பூரண பூரி

தேதி: March 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

 

மேல் மாவுக்கு:
மைதா - ஒரு கோப்பை
சோடா மாவு - 2 சிட்டிகை
உப்பு - சிறிதளவு
வெண்ணெய் - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (மாவு பிசைய)
ஜீரா தயாரிக்க :
சர்க்கரை - ஒரு கோப்பை
தண்ணீர் - முக்கால் கோப்பை
பூரணம் தயாரிக்க:
தேங்காய் - நடுத்தர அளவில் முழு தேங்காய்
சர்க்கரை - 5 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 5
பொரிக்க :
எண்ணெய்


 

தேங்காயை பூப்போல ஒரே சீராக துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தோல் நீக்கி விதையை மட்டும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
மைதாவில் உப்பு, சோடா மாவு, வெண்ணெய், எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வெறும் வாணலியை சூடாக்கி அதில் தேங்காயை ஈரம் போக வதக்கவும்.
பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து, அதன் பின் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கி ஆற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சி இறக்கி வைக்கவும்.
ஊற வைத்த மைதாவை பூரிக்கு இடுவது போல கொஞ்சம் கனமாக தேய்த்து அதில் தயாரித்து வைத்த பூரணத்தை வைத்து சோமாசுக்கு மடிப்பதை போல ஓரங்களை நன்றாக அழுத்தி விட்டு மடிக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, பிறகு எண்ணெய் காய்ந்ததும் தயாரித்து வைத்த பூர்ண பூரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பொரித்து வைத்த பூரிகளை சர்க்கரை பாகில் போட்டு 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பிறகு தட்டுகளில் தனியாக எடுத்து வைத்து முந்திரி, பிஸ்தா, பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & குழுவிற்கு என் நன்றிகள் !!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யம்மி குலோப்ஜாமூன் நிறத்துல சூப்பரான ஸ்வீட். முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்ததும் அழகாக இருக்கு. இன்னும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

வினோ, முதல் பதிவே போட்டு அசத்திட்டே. அந்த தட்டு பூரண பூரியும் உனக்கு தான். நிறம் குலாப் ஜாமுன், டேஸ்ட் பாதுஷா மாதிரி இருக்கும் பா. நேரம் கிடைக்கும் போது செய்து பாரு. வாழ்த்திற்கு நன்றி வினோ :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பாட்னர் பூரண பூரி சூப்பரா இருக்கு படங்கள் அழகா வந்து இருக்கு முந்திரி , பாதாம் வச்சு அலங்கரிச்சு கலக்கிடிங்க இந்த வாரம் பாட்னர் குறிப்பு வாரம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஒரு முடிவோடதான் களம்மிறங்கி இருக்கீங்க. நல்ல ஸ்வீட்டான குறிப்பு, வாழ்த்துக்கள்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

தனா, அதை அலங்கரிக்கறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே. வேணாம் உங்களை வேற எதுக்கு கஷ்டப்படுத்திட்டு ;( ரெண்டு வாண்டுங்களை வச்சுட்டு. செய்து பாருங்க பார்ட்னர். பசங்களுக்கே பிடிச்சிருக்கும். வரவிற்கும்,பதிவிற்கும் தேங்க்ஸ் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அனு,

நாம, வச்ச குடுமி, இல்லைனா மொட்டை ரகம் ;) சமையல் பக்கம் வந்தா ஒரேயடியா இங்கேயே தங்கிடுவேன். கதை பக்கம் போனா ஒரேயடியா அங்கே தங்கிடுவேன். அதனால ஆர்வம் குறையும் வரை சமையல் பணி தொடரும். உங்களையும் இம்சை குறிப்புகள் தொடரும் ;) ஜூனியர் அனு அலவ் பண்ணா செய்து பாருங்க அனு. வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றிகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஹா!!! பூரண பூரி சூப்பராயிருக்கே கல்பூ!!

மழையா பொழிய துவங்கிட்டீங்களா,கலக்குங்க கல்பூ,வாழ்த்துக்கள்.

அசத்தலான குறிப்பு,அருமையான படங்களோடு,பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள் கல்பூ.

