பேப்பர் கேக்

தேதி: March 29, 2012

5
Average: 4.6 (26 votes)

 

விருப்பப்பட்ட நிறங்களில் கலர் பேப்பர் - A4 சைஸ்
ஒரு கத்தி

 

ஒரு ஏ4 சைஸ் பேப்பரை 16 துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். (அப்பொழுதுதான் கேக் பெரிய அளவாக தெரியும்). இதுப்போல் விருப்பமான நிறங்களில் தேவையான அளவு நறுக்கி வைக்கவும்.
பேப்பரை எவ்வாறு மடிப்பது, இணைப்பது என்பதை இந்த லின்கில் பார்க்கவும். http://www.arusuvai.com/tamil/node/15022
முதல் இரு வரிசை சேர்ப்பதற்கு பிங்க் கலரில் மடித்த 48 முக்கோணங்கள் வேண்டும். ஒரு வரிசைக்கு 24 என்ற கணக்கில் சேர்த்து வைக்கவும்.
முதலில் இரண்டு வரிசை முடிந்ததும், முதல் வரிசையை படத்தில் காட்டியவாறு முக்கோணங்களை படுக்கை வசமாக இணைக்கவும்.
எல்லா பக்கமும் சேர்த்து வட்டமாக இணைக்கவும். படத்தில் இருப்பது போல் இருக்க வேண்டும். இந்த மூன்று அடுக்குக்கு மொத்தம் 72 பேப்பர் தேவைப்படும். அடுத்து நான்காவது வரிசையும் அடுக்கி அதில் 2 பிங்க் மட்டும் விட்டு 3 வது பிங்கை எடுத்து விட்டு மஞ்சள்நிற முக்கோணம் பேப்பரை சொருகவும். இந்த 4 வரிசைக்கு 16 பிங்க் மற்றும் 8 மஞ்சள்நிற முக்கோணங்கள் வேண்டும்.
அடுத்து ஐந்தாவது வரிசையில் 2 மஞ்சள், ஒரு பிங்க் என சேர்க்கவும். ஆறாவது வரிசை முழுவதும் மஞ்சள் பேப்பரை சேர்க்கவும். (5 மற்றும் 6 வது வரிசைக்கு 40 மஞ்சள் மற்றும் 8 பிங்க் நிற முக்கோணங்கள் வேண்டும்.)
55 பேப்பரை ஒன்றன் பின் ஒன்றாக சொருகி வட்டமாக இணைத்து கொள்ளவும். இதை ஒரு பேப்பர் ப்ளேட்டில் வைத்து ஒட்டி விடவும்.
வட்டவடிவ ரிங்கின் ஓரத்தில் கம் தடவி கேக்கை வட்டத்திற்க்குள் வைக்கவும். கேக்கின் மேலே, ஃபோம் சீட்டில் செய்த ரோஜாவை சொருகவும். பேக் செய்யாமலே கேக் ரெடி.
இது பேப்பரை மிகவும் சிறிய முக்கோணங்களாக மடித்து செய்த ஸ்மால் கேக்.
இந்த மீடியம் சைஸ் கேக், ஏ4 சைஸ் பேப்பரை 32 துண்டுகளாக நறுக்கி செய்தது. இதற்கு கீழ் அடுக்கில் வரிக்கு 30 என்றும், மேல் அடுக்கில் வரிக்கு 24 என செய்தது.
இது ஏ4 சைஸ் பேப்பரை நான்கு துண்டுகளாக நறுக்கி செய்தது. இது பெரிதாக இருக்கும். மேலும் கேக்கை அலங்கரிக்க மணிகள் பயன்படுத்தலாம். கிப்ட் கொடுக்க ஏற்ற கேக்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

உங்களின் திறமையைபாராட்ட வார்த்தைகளே இல்லை,சூப்பரோ சூப்பர். கலர் காம்பினேஷனும் அருமை.

சூப்பர்.. சூப்பர்.. சூப்பரோ சூப்பர்.. :)

கண்ணைக் கவர்கிறது, கொள்ளை அழகு இந்த பேப்பர் கேக்...வாழ்த்துக்கள்!!!

Wow...Super...attractive....

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

very very nice.....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அன்பு ரேணுகா,

பாராட்ட வார்த்தைகளே கிடைக்கலை! மிகவும் நேர்த்தியான வேலைப்பாடு, மிகுந்த ஈடுபாட்டுடன் செய்திருக்கீங்க. கண்ணுக்குக் குளிர்ச்சியான கலர் காம்பினேஷன்! இன்னும் சொல்ல ஆசை, வார்த்தைகள்தான் கிடைக்கல.

மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

யார்னு பார்க்காமலே சொல்றேன்.... ரேணு. ;)

‍- இமா க்றிஸ்

சீதாலக்ஷ்மி சொன்னதை நான் சொன்னதா நினைச்சு திரும்பப் படிச்சுக்கங்க.

