உங்களால் முடிந்த உதவி செய்யுங்க plz

உதவுங்கள் தோழிகளே.எனக்கு androgen hormone excess ஆ இருக்கு.அதனால் மருத்துவரின் ஆலோசனை படி கருத்தடை மாத்திரை ஒன்றரை வருடங்களாக உபையோகிறேன்.pills யூஸ் பண்றதுக்கு முன்னாடி period 3 monthsku ஒரு தடவை தான் வரும்.இப்பவும் சரிவரல .பில்ஸ் தான் எடுக்றேன்.வருகிற செப்டம்பர் 9 எனக்கு திருமணம் .என்ன செய்றதுன்னே புரியல.எனக்கு pcos இல்ல.ஈஸ்ட்ரோஜென் குறைவா
அன்றோஜென் அதிகமா இருக்குறதா டாக்டர் சொன்னங்க.குழந்தை உண்டாவதும் கஷ்டம் என்று சொல்றாங்க.இவ்ளோ செலவு பண்ணியும் ஒன்னும் சரியாகல.திருமணம் நெருங்கி விட்டது.என் மாமியார் வீட்டுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது.நான் அவர்களிடம் நல்லபடியா நடம்துகிட்டு நல்லபேர் வாங்கனும்னு நினைக்கிறன்.அவங்க மேல பாசமும் மரியாதையும் ரொம்ப வைத்துளேன்.இது பற்றி எழுதும்போதே அழுகையா வந்து விட்டது.அவர்களும் என் மீது அன்போடு இருக்கிறார்கள்.திருமணம் முடிந்த கையோடு எல்லாரும் எதிர்பார்ப்பது ஒன்று தான் குழந்தை.அது இல்லை என்றால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பெரிய சண்டையாக முடியும்.இதை நான் துளியும் விரும்பவில்லை.நான் இறைவனிடம் வேண்டிகிட்டு தான் இருக்கிறேன்.நான் பில்ஸ் இனிமே யூஸ் பண்லாமா.பக்கவிளைவுகள் என்ன?டாக்டர் திருமணம் வரைக்கும் யூஸ் பண்ண சொல்றாங்க.ஆனால் period lighta தான் இருக்கு.டாக்டர் சொன்னது போல் இப்படி இர்ரெகுலர் periods இருந்தால் குழந்தை உண்டாவது கஷ்டமா.எனக்கு வயது வந்தவுடன் சரியாக வந்த விலக்கு 4 வருடங்களாக இப்படி.திருமணதிற்கு பிறகு தானாக சரியாக வாய்ப்பு உள்ளதா?யாருக்காவது சரியாகி இருக்கா.எனக்கு ovulation ஆவதில் பிரச்னை என்ன செய்வது?பில்ஸ். சாபிட்டால் ovulation ஆகாதாம் அப்போ periods மட்டும் எப்படி?என்னை தப்பா நினைக்காதிங்க.உங்க தங்கையாக நினைத்து பதில் சொல்லுங்க. plz ...

ஹாய் அனிஸ்! திருமணத்துக்கு இன்னும் ஆறு மாதம் இருக்குல்ல. அதுக்கு முன்னாடி ஒரு நல்ல என்டோக்ரேனாலஜிஸ்ட் பாருங்க. அவங்க ஒப்பீனியன் கேளுங்க. யாராவது மருத்துவ தோழிகள் இருந்தால் உங்களுக்கு தெளிவா பதில் சொல்ல முடியும். இந்த பிரச்சினைக்கு கைனகாலஜிஸ்ட் ஆல் நல்ல ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்னு எனக்குத் தோணலை. ஸ்பெஷலிஸ்ட் கன்சல்ட் பண்ணுங்க.

கவலைப்படாமல் வாழ்க்கையை பாசிட்டிவா அப்ரோச் பண்ணுங்க. எல்லாமே நல்ல விதமா நடக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தேங்க்ஸ் அக்கா.நான் வசிப்பது தஞ்சாவூர்.இங்கு நல்ல மருத்துவர் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க.என்னோட டாக்டர் கரு தங்குவதற்கும் மாத்திரை குடுத்தால் போச்சு என்கிறார்.இது சாத்தியமா?