அன்புடன்
நித்திலா

நித்தி, பார்க்கறதோட இல்லாம சாப்பிட்டாலும் சூப்பரா இருக்கும் நித்தி. அம்மாகிட்ட சொல்லி பண்ண சொல்லு. மழையெல்லாம் இல்ல நித்தி. தூறல் போடவே நமக்கு மூச்சு வாங்குது. மழை பொழிய அறுசுவைல பல சூறாவளிகள் இருக்காங்க. வருகை + பதிவு + பாராட்டு + வாழ்த்துக்களுக்கு நன்றி நித்தி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

yummy sweet.kandippa try pannittu solraen.epdi tan ungaluku ivlo sweets idea lam varudho.super sister.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

சகலகலா வள்ளி கல்ப்ஸ்.Asusuall this is also looking good.So sweet of u...

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

பூரணபூரி!! ஆஹா சூப்பரா இருக்கும் போல இருக்கே. கல்யாண சீசன் தானே தேங்காய்க்கு என்ன பஞ்சம். செய்துட்டா போச்சு.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

சம்னாஸ், இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. அறுசுவைக்கு வந்துட்டாலே ஆட்டோமெட்டிக்கா இப்படி எல்லாம் ஐடியா வந்துரும்ங்க :) வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஹா கல்ப்ஸ் அருமை போங்க பார்க்கவே சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள் பா,இத்தனை நாள் இந்த திறமையெல்லாம் எங்க ஒளித்து வச்சிருந்தீங்க?
இதை நாங்க (சூரத்காரி)சந்திரகலான்னு சொல்லுவோம்.

கடைசி படத்தில் ஏன் கலர் மாறிடுச்சி கல்ப்ஸ் இப்படித்தான் இருக்குமா? ஜீரால ஊறினதும் கலர் மாறுமா? எப்படி இருந்தா என்ன கலரா முக்கியம் :) எனக்கு பிடிச்ச ஸ்வீட் அப்படியே எனக்கு பார்சல் பண்ணிடுங்க ஆமாம் சொல்லிட்டேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இதுதான் நீங்க சொன்ன பூரண பூரியா...... ஆஹா பார்க்கவே நாக்கூருதே.....
நீங்க பூரின்னு சொன்னதும், நா பூரி மாதிரி ஏதோ ஸ்வீட் டிஷ்ன்னு நெனச்சேன்.....
இது ரொம்ப டிப்றேன்ட்டா இருக்கு...... :) கடைசி படம் ரொம்ப அழகா ப்ரெசென்ட் செய்து இருக்கீங்க..... வாழ்த்துக்கள்.....
ஆமா இது எந்த ஊரு டிஷ்?

வெண்ணிலா, நான் இப்பதான் சமையல் பக்கமே அடி எடுத்து வச்சிருக்கேன். அதுக்குள்ளே சகலகலா வள்ளியா? இல்லை..இல்லவே இல்லை ;) உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி வெண்ணி. வீக் எண்ட் செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பூர்ணிமா, இதற்கு தேங்காய் அத்தனை செலவாகாது பா. பூரி தடிமனாக இருப்பதால் உள்ளே பூரணம் குறைவாக தான் பிடிக்கும். தேங்காய் உள்ளே சும்மா ஒப்புக்கு சப்பாணி ;) மேலே இருக்க பூரி தான் மேட்டரே. செய்து பார்த்துட்டு சொல்லுங்க. செய்யும் நேரமும் குறைவாக தான் ஆகும். வரவிற்கும்,தொடர்ந்த பதிவிற்கும் நன்றிகள் தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுவா, //இந்த திறமையெல்லாம் எங்க ஒளித்து வச்சிருந்தீங்க?// உங்க கிட்டலாம் மறைப்போமா? இதுவும் ரொம்ப நாள் ப்ளான் தான். இப்பதான் நேரம் கிடைச்சது.

