26 நாள் குழந்தைக்கு வாந்தி

என் தோழிக்கு குழந்தை பிறந்து 26 நாட்கள் ஆகிறது இரண்டு நாட்களாக பால் குடித்ததும் வாந்தி எடுக்கிறான். குடித்த பால் அப்படியே கக்குகிறான் நேற்று டாக்டரிடம் காண்பித்ததில் குழந்தைக்கு நெறைய செக் அப் செய்து ஸ்கேன் ரிப்போர்ட் இல் உணவு குழாய் திக்கா இருப்பதா சொல்லிருக்காங்க. குழந்தை இன்னும் பால் கக்குறான் ரொம்ப டயர்ட் ஆகி இருக்கான் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு இது பெரியா ப்ராப்ளமா? சீக்கிரம் சரி ஆகிடுமா? இது பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் by Elaya.G

என் தோழிக்கு குழந்தை பிறந்து 26
நாட்கள் ஆகிறது இரண்டு நாட்களாக பால்
குடித்ததும் வாந்தி எடுக்கிறான்.
குடித்த பால் அப்படியே கக்குகிறான்
நேற்று டாக்டரிடம் காண்பித்ததில்
குழந்தைக்கு நெறைய செக் அப்
செய்து ஸ்கேன் ரிப்போர்ட் இல்
உணவு குழாய்
திக்கா இருப்பதா சொல்லிருக்காங்க.
குழந்தை இன்னும் பால் கக்குறான் ரொம்ப
டயர்ட் ஆகி இருக்கான் பார்க்கவே ரொம்ப
கஷ்டமா இருக்கு இது பெரியா ப்ராப்ளமா?
சீக்கிரம் சரி ஆகிடுமா?
இது பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம்
சொல்லுங்க ப்ளீஸ் by Elaya.G

சில குழந்தைகள் அப்படி தான் வாந்தி எடுப்பார்கள்.மாதம் ஆக ஆக வாந்தி எடுப்பது குறைந்து விடும்.குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அளவாக கொடுக்க சொல்லுங்க.சில சமயம் தாய்க்கு அதிகமாக பால் சுரக்கும்.குழந்தைக்கு அந்த அளவு குடிக்க முடியாது.பால் கொடுத்து முடித்ததும்,முதுகில் லேசாக தட்டி கொடுத்து,குழந்தை ஏப்பம் விட்ட பின் படுக்க வைக்க சொல்லுங்க.உணவுக்குழாயில் பிரச்சனை- குழந்தை வளர வளர சரியாகிவிடும்.

//இது பெரியா ப்ராப்ளமா?// மருத்துவர் என்ன சொல்கிறார்! அவர் அபிப்பிராயம்தான் சிறந்தது. பிரச்சினை இராது என்றே நம்புகிறேன்.

//இன்னும் பால் கக்குறான் டயர்ட் ஆகி இருக்கான்// டீஹைட்ரேட்டட் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். சத்தும் போதுமான அளவு கிடைக்காது இல்லையா! பாவம்.

என் சின்னவருக்கு இப்படி 10 மாதம்வரை இருந்தது. (காரணம் வேறு.) குடிப்பதில் பாதிக்கு மேல் வெளியே வந்துவிடும். அதற்காக பாலூட்டுவதை நிறுத்தி விடாமல் அடிக்கடி பாலூட்டச் சொன்னார்கள்.

‍- இமா க்றிஸ்

ஹர்ஷா அக்கா , இம்மா அக்கா உங்க பதிலுக்கு மிக்க நன்றி .
// பால் கொடுத்து முடித்ததும்,முதுகில் லேசாக தட்டி கொடுத்து,குழந்தை ஏப்பம் விட்ட பின் படுக்க வைக்க சொல்லுங்க// இப்படி தான் ஒவ்வொரு முறையும் செய்கிறார்கள் இருந்தும் வாந்தி எடுப்பது நின்ற பாடில்லை .
//மருத்துவர் என்ன சொல்கிறார் //எங்க ஊருல பார்க்க முடியாதுன்னு மதுரை கு எழுதி குடுத்து இருக்காங்க ரொம்ப கஷ்டமா இருக்கு பையன பார்க்கவே.ட்ரிப்ஸ் ஏறிட்டே தான் இருக்கு .
சீக்கிரம் சரி ஆகிடனுன்னு ப்ரே பண்ணிக்கங்க அக்கா
by Elaya.G

பயப்படாதீங்க... இதெல்லாம் இன்றைய மருத்துவத்தில் பெரிய விசயம் இல்லை. சரி பண்ணிடலாம். நிச்சயம் எங்க பிராத்தனைகள் உண்டு. கவலைபடாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பயப்படாதீங்க... இதெல்லாம் இன்றைய மருத்துவத்தில் பெரிய விசயