இன்றைய காலகட்டத்தில் 2 குழந்தைகள் சரியான முடிவா தோழிகளே?

அன்பு தோழிகளே,

எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.( 3 வயது ).
என் கணவர் இன்னொரு குழந்தை இருந்தால் தான் பிற்காலத்தில் குழந்தைக்கு நல்லது என்று சொல்கிறார்.
எனக்கோ குழப்பமாக உள்ளது.
(i am a graduate.but not working.he is earning (working in a software concern)to well run a middle class life.)
இந்த காலத்தை மனதில் வைத்து அறிவுரை கூறுங்கள் தோழிகளே...

கண்டிப்பா இந்த காலத்துக்கு மட்டும் இல்ல எல்லா காலத்துலயும் ரெண்டு குழந்தைங்க தான் நல்லது.
எனக்கும் ரெண்டு பொண்ணுங்க.அடுத்து அடுத்து வளக்க கொஞ்சம் கஷ்டம்தான் ஆனா அவங்க சேர்ந்து விளையாடும்போது நான்
படற சந்தோஷம் சொல்ல முடியாது.தனியா வளர பசங்களுக்கு அவங்க உணர்ச்சிய கொட்ட ஒரு துணை வேணும் இல்லனா அவங்க எல்லா விஷயத்துக்கும் நம்ம
எதிர்பார்ப்பாங்க இல்லனா தனிமைக்கு போய்டுவாங்க ரெண்டுமே கஷ்டம் தான்.நானும் பிகாம் படிச்சிருக்கேன் வீட்லதான் இருக்கேன் என் கணவர் மட்டுமே
சம்பாதிக்கிரார்,நாங்களும் மிடில் கிலாஸ் தான் பா பசங்களுக்கு நாம குடுக்க போறது நல்ல சாப்பாடு துணி நல்ல படிப்பு அதுக்கு தேவையான பணம் போதும்
பா.பணம் எப்ப வரும்னு தெரியாது நாளைக்கே நீங்க இன்னும் வசதியா வரலாம் அப்போ இன்னொரு கொழந்தை வேணும்னு நினைக்கும் போது
கிடைக்குமானு தெரியாது அதனால இது சரியான வயசு உங்க கொழண்டைக்கு 3 வயசு இப்போ இன்னொரு கொழந்தை பொறந்தா அது நல்லா புரிதலோட
வள்ரும் பா.இது என் கருத்து தப்பா இருந்தா உங்கள கஷ்டபடுத்தி இருந்தா மன்னிசிடுங்க பா.

நீங்க சொல்றது 100% கரெக்ட் தான்.பட் எனக்கு அந்த மனவலிமையை கடவுள் தான் குடுக்கணும் தோழி!!

மனவலிமையை யாரும் பொறக்கும்போதே வாங்கிட்டு வரதில்ல.ஒரு சூழல் நாம அனுபவிக்காத வரைதான் நாம பயப்படுவோம் ஆனா துணிஞ்சி
உள்ள போனா தானா மனவலிமை வந்துரும்.உண்மையா சொன்னா நான் எல்லா விழயத்துக்கும் கவலை படுவேன் ரொம்ப ஜாலியா இருந்தவ
கஷ்டம்னா என்னனே தெரியாது,ஆனா இப்போ வெளி நாட்ல தனியா அடுத்து அடுத்து சின்ன கொழந்தைங்கள வெச்சிட்டு ஒருத்தரோட உதவியும் இல்லாம
நான் தினமும் போராடி போராடி மனவலிமை தானா வந்துருச்சு.இப்போ நான் எத பாத்தும் பயபடறது இல்ல.எல்லாமே சாதாரணமா தோணும்.
அனுபவம்தான் மனவலிமையை தரும்.உங்க கொழந்தைக்காக நீங்க கொஞ்சம் கஷ்டபட்டா அவங்க நாளைக்கு ஒண்ணா இருக்கும்போது அந்த கஷ்டம்
மறந்து போயிரும் பா.இப்ப கூட நான் உங்களுக்கு பதிவு போட்டுட்டு இருக்கும் போது என் பசங்க தனியா ஓண்ணா விளையாடிட்டு இருக்காங்க.
இப்பவும் என் சின்ன பொண்ணுக்கு நான் ஊட்டினா சாப்பிட மாட்டா அவ அக்கா ஊட்டினாதான் சாப்பிடுவா.அவ்ளோ ஒத்துமையா இருப்பாங்க அத
பாக்க எனக்கு சந்தோஷமா இருக்கும்.நாளைக்கு நமக்கு அப்பறம் அவங்களுக்கு என்னதான் அவங்க கணவனோ,மனைவியோ இருந்தாலும் பொறந்த
வீட்டு சொந்தம்னு யாருமே இருக்க மாட்டாங்க.நல்லா யோசிச்சி உங்க கணவரோட கலந்து பேசி முடிவு பண்ணுங்க பா.

உங்களுக்கு கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு வயசும் அநுபவமும் இல்லை.

நான் வீட்ல ஒரே பொண்ணுதான், கூட்டுக்குடும்பமா இருந்ததால எப்பவும் வீட்டுல யாராவது இருந்துட்டே இருப்பாங்க, வீடு எப்பவும் கலகலன்னு இருக்கும். 12 வயது வரைக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அதுக்கு அப்புறம் தனியா வந்துடோம், அந்த நேரத்துல நான் ரொம்ப கஷ்டப்பட்டுடேன்.

பெரியப்பா பசங்க, சித்தப்பா பசங்க, அத்தை பசங்க எல்லாரும் ஒண்ணா இருந்தா தனிமை தெரியாது, ஆனா இப்ப அதெல்லாம் நடக்கறது ரொம்ப rare. குழந்தைங்க விடலை பருவம் வரப்ப கண்டிப்ப வயதை ஒத்த துணையை தேடுவாங்க, ஒரு பாசமான உடன்பிறப்பு வீட்டுல இருந்தா ரொம்ப ஆறுதலா இருக்கும்.

தப்பா எதாவது பேசிருந்தா sorry....

உங்க பதில் எனக்கு ரொம்ப CONVINCINGA இருந்தது.எங்க குழந்தைக்கு எங்களுக்கு அப்புறம் ஒரு துணை கண்டிப்பா வேணும்.என்னதான் இருந்தாலும் BLOOD RELATION மாதிரி வராது.என்னோட பயம் FINANCIALLA MANAGE பண்ண முடியுமானு தான்.BUT AS YOU SAID FUTURELA எப்புடி இருப்போம்னு இப்பவே சொல்ல முடியாது.HOPE FOR THE POSITIVE SIDE.THANKS kuttireyama...

AKILA நீங்க சொல்றது புரியுது.உங்க அனுபவம் கண்டிப்பா உதவியா இருக்கும்.

எனக்காக நேரம் ஒதுக்கி REPLYபண்ணதுக்கு ரொம்ப THANKS FRIENDS...

உடனே இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளுஙகள் அதுதான் நல்லது. வாழ்த்துக்கள்.உங்களைப்போல் குழம்பி இப்போது எங்கள் இரு மகன்களுக்கும் வயது வித்தியாசம் ஏழு.

மேலும் சில பதிவுகள்