//இதை நாங்க (சூரத்காரி)சந்திரகலான்னு சொல்லுவோம்// இதுக்கு வேணா காங்கோகாரின்னு பேர் வச்சிடுவோமா ?? ;))

//கடைசி படத்தில் ஏன் கலர் மாறிடுச்சி கல்ப்ஸ் இப்படித்தான் இருக்குமா? ஜீரால ஊறினதும் கலர் மாறுமா?// பத்மாவுக்கு வந்த டவுட்டே உங்களுக்கும் வந்திருக்கு பா :) ஜீரால ஊறினா இப்படித்தான் கலர் மாறிப்போகும் பா. இது நல்லாவே ஊறிடுச்சி. அதான் இப்படி. உங்களுக்கு கொஞ்சம் கலரா வேணும்னா கொஞ்சம் முன்னாடியே பாகில் இருந்து எடுத்து ஆற வச்சுடுங்க. பூங்கற்பூரமும் கொஞ்சமாக பாகில் போடலாம். உங்களுக்கு வாசம் பிடித்திருந்தால்.

சுவா, உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்க்கும், பாராட்டிற்கும் தேங்க்ஸ் பா :) அண்ணாக்கு செய்து தந்துட்டு வந்து சொல்லுங்க. என்ன சொன்னாருன்னு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தீப்ஸ், இதான் நான் சொன்ன பூரி. அதுக்குள்ளே நீ எப்படி எப்படியோ கற்பனை பண்ணிட்டேல ;( இது குடியாத்தம் ஸ்பெஷல் பா. ஒரு மாதிரி கெஸ் பண்ணி பண்ணது. லீவு கிடைக்கும் போது செய்து பார் தீப்ஸ். வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

HI
நம்ம கல்பூ போல யாரு மச்சான்....
எல்லா கலையிலும் சூப்பர் மச்சான்....
கலக்கல் ஸ்வீட்ட கொடுத்து ஏங்க வச்சான்....???
ithu kku appuram type panna pattu theriyathu kalpana, adjust pannikanga. ரொம்ப அழகா ஈசியா புரிகிற மாதிரி செய்து இருக்கீங்க..... இன்னும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி,

பாட்டு பாடி பதிவை கலகலக்க வச்சுட்டீங்க பா. எல்லாத்தை விட சூப்பர் மேற்கொண்டு பாட்டு தெரியாதுன்னு தங்க்லீஷ்ல அடிச்சு பம்மினீங்க பாருங்க அதான் ;))) கோவிக்காதீங்க சுமி. சும்மா உல்லுல்லாங்காட்டியம் சொன்னேன். டைம் இருக்கும் போது செய்து பார்த்து டேஸ்ட் பாருங்க. உங்கள் பாராட்டு பாட்டு, வாழ்த்துக்களுக்கு ரொம்ம்ம்ப சந்தோஷம். நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Purana poori .super pooripa.ana maitha mavu kanjam naram oora vacha pothuma.enaku sweets na romba pidikum.enaku oru parsal.

Be simple be sample

ரேவ்ஸ், மைதாவை நான் 15 நிமிஷம் ஊற வச்சேன். அதே மாதிரி நீங்களும் ஊற வையுங்க. கண்டிப்பா அனுப்பி வைக்கறேன் ஊருக்கு வந்ததும். வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஒரே குறிப்பு மழையா இருக்கே ரொம்ப நல்லா இருக்கு அக்கா அந்த பிலைட் அப்பிடியே எனக்கு தான் சொல்லிட்டேன் .நேரம் கிடைக்குரப்போ செய்து பார்த்துட்டு சொல்லுறேன் வாழ்த்துக்கள் by Elaya.G

ஐ!!!!! சூப்பரா இருக்கே ரொம்ப பிடிச்சி இருக்கு கல்ப்(பூ) கலக்குறீங்க..... என்னக்கும் வேனும்,,, இதோக்கிளம்பிட்டேன்..வாழ்த்துக்கள் நெக்ஸ்ட் மட்டும் தான் நோ ரெஸ்ட் ஒகே வா நிறைய குறிப்புக்கள் குடுக்க வாழ்த்துக்கள்:))))

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

சூப்பர்....
நமக்கும் கலர் சந்தேகம்தான்.... இப்ப தெளிஞ்சுட்டோம்ல.... ;)

ஆனாலும் அந்த ஜூஸ்.... அப்பாடி நானில்லை எஸ்கேப்பு....

