பள்ளி செல்ல அடம் - என்ன முடிவெடுப்பது?

நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். என் மகனுக்கு 2 1/2 வயது. பள்ளி சென்ற புதிதில் ஒழுங்காக சென்றான். ஒரு வாரம் இந்தியா சென்று வந்த பிறகு வீட்டு நியாபகமாகவே இருக்கிறான். இங்கு மிகவும் தனிமையாக உனறுகிறான். home sick ஆக இருக்கிறான். பள்ளிக்கு செல்ல பயப்படுகிறான். பள்ளியில் நானும் அவனுடன் class room - la இருந்து அழைத்து வருகிறேன். ஒரு நிமிடம் கூட என்னை விட்டு பிரிவதில்லை. வீட்டில் ஓரளவு normalaga இருந்தாலும் பள்ளி செல்ல விரும்புவதில்லை. தோழிகளே உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.

அன்பு தமிழ் .,

சில சமயம் நம்மளாலயே சகஜநிலைக்கு திரும்ப வரது கஷ்டமாச்சே பாவம் குழந்தைதானே என்ன செய்வான்?;(

தினமும் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி நாள் இரவு எக்ஸைட்டிங்க் கிஃப்ட் கொடுங்க்...பென்சில் பாக்ஸ்..ஸ்நாக்ஸ், புது கலரிங் பென்சில் இப்படி எதாவது அதை காலையில் நினைவுபடுத்தி ஸ்கூல் பேக்ல வைச்சு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட காட்டலாம்னு சொல்லி கூட்டிப்போங்க. சாக்லேட்ஸ் வாங்கிக்கொடுத்து ஃப்ரெண்ட்ஸுக்கு கொடுக்கலாம்னு சொல்லி கூட்டிப்போகலாம். இப்படியே உங்க குட்டிப்பையனுக்கு ஸ்கூல்ல வேற என்னவெல்லாம் பிடிக்குமோ அதைப்பற்றி கொஞ்சம் பேசி அவனை சந்தோசமாக்கி அழைத்துப்போங்க..வழக்கத்தை விட அதிக நேரம் அவனுடன் விளையாடி கழியுங்கள், வெளியே கூட்டிப்போங்கள் அது ஒரு வாக் ஆகவும் இருக்கலாம். வீட்டு நினைவு அகலவும், ஸ்கூல் ஆர்வமும் கூடிவர வெகுசில நாட்கள்தான் ஆகும் அதுக்காக உங்க குட்டி மழலைக்கு உதவுங்கள். நீங்க ரொம்ப ஃபோர்ஸ் பண்ணினா அது பிறகு கடினமாயிடும்.. சோ டோண்ட் வொர்ரி ;) ஒரு அம்மாவான உங்களுக்கு தெரியாததா? ஆல்த பெஸ்ட்;-)

Don't Worry Be Happy.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. இதையெல்லாம் நானும் செய்து விட்டேன். வீட்டில் கூட பரவயில்லை. Class room - la எப்போதும் நானும் உடன் இருக்கவேன்டியுள்ளது. தனியாக விட முடியவில்லை. என்ன செய்வதென்றெ புரியவில்லை.

மேலும் சில பதிவுகள்