தங்கநகைகளை பேங்க் லாக்கரில் எப்படி வைப்பது???எந்த வங்கியில் நகைக்கு நல்ல பாதுகாப்பு???

தங்க நகைகளை எந்த வங்கியில் வைப்பது,அதனால் நமக்கு என்ன பாதுகாப்பு,எப்படி வைப்பது அந்த வங்கியின் விதிமுறைகள் என்ன, நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம் வருடத்திற்கு 1 முறை மட்டுமே ஊருக்கு செல்லமுடியும் யாருடைய பெயரில் வைத்தால் நல்லது,வேறு யாருடைய பெயரிலும் வைத்தால் பின்னாடி எதாவது பிரச்சினை வருமா? இதை பற்றி சொல்லுங்க தோழிகளே எனக்கு இது தான் முதல் முறை தங்க நகைகளை வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பது....
எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே ப்ளீஸ்...

லாக்கர் கிடக்குறது பெரிய குதிரை கொம்பு... உங்களுக்கு தெரிஞ்சவங்க மூலமா போன வாய்பிருக்கு...இல்லன்னா பிரைவேட் பேங்க் தான்...!!!!

இல்லன்னா இன்னொரு வழி இருக்கு... A /c மட்டும் ஓபன் பண்ணிட்டு nationalized பாங்குல நகையை அடகு வச்சுடுங்க...அடகு வைச்சு வர பணத்தை அங்கேயே A /c ஓபன் பண்ணி போட்டுடுங்க...வர வட்டியை வச்சு வங்கியை நகைக்கு உள்ள பணத்த எடுத்துக்க சொல்லிடுங்க...நகையும் safe எ பாங்குக்கு போய்டும்...வேணும் போது எடுத்துக்கவும் செய்யலாம்...லாக்கர் ல வைக்குறத விட இதுதான் லாபம் ன்னு எங்கயோ படிச்சுருக்கேன் ...கிடைச்சா இன்னும் விவரமா சொல்றேன்.

இப்போதைக்கு லாக்கர் கிடைக்கலன்ன இப்படி செஞ்சுட்டு வந்துடுங்க...அடுத்த முறை ஊருக்கு போகும் போது லாக்கர் கிடைச்ச மாத்திட்டு லாக்கர் ல வச்சுடுங்க....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கவிதா....அங்கிருந்தல்லாம் அக்கௌன்ட் ஓபன் பண்ண முடியாது. நேரில் போய்தான் பண்ணணும். அதற்கும் யாராவது அக்கௌண்ட் இருப்பவர் உங்களை அறிமுகம் பண்ணணும். உன் பேரண்ட்ஸ், அல்லது உன் கணவர் வீட்டார் அக்கௌண்ட் இருந்தால் அவர்கள் மூலம் நீ ஓப்பன் பண்ணு. அதன்பின்பு நகையை லாக்கரில் வைக்கலாம். எல்லா வங்கிகளும் பாதுகாப்பானதுதான். பயம் வேண்டாம்.

கோமதி சொல்வது உண்மைதான் இப்படி சிலர் செய்வதாகவும் கேள்வி பட்டிருக்கேன். பாதுகாப்புக்கு பாதுகாப்பும் ஆச்சு. அதை பாதுகாக்க நமக்கு செலவும் இல்லை :). ஆனால் அப்படி அடகு வைக்கும் போது ஒரே ஈடாக வைக்காமல் செட் செட்டாக பிரித்து வைத்தால் தேவைக்கு வேன்டிய செட்களை மட்டும் மீட்டு பயன் படுத்தலாம். மீதி எல்லாம் பாதுகாப்பா பேங்கில் இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அடகு வைப்பதில் கஷ்டம் இருக்குப்பா...நகைகளை அழகாக பாக்ஸில் வைக்க முடியாது. துணிப்பைகளில் சுருட்டி வைப்பார்கள். அதனால் நகைகள் கட் ஆகிவிட வாய்ப்பு உண்டு. அதோட எதுக்கு அநாவசியமாக வட்டி கட்ட வேண்டும்? அதனால் நீ போய் ஒரு NRI (Non-Resident Indian) ஓப்பன் பண்ணு. ஸேஃபா நகையை லாக்கர்ல வை. நகையும் மெருகு குலையாம, வீணாகாம இருக்கும். டெபாஸிட் போட்டால் எந்த அரசுடைமை வங்கியிலும் கணக்கு ஓப்பன் பண்ணலாம்.

இல்லம்மா...லாக்கர் விட பணம் இடத்துக்குதான் கம்மின்னு நான் படிச்சுருக்கேன்..அதோட நம்ம எவ்வளவு வச்சுருக்கோம் ...நு பாங்குல ஒரு கணக்கு இருக்கும்...நகைக்கு எதாவது ஆனா கூட பேங்க் பொறுப்பா போய்டுமே...(கவிதா டென்ஷன் ஆகாதீங்க!!!!!)
துணில கட்டி வைப்பாங்களா?இது எனக்கு தெரியாது...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஆஹா நகையை சுருட்டி வைப்பாங்கலா??ஆஆஆஆஆ ,ராதாம்மா NRI எப்படி ஓப்பன் பண்ணுரது உங்களுக்கு தெரியுமா? ஆஹா கண்ண கட்டி காட்டுல விட்டது மாதிரில இருக்கு......

நன்றி ராதாம்மா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

தோழிகளே எல்லாத்தையும் சொன்னிங்களே ஆனா நகையை சுருட்டி வைப்பாங்கனு சொல்லாமா விட்டிங்களே!! ஏன்டா செல்லங்கலா ஏன்....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஹை கவிதா எப்புடி இருகின்ங? உங்க சொந்த ஊர் எது? லாக்க்ர் ரொம்ம்ப safe than. but avanga oru key kondu open panni viduvanga. nammakita 2 keys irukum. 3 key [potta than open agum. neenga lock pannnama irunthalum. avanga key potta than open. neenga lock pottu than varuvinga.

கவிதா...நான் உனக்கு மெயில் அனுப்பறேன்...FBல வந்து மெயில் ID கொடு

ரொம்ப நன்றி ராதாம்மா கண்டிப்பா தருரேன் ....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்