அடடா! கல்ப்ஸ் என்ன ஒரே அசத்தல் குறிப்பா தள்றீங்க;-) சூப்பர்ப் குறிப்பு கல்ப்ஸ் ..ப்ரசண்டேசன் சும்மா செம செம கலக்கல்;-) இப்படி க்ரியேடிவ்வான கல்ப்ஸ ஏன் இத்தனை நாள் ஒழிச்சு வைச்சிருந்தீங்க??;)

ஃபைவ் ஸ்டார் கொடுத்தாச்சு;-) வாழ்த்துக்கள் கல்ப்ஸ் மேலும் மேலும் பல அருமையான குறிப்பு கொடுத்து எங்களை அசத்த;-)

Don't Worry Be Happy.

இளையா, குறிப்பு மழையெல்லாம் இல்ல. தூறல் மட்டும் தான். பிளேட்டை ஏற்கனவே வினோவுக்கு தந்தாச்சே இளை. நான் இந்தியா வந்ததும் வீட்டுக்கு வா. ரெண்டு பிளேட்டா செய்து தர்றேன். வாழ்த்திற்கும்,வரவிற்கும் நன்றி பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

விமலா, உங்களுக்கும் வேணுமா? இளையாவோடயே வந்துருங்க. சேர்ந்தே சாப்ட்டு எஞ்சாய் பண்ணுவோம். நெக்ஸ்ட்..நெக்ஸ்ட்ன்னு மைண்ட் சொல்லுறது ஓயும் வரை ரெஸ்ட் இல்லாம செய்வேன். அப்புறம் மைண்ட் ரெஸ்ட் எடுத்தா, நானும் ரெஸ்ட் தான் ;) வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி விமலா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தேன், //நமக்கும் கலர் சந்தேகம்தான்// முதல் முறை செய்து பார்த்தது. அதான் டைம் தெரியாம ஊற வச்சுட்டேன் ;) அதுவும் நல்லா தான் இருந்தது. கலரை எதிர்பார்க்க முடியாது. கட்டாயம் கலர் வேணும்னா பாகில் இருந்து கொஞ்சம் முன்னாடி எடுத்து ஆற வச்சுடுங்க . அதுக்கும் மேல கலர் வேணும்னா ஃபேரன்லவ்லி தான் போடனும் ;))

காங்கோ ஜூஸ் தானே,இதோ ப்ரெஷ்ஷா ஆகிட்டே இருக்கு. முதல் போணி உங்களுக்கு இந்த முறை ;)

வருகை,பதிவிற்கு நன்றிகள் தேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜெய், நட்சத்திர வள்ளலே, தொடர்ச்சியா நட்சத்திரங்களா அள்ளி தூவுறீங்க. ரொம்ப தேங்க்ஸ் பா. க்ரியேட்டிவிட்டியா? இதுவா? அதுக்கும் ஒரு தேங்க்ஸ் :) குட்டீசுக்கும் செய்து தந்து, நீங்களும் சாப்பிட்டு பார்த்து முடிவு சொல்லுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துகள்.
காங்கோ குலோப்ஜாமூன் சூப்பரா இருக்கு. (கலர் ஜாமூன் போல தான இருக்கு)
(காங்கோகாரம்மா ஒரு முடிவோட தான் இருக்காங்க போல. )
இன்னைக்கு எங்க வீட்டுல பொட்டுகடலை குழம்பு.சூப்பரா இருந்தது.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சு, காங்கோ குலோப் ஜாமுன் பேர் நல்லார்க்கே.. லேட்டா வந்துட்டீங்க. முன்னாடியே சொல்லியிருந்தா இதையே வச்சிருப்பேன் :) பொட்டுக்கடலை குழம்பு பிடிச்சதா பா? தேங்க்ஸ் மஞ்சு ஏற்கனவே வந்த குறிப்பை டேஸ்ட் பண்னி பார்த்ததுக்கும், இந்த குறிப்புக்கு வருகை தந்ததற்கும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்க குறிப்புகள் எளிதில் கிடைக்கும் பொருட்கள் வைத்து செய்யகூடிய அருமையான குறிப்பு கல்ப்ஸ்.பூரண பூரி இந்த தமிழ் புத்தாண்டுக்கு செய்து பக்கத்து வீட்டுக்கு எல்லாம் குடுக்கலம்னு நினைக்கிரேன்.
அதனால் கொஞ்சம் பாகு பதம் சொல்லுங்க கல்ப்ஸ். பூரணத்திற்கு தேங்காய்க்கு பதில் கடலை பருப்பு அல்லது வேறு எதாவது யூஸ் பண்ணலாமா என்றும் சொல்லுங்க கல்ப்ஸ்.

