தங்கநகைகளை பேங்க் லாக்கரில் எப்படி வைப்பது???எந்த வங்கியில் நகைக்கு நல்ல பாதுகாப்பு???

தங்க நகைகளை எந்த வங்கியில் வைப்பது,அதனால் நமக்கு என்ன பாதுகாப்பு,எப்படி வைப்பது அந்த வங்கியின் விதிமுறைகள் என்ன, நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம் வருடத்திற்கு 1 முறை மட்டுமே ஊருக்கு செல்லமுடியும் யாருடைய பெயரில் வைத்தால் நல்லது,வேறு யாருடைய பெயரிலும் வைத்தால் பின்னாடி எதாவது பிரச்சினை வருமா? இதை பற்றி சொல்லுங்க தோழிகளே எனக்கு இது தான் முதல் முறை தங்க நகைகளை வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பது....
எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே ப்ளீஸ்...

கவிதா, ஏதாவது நேஷனலைஸ்ட் பேங்கில் லாக்கர் வாங்குங்க. லாக்கர் கிடைப்பது எனக்குத் தெரிந்து அத்தனை சுலபம் இல்லை. நீங்க லாக்கர் கேட்கும் வங்கியில் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்க வேண்டும். நீங்கள் கேட்கும் ப்ராஞ்சில் லாக்கர் காலியாக இருந்தால் உங்களுக்கு கொடுப்பார்கள். முதலில் லாக்கர் வேணும்னு அந்த பேங்கில் அப்ளிகேஷன் கொடுங்க. லாக்கர் காலி இல்லேன்னா வெயிட்டிங் லிஸ்டில் வைப்பாங்க. ஏதாவது காலியாகும் போது வரிசைப் படி கிடைக்கும். மேனேஜர் தெரிஞ்சவரா இருந்தால் விரைவில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது :). எனக்குத் தெரிந்த விபரம் இது மட்டுமே! பேங்கில் வேலை பார்ப்பவர்கள் சொன்னால் இன்னும் விளக்கம் கிடைக்கும்.

உங்கள் பெயரிலேயே வாங்கலாம். ஆனால் நீங்க ஊரில் இல்லாத போது ஏதோ தேவைக்கு எடுக்கனும்னா கூட நீங்க வர வ்வேண்டி இருக்கும். அதனால் உங்கள் பெயரிலும் கூடவே இந்தியாவில் உள்ள உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் (உங்கள்ள் இருவரின் பெற்றோரில் யாராவது) பெயரிலும் சேர்ந்து ஜாய்ன்டாக லாக்கர் வாங்கலாம். அப்படீன்னா உங்களால் வர முடியலேன்னா கூட மற்றவரால் லாக்கரை பயன் படுத்த முடியும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல முடிவு...
அரசுடமை ஆக்க பட்ட வங்கிகளில் வைக்கலாம்...(முக்கியமா கண்காணிப்பு கேமரா இருக்குதான்னு பார்த்து வைக்கணும்!!!! )
லாக்கர் ஓபன் பண்ணுவதற்கு முன்னால் அந்த வங்கியில் a /c இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட தொகையை fixed deposit ஆக போட சொல்லுவார்கள்.இது 10000 முதல் இருக்கும்.வங்கிக்கு வங்கி வேறு படுகிறது...
ஒவ்வொரு வருடமும் லாக்கர் க்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.அந்த கட்டணம் செலுத்தும் அளவிற்கு fixed deposit போட்டால் அந்த வட்டியை அவர்களே கட்டணமாக எடுத்து கொள்ளவார்கள்.மீதம் உள்ள வட்டி பணம் நம் A /c இல் இருக்கும்...

நீங்கள்,உங்கள் கணவர்,இன்னும் ஒரு ஊரில் இருக்கும் ஒரு நம்பிக்கை குரியவர் பேரில் ஓபன் செய்யலாம்...இந்த மூவரில் யார் வேண்டுமானாலும் நகை எடுக்க முடியும்.மூவருக்கும் A /c இருக்க வேண்டும்.

லாக்கர் ஓபன் செய்தவுடன் உங்களிடம் ஒரு சாவியும் வங்கி மேலாளரிடம் ஒரு சாவியும் இருக்கும்.நீங்கள் ஓபன் செய்ய வேண்டும் என்றால் முதலில் வங்கிக்கு சென்று ஒரு லேட்ஜெரில் கையொப்பமிட வேண்டும்.இந்த தேதிக்கு இன்னார் இந்த லாக்கர் ஓபன் செய்கிறேன் என்று.உங்கள் லாக்கரில் என்ன வைத்து இருக்குறீர்கள் என்று வங்கிக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது...அதே போல் ஒவ்வொரு முறையும் நீங்கள் திறக்கும் பொது என எடுத்தீர்கள் என்ன வைத்தீர்கள் என்று வங்கி உங்களிடம் கேக்கவும் செய்யாது.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஆமாம்... கவிசிவா சொன்னதே தான். :) கூடவே லாக்கர் கேட்கும் பேங்கில் உங்களுக்கு நல்ல ஹெஅவ்ய் அமவுண்ட் டெபாசிட் இருந்தா இன்னும் சுலபம், உங்களுக்கு தான் ஹை ப்ரயாரிட்டி கிடைக்கும். உதாரணமா ஒரு 1 லட்சம் ஃபிக்ஸட்’ல போட்டுட்டு உடனே லாக்கர் அப்லிகேஷன் கொடுங்க ;) அடுத்த ஒரு மாசத்துல குடுத்துருவாங்க. அந்த பணத்தோட வட்டியை அந்த லாக்கர்’கு செலுத்த வேண்டிய பணத்துக்கு அனுப்பிடலாம். இன்னும் சுலபம்.