இந்த வேலைல உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. பாராட்டுகள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப திருத்தமான அழகான வேலைப்பாடு. பார்த்துட்டே இருக்கலாம்... முகப்புக்கே அழகை கூட்டிடுச்சு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமை அருமை அருமை ...... , வேறு வார்த்தைகளே தோன்றவில்லை . பாராட்டுக்கள் .

நடப்பவை யாவும் நன்மைக்கே .
சிவகாமி

பேப்பர் கேக் ரொம்ப அழகாக இருக்கு. கலர் காம்பினேஷனும் சூப்பர் வாழ்த்துக்கள் ரேணு. இந்த பேப்பர் முக்கோணங்களை வைத்து வாத்து செய்து இருந்தீங்களே அது போன்று சொல்லி தரமுடியுமா?

சூப்பரோ சூப்பர் அழகோ அழகு வார்த்தையில்லை சொல்ல வாழ்த்துகள் தோழி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

wow.எத்தனை அழகு ,சூப்பர்

பரணிகா:)

really super.... wonderful.. congrats renuga

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

வாவ் சூப்பர் ... நல்ல அழகா இருக்குது ....

SUPER...........

NEENGA IDHA ORU BUSINESSAVEY PANNALAM PONGA.LAABAM ALLUM.

LOVE THIS SO MUCH YA... UNGALUKKU PIDICHA YELLOW COLORLA CAKE JOLIKUDHU...

வாவ்... ரேணு, லவ்லி பேப்பர் கேக்ஸ்! :) அழகான வேலைப்பாடு, அருமையான கலர் காம்பினேஷன், திருத்தமாக செய்து காட்டியிருக்கும் முறை என எல்லாமுமாக சேர்ந்து அமர்க்களமா இருக்கு!!! கண்டிப்பா என் பொண்ணோட சேர்ந்து செய்து பார்க்கிறேன். பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

சூப்பர் கைவேலை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரொம்ப அருமையாக செய்து காண்பித்து இருக்கீங்க ரேணுகா
உங்களுக்கு பொறுமை ஜாஸ்தி ரேணுகா

Jaleelakamal

உள்ளம் கொள்ளை போகுதே
உங்க கேக்கைக் கண்டதும் உள்ளம் கொள்ளை போகுதே, ரேனுகா என்னால் சொல்ல முடியவில்லை மனம் அப்படியே அதில் ஒன்றித்துப்போய்விட்டது ஒரு அற்புதத்தை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருக்கிறேன், கண்டிப்பா ட்ரை பண்ணிப்பார்க்கனும் ஆனால் எனக்கு பொறுமை ம்ஹூம். நீங்க முக்கோணங்கள செய்து தந்தா .............

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

wow super paper cake. thank u

வாழ்த்து சொன்ன அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.

எல்லோருக்கும் பிடித்ததில் எனக்கு சந்தோஷம்.மீண்டும் மீண்டும் நன்றிகள்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சீதா அம்மா எப்படி இருக்கீங்க?வீட்டில் எல்லாரும் நலமா?உங்களை இங்கே பார்த்ததும் எனக்கு ரெம்ப சந்தோஷம்,உண்மையில் எனக்கு வார்த்தை கிடைக்கல சந்தோஷத்தை வெளி காட்ட...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வினோஜா - அது அண்ணபறவை

வினோஜா எப்படி இருக்கீங்க?உங்களுக்கு இந்த வேலைபாடு பிடித்ததில் மகிழ்ச்சி.
அது வாத்து இல்லைப்பா அண்ணப்பறவை.கட்டாயம் உங்களுக்காக செய்முறை அனுப்பி வைக்கிறேன்.அடுத்த வாரம் நிச்சயம் நீங்க எதிர் பார்க்கலாம்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு உங்களுக்குள் இவ்வளவு திறமை ஒளிஞ்சிருக்கும்னு தெரியவே இல்லை..ஒவ்வொண்ணா வெளிய வருது..ரொம்ப நேர்ந்த்தியா செய்து காமிச்சிருக்கீங்க.அவ்வளவு அழகா இருக்கு

வாவ்...ஒவ்வொரு கேக்கும் ரொம்ப அழகா இருக்கு.விதவிதமான கலரில், நிஜ கேக்கையே மிஞ்சிவிடும் உங்க பேப்பர் கேக்.இது போல் இன்னும் நிறைய கைவினைகளை செய்து அனுப்புங்க. வாழ்த்துக்கள் ரேணுகா.

Hai Renuka Madam,
Hw r u? It was very very nice 2 see.U did a fabulous job.I like it so much madam.
(room pottu yosipingalo)jus for fun mam.
Innum idhu madhiri different ah engaluku sollikudunga.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

arusuvai kalanjiyam site is very usefull for ladies. i like this site very much.

priyamudan, sha.

its so nice.but i want to know how to make the joints