கரப்பான்பூச்சி தொல்லையில் இருந்து விடுதலை

தோழிகளே எங்கள் வீடு கரப்பான்பூச்சி தொல்லையில் இருந்து விடுதலை பெற்றுவிட்டது. "cockroach killing bait powder" green leaf கம்பெனி, சீனா தயாரிப்பு, இந்த மருந்தை தூவி ஒரே நாளில் கரப்பான்பூச்சிகளை ஒழித்து கட்டிவிட்டேன். இந்த மருந்து அனைத்து நாடுகளிலும் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை. கிடைத்தால் உபயோகபடுத்தி பாருங்கள், நன்றாக உள்ளது.

அனு, எப்படி பயன்படுத்துவது? இந்த பவுடர் காங்கோவில் எங்கே கிடைக்கும்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அந்த மருந்து இந்தியால கிடைக்குமா எங்க வீட்டுல தொல்லை முடியலை கிட்சன் ,பாத்ரூம் எல்லா இடத்திலயும் ரொம்ப அதிகமா இருக்கு நான் ஹிட் அடிச்சு பார்த்துட்டேன் அன்று மட்டும் இருக்கறது செத்து போகுது மறுபடியும் வந்து விடுகிறது

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க..பொடி தூவிங்கறீங்க அதுவும் சீன தயாரிப்பு கொஞ்சம் பயம் மனசில் இருப்பது நல்லது..அவங்க குழந்தைக பால் பொடியில மெலாமின் கலக்கும்போது கரப்பான்பூச்சிக்கு எதை கலக்குவாங்கன்னு தெரியாது..பூச்சியை ஒழிக்கும் எல்லாமே கேடு தான் இருந்தாலும் ஜெல் மாதிரி இருந்தா அவ்வளவா சுவாசிக்கும்போதெல்லாம் உள்ளுக்குள் செல்லாதுன்னு ஒரு ஃபீலிங்.வீட்ல குழந்தைக இருந்தா கவனமா உபயோகிங்க
மத்தபடி இப்போல்லாம் சுத்தமா மருந்துகளுக்கு கரப்பான்பூச்சி சாக மாட்டேன் என்கிறது அதற்கு இந்த தகவல் உபயோகமானது

நாங்க ஹைதராபாத்தில் இருந்த போது போரிக் பவுடர் மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும் பா.. அதனுடன் சிறிது மைதா மாவு, பால் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சன்னல், கதவு, கப்போர்ட் ஓரங்களில் குழந்தைகளுக்கு எட்டாமல் வைத்து விட்டால் ஒரு வாரத்தில் ஓடி விடும் ..ட்ரை பண்ணி பாருங்க.

i will try it

god with us

சைனா பவுடர் ரொம்ப எபக்டிவ், 8 மாதம் வரை கூட கரப்பான் வராது எல்லா இடத்திலும் கிடைக்குமான்னு தெரியல, கிடக்க்காதவர்கள்

போரிக் உருண்டை தான் அதுவும் ஓரளவுக்கு கரப்பான் வராமல் தடுக்கும்

Jaleelakamal

சைனா பவுடரா அது என்ன எப்படி கடையில கேக்குரது...சொல்லுங்க பானு எங்க வீட்டுலையும் கரப்பான் பூச்சி இருக்கு

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அனு அந்த பவுடர் எல்லா இடத்துலையும் கிடைக்குமா? எப்படி பயன்படுத்துவது?குழந்தைகளுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அது எல்லா இடத்திலும் கிடைக்குமான்னு தெரியாது

ஆனால் குழந்தைகள் கண்ணில் படக்கூடாது.
சிறிய பாக்கு பாக்கெட் போல் இருக்கும்

அதிக விஷம்

அங்க அங்க கேஸ் பின்னாடி , கதவுக்கு பின்னாடி கபோட் உள்லே இப்ப்டி ஒரு சிட்டிக்கை கைபடாமல் தூவி விடனும்,

ரூமில் கபோட் உள்ளே போடாதீங்க

மூலை முடுக்குகளில் குழந்தைகள் விளையாடாத இடமா பார்த்து போடுங்கள்

அங்கு போட்டாலே கரப்பான் போய் இரவில் அடையும் போது உடனே எபக்ட் இருக்கும்.
தினம் கொஞ்சம் கொஞ்சமா மயங்கி செத்துடும்..
பிறகு அரவே வராது..

Jaleelakamal

ஜலீலா பானு ரொம்ப நன்றி பா நானும் போட்டு பாக்குறேன் ,அது சைனா பவுடர் நு shop la கேட்டா போதுமா?

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்