லாக்கரில் சைஸ் கூட இருக்கு. சின்னது, பெருசு... சின்னது வெறும் நகை வைக்க, பெருசு கூடவே டாக்குமண்ட்ஸ் வைக்கலாம். அதெல்லாம் பார்த்து கேட்டு வாங்குங்க.

சேஃப்டி... ;) அது இப்போ எந்த பேன்க்லையும் இல்லைங்கோ!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி கோமதி என் சந்தேகத்தை தீர்த்துவைத்ததற்கு.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நான் தட்டிட்டு வந்து பார்த்தா கோமதி முந்திட்டாங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் தட்டிட்டு வரதுக்குள்ள கவி சிவா முந்திகிட்டாங்க...!!!!

நீங்கள் நகை எடுக்க போகும் போது லெட்ஜரில் கையெழுத்து போட்ட உடன் உங்கள் வங்கி மேலாளர் அவரிடம் இருக்கும் சாவியை கொண்டு முதலில் திறந்து விடுவார்.அவர் சென்ற உடன் உங்களிடம் இருக்கும் சாவியை போட்டு திறந்தாள் தான் லாக்கர் முழுமையாக திறக்க முடியும்.அதே போல வேலை முடிந்துடன் உங்களிடம் இருக்கும் சாவியை கொண்டு லாக்கரை பூட்டினால் போதுமானது... அதற்க்கு மேலாளர் வர வேண்டிய அவசியம் இல்லை.திறப்பதற்கே அவர் வருவார்.அதுவும் authorized பெர்சன் லேட்ஜெரில் sign செய்திருக்கும் பட்சத்தில் மட்டுமே லாக்கர் ஓபன் செய்ய அனுமதி கிடைக்கும்.லாக்கர் உக்கு nominee கூட நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ரொம்ப நன்றி கவிசிவா,
ரொம்ப நன்றி வனிதா...
அருமையா என் ஐயத்தை போக்கிட்டிங்க பா...
வனிதா கூடவே பயமுறுத்தீட்டீங்க...குட் கேள் ...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

இருங்க..அவசர படாதீங்க...
நகை எடுத்துட்டு ஒழுங்கா பூட்டிட்டு வரணும்...எங்க அப்பா பாங்குல இருந்ததால நிறைய கதை சொல்லுவாங்க...சில பேர் சரியாய் மூடாம மூடினதா நினச்சுட்டு போயடுவான்கலாம்.அப்புறம் வங்கி ல உள்ளவங்க பார்த்து அந்த ஆள கூப்பிட்டு வந்து பூட்ட சொல்லணும்.அதுக்குள்ள வேற யாராச்சும் தொறந்து இருக்குறத பார்த்து உள்ள இருக்கறதா எடுத்துட்ட போச்சு...பயமுருதரதுக்காக சொல்லல்ல..அப்புறமா வந்து அத காணும் இத காணும் னா வங்கி பொறுப்பு கிடையாது...நீங்க என்ன உள்ள வச்சிந்கன்னே வங்கிக்கு தெரிய போறதில்ல...கவனமா இருக்கணும்...உங்க லோச்கேருக்கு ஒரு நம்பர் கொடுப்பாங்க...அந்த நம்பர் சொல்லித்தான் ஓபன் பண்ண முடியும்.சாவியை பத்திரமா வச்சுக்கணும்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனக்கு எந்த பேங்க்லையும் அக்கவுண்ட் இல்லை பா எங்களுக்கு கிடைப்பதோ 1 மாத லீவு அதற்குள் ஊருக்கு போய் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அதற்குள் நகைகளை வைத்துவிட்டு வந்து விடலாமா? இல்லை இங்க இருந்தே அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி விட்டு ஊருக்கு போகலாமா,இங்க இருந்து அக்கவுண்ட் ஓப்பன் பண்ண முடியுமா?

தோழிகளே அப்படியே இந்த சந்தேகத்தையும் தீர்த்து வைச்சுருங்க பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ankke ungalukku yaravathu erunthal account open panna sollunga.sry anaku tamil type thiriyathu.

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

மேலும் சில பதிவுகள்