Anything is good for something

தோழியே... ஏன் அதிக கவலை படுகிறீர்கள். கவலைப்படுவது மனதிற்கு நல்லதல்ல, கூலா இருங்க.. ஒரு வருடத்தில் ஒரு செல்லக்குட்டி உங்க வீட்டில்..

கூல் கூல்... இது தான் உங்களுக்கு இப்போது முக்கியம்.

அனிஸ் கவலைப்படாதீங்க. உங்களுக்கு கல்யாணம் ஆனா ப்ரீயட் சரியாக வாய்ப்பு இருக்கும்னு தோணுது. எங்க அக்காக்கும் இப்படித்தான். என்ன அவங்களுக்கு மாசம் முழுதும் இருக்கும். வயது வந்த நாள் முதல். தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுத்து தான் கிளியர் ஆச்சு. இப்ப ஒரு பையன் இருக்கான். மேரேஜ் முடிஞ்சும் 4 வருஷம் ட்ரீட்மென்ட் எடுத்தா. இப்ப அல்லா உதவியால எல்லாம் சரியாச்சு. நீங்க தஞ்சாவூர்னா KRA HOSPITAL LA DR VIJAYA கிட்ட பாருங்க. இப்போ பார்க்கீறாங்களான்னு தெரியல. ஆனா நல்ல டாக்டர். அனிஸ் திரிபுரசுந்தரி,ராதிகா மைக்கேல் கூட நல்லா பார்க்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன்.பா. நீங்க எந்த டாக்டர்கிட்ட காண்பிக்கிறீங்க. இப்போ.

எனக்கு தஞ்சாவூர் பற்றி தெரியாதும்மா! தெரிந்த தோழிகள் வந்து சொல்லுவாங்க. நீங்க நல்ல டாக்டரைப் பார்த்து உங்கள் எல்லா சந்தேகங்களையும் கேட்டு தெளிவாகிடுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

nazeem அக்கா ரொம்ப நன்றி.நான் டாக்டர் சுப்புலட்சுமி(thanjavur)gyeno கிட்ட காண்பிக்கிறேன்.நீங்க சொல்ற டாக்டர்தையும் consult பண்றேன்.எனக்காக dua செயுங்க அக்கா.அல்லா மேல நம்பிக்கை வச்சிருக்கேன்.படைத்தவன் பழுது செய்ய மாட்டான்.

Anything is good for something

கண்ணன் அண்ணா ரொம்ப நன்றி.உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகள் பலிக்கட்டும்.

Anything is good for something

அனீஸ் கவலைபடாதீங்க எல்லாம் சரியாகிடும்.எனக்கும் கல்யாணத்திற்கு முன்னாடி 2 வருடமாக நீர்கட்டி பிரச்சனை இருந்தது. அதனால் 2 மாசத்திற்கு ஒருமுறை தான் periods வரும் நானும் 2 வருடம் treatment எடுத்தும் சரியாகல.ஆனா கல்யாணத்திற்கு அப்புறம் periods regular ஆகிட்டு.அதனால கவலைபடாதீங்க periods regular ஆகிடும் நல்ல டாக்டரை பார்த்து எல்லா பிரச்சனையும் கல்யாணத்திற்கு முன்னாடியே சரி பண்ணுங்கபா.கல்யாணத்துக்கு அப்புரம் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுவீங்கபா.

ஸ்கேன் 2009 இல் எடுத்தேன்.normal என்றார்கள்.ஹார்மோன் மட்டும் தான் problem என்றார்கள்.கருத்தடை மாத்திரை எடுக்குறேன்.நீர்க்கட்டி பற்றி ஒன்றும் சொல்லவில்லைஆனால் முதுகின் அடி பகுதியில் வலி இருக்கிறது.இந்த symptoms உங்களுக்கு இருந்ததா?

Anything is good for something

நசீம் அனிஸ் சொன்ன மாதிரி தன் நானும் நினைக்கிறன் . நம்பிக்கையுடன் டுஅ செய்யுங்கள் எல்லாம் நல்லபடி நடக்கும்

மேலும் சில பதிவுகள்