மலையாளியா தெரிந்தால் கூறவும்.டாக்டரை மாற்றுவதால் புதிய டாக்டரிடம் காரணம் கூறவேண்டுமா, அப்படியென்றால் என்ன கூறுவது..அல்லது மருத்துவமனைய மாற்றுவதால் நான் ஏற்கனவே எடுத்த எல்லா டெஸ்டையும் மறுபடியும் எடுக்க நேரிடுமா? ப்லீஸ் என் குழப்பங்களுக்கு பதில் தெரிந்தால் கூறுங்கள் தோழிகளே..இப்போது உங்களை தவிர எனக்கு யாரும் இல்லை உதவி செய்யுங்கள் தோழிகளே

பஹ்ரைனில் நல்ல தமிழ் டாக்டர் இருந்தால் கூறுங்கள் தோழிகளே. AMC ஹாஸ்பிடலில் குழந்தைக்கான டிரிட்மெண்ட் எடுக்க எவ்வளவு செலவு ஆகும். தெரிந்த தோழிகள் உதவுங்கள் please... reply me...

யாருமே இல்லையா பதில் சொல்லுங்கள் please.. help me...

மேலும் சில பதிவுகள்