புக் ஹோல்டர்

தேதி: March 22, 2012

5
Average: 4.5 (8 votes)

 

எம்டி பாக்ஸ்
கத்தரிக்கோல்
பெயிண்ட் அல்லது கலர் பேப்பர்
பழைய நியூஸ் பேப்பர்
க்ளூ

 

ஏதேனும் காலி அட்டை பெட்டியை எடுத்து கொள்ளவும். நியூஸ் பேப்பரை குச்சி போல் சுருட்டி ஒட்டி வைக்கவும்.
பாக்ஸை படத்தில் உள்ள வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
வெட்டி வைத்துள்ள பாக்ஸின் மேல் க்ளூ தடவி பேப்பர் குச்சிகளை வரிசையாக ஒட்டி கொண்டே வரவும்.
பாக்ஸ் முழுவதும் ஒட்டி முடித்தவுடன் அதன் மேல் பெயிண்ட் செய்யவும். அல்லது கலர் பேப்பரை ஒட்டி விடவும்.
எளிமையான புக்ஸ் ஹோல்டர் தயார். இது போல் புக்ஸ் அடுக்கி வைத்தால் புக் ஷெல்ப் கலையாமல் நேர்த்தியாக இருக்கும். அடுக்குவதும் எளிது. தேர்வு செய்யும் பாக்ஸ் கெட்டியாக இருந்தால் நியூஸ் பேப்பர் ஒட்ட தேவையில்லை. கலர் பேப்பர் கொண்டே அலங்கரிக்கலாம். அதே போல் நாம் வைக்க போகும் புக்ஸ், பாக்ஸ் உள்ளே நுழையுமா என சரி பார்த்த பின் வெட்டவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சிம்பிளான சூப்பரான ஹோல்டர். அழகா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புக் ஹோல்டர் ஐடியா சூப்பர். வாழ்த்துக்கள்.

அழகா,நேர்த்தியான வடிவத்தில் வெட்டியிருக்கீங்க,சிம்பிளி சூப்பர்ப்.

கிரியேட்டிவ்வான உபயோகமான கைவினை.. வாழ்த்துக்களும் நன்றிகளும்.. :)

சூப்பர் ஐடியா ரேணு.

‍- இமா க்றிஸ்