போட்டோ ப்ரேம் டிசைன்

தேதி: April 2, 2012

5
Average: 4.3 (8 votes)

 

கனமான அட்டை
போட்டோ
பெவிக்கால்
ஸ்பாஞ்ச் ஷீட்
தீக்குச்சி
சம்கி
ஸ்டோன்

 

காலண்டர் அட்டை, நோட்புக் அட்டை, கார்ட்போர்டு அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து 23 செ.மீ x 17 செ.மீ என்ற அளவில் நறுக்கி கொள்ளவும்.
அட்டையின் சுற்றளவு விட 2 இன்ச் கூடுதலாக ஸ்பாஞ்ச் ஷீட் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஸ்பாஞ்ச் பின்புறத்தில் அட்டையை வைக்கவும். அதன் நான்கு முனையையும் நறுக்கி விட்டு அட்டையின் ஓரத்தில் பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.
இப்போது ஸ்பாஞ்ச் முன்பக்கத்தில், போட்டோவில் க்ளூ தடவி நடுவில் ஒட்டி விடவும்.
போட்டோவின் வலது, இடது பக்கத்தின் 5, 5 தீக்குச்சிகளாக 4 வரிசைகள் மட்டும் இடைவெளிவிட்டு ஒட்டி வைக்கவும். இதேப்போல் மேலும், கீழும் 5 வரிசைகள் ஒட்டி வைக்கவும்.
பின்னர் போட்டோவின் ஓரங்களில் சம்கியால் அலங்கரிக்கவும். நான்கு மூலைகளின் நடுவிலும் சில்வர்நிற சம்கி அல்லது ஸ்டோன் ஒட்டி முடிக்கவும்.
எளிமையான போட்டோ ப்ரேம் டிசைன் ரெடி. இந்த கைவினையை குழந்தைகளை கொண்டு செய்ய சொல்லலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரேவதி, பத்மா... சூப்பர் சூப்பர் சிம்ப்ளி சூப்பர்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குட் வொர்க் கலர் காம்பினேசன் சூப்பர் டீம் வாழ்த்துக்கள் by Elaya.G

அழகா இருக்கு டீம். எனக்கு உபயோகமாகிறது போல குறிப்பு கொடுத்து இருக்கீங்க. மிக்க நன்றி.
தீக்குச்சியை மாற்றி மாற்றி ஒட்டி இருக்கும் விதம் பிடிச்சு இருக்கு.

‍- இமா க்றிஸ்

போட்டோ ப்ரேம் செய்வதற்கு ரொம்ப சிம்பிளாவும் அழகாவும் இருக்கு.

வாழ்த்துக்கள்!!

வாவ்...எளிய பொருட்கள் கொண்டு அழகான ஃபோட்டோ ப்ரேம்.ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள்.