மெகந்தி டிசைன் - 18

தேதி: March 26, 2012

4
Average: 3.4 (22 votes)

 

மெகந்தி கோன்

 

முழங்கையின் கீழ் பகுதியில் ஒரு மாங்காய் வடிவம் வரைந்து பக்கத்தில் ஒரு வளைவு வரையவும். அதில் இதழ்கள் வரைந்து விசிறி வடிவமும் வரையவும்.
மேலே ஒரு பூ வரைந்து அதன் மேலே சுழி மற்றும் படத்தில் காட்டியுள்ள டிசைனை வரையவும்.
அதற்கு மேலே மாங்காயும், முக்கோணமும் வரைந்து பூவும் வரையவும். பூவின் மறுபுறத்தில் சுழிகள் வரைந்து அதன் மேலே வளைவுகள் வரையவும்.
இந்த டிசைனுக்கு மேல் மீண்டும் முதலில் வரைந்த டிசைனை (மாங்காய் வடிவம், ஒரு வளைவு, இதழ்கள், விசிறி வடிவம் ) வரைந்து, ஒரு பூ வடிவம் வரையவும்.
ஒரு விரலில் மட்டும் படத்தில் காட்டியுள்ள டிசைனை வரையவும்.
மற்ற விரல்களுக்கு சிறு பூ, சுழிகள் வரைந்து 3 முத்துக்கள் வைத்து முடிக்கவும். காலியாக இருக்கும் இடங்களிலும் முத்துக்கள் வைக்கவும்.
எளிதாக போட கூடிய மெகந்தி டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகான டிசைன், ரெட் கலர் நல்லா வந்து இருக்கு. வாழ்த்துக்கள் பிரியா....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சூப்பரா வந்து இருக்கு ப்ரியா. ரொம்ப அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

உங்க மெகந்தி டிசைன் அழகா போட்டிருக்கீங்க ப்ரியா. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க மெகந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கு பிரியா. வாழ்த்துக்கள்..

மெஹந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கு,இது என்ன மெஹந்தி?கலர் ரெட்டாக இருக்கே?

Eat healthy