அன்பு கல்பனா,

வித்தியாசமாக, அதே சமயம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடியதாக இருக்கு.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

ப்ரியா,

//அதனால் கொஞ்சம் பாகு பதம் சொல்லுங்க//பாகு நல்லா நல்ல திக்கான சிரப் மாதிரி கைல ஒட்டனும்.

//பூரணத்திற்கு தேங்காய்க்கு பதில் கடலை பருப்பு அல்லது வேறு எதாவது யூஸ் பண்ணலாமா என்றும் சொல்லுங்க கல்ப்ஸ்.// இதுக்கு தேங்காய் மட்டும் தான் சரியா இருக்கும் ப்ரியா. ஜீராவில் ஊற வைப்பதால், கடலை பருப்பெல்லாம் நன்றாக வராது. தேங்காய் ஊறினாலும் டேஸ்ட் கொடுக்கும்.

தமிழ் புத்தாண்டுக்கு செய்து தந்து வீட்டாரை அசத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள். வருகைக்கும், பதிவிற்கும் நன்றிகள் ப்ரியா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சீதாம்மா,

//
வித்தியாசமாக, அதே சமயம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடியதாக இருக்கு.// எங்க வீட்ல இருக்கறதை வச்சு பண்ணிட்டேன். பேரும் கிடைச்சாச்சு ;)

வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பூரண பூரி, புதுசா இருக்கு கல்ப்ஸ்! எனக்கு சோமாஸ் ரொம்ப பிடிக்கும். இது அந்த மாதிரி ஷேப், ஆனா பாதுஷா டேஸ்ட்டில இருக்குமா?!, அட, பாதுஷாவும் பிடிக்கும்! :)(மொத்தத்தில எல்லா ஸ்வீட்டும் பிடிக்கும்...ஹிஹி...ஹி :)) அருமையா இருக்கு. கூடிய சீக்கிரம் செய்து பார்த்திடறேன். வாழ்த்துக்கள் கல்ப்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

சுஜாதா, உங்களை தான் காணோமேன்னு எதிர்பார்த்தேன். லீவ்ல இருக்கீங்களா? உங்க குறிப்புகளையும் காணோம்.

//ஆனா பாதுஷா டேஸ்ட்டில இருக்குமா?!//ஆமா பா, பாதுஷா டேஸ்டில் இருக்கும். செய்த அன்று கொஞ்சூண்டு டேஸ்ட் பார்த்தேன். எப்பவும் பலகாரம் செய்ற அன்னைக்கு சாப்பிட பிடிக்காது. நம்பி செய்யலாம் ;)

செய்துட்டு சொல்லுங்க பா. உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சுஜா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பூரண பூரி,
புதுசா இருக்கே! நமக்கு ஸ்வீட்னா ரொம்ப பிடிக்கும்.இதையும் செய்து பார்த்துடணும். அதுவும் முந்திரியும்,பாதாமும் வைத்து அலங்கரித்து,ப்ரசண்ட் பண்ணியிருப்பது ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள் கல்ப்ஸ்.

அன்பு, எனக்கும் இந்த ஸ்வீட் ரொம்பவே பிடிக்கும் பா. முக்கால் பாகம் டேஸ்ட் பாதுஷா மாதிரி இருக்கும். அதோட தேங்காய் சேர்றதால கொஞ்சம் ருசி வித்யாசப்படும். நீங்களும் செய்து பாருங்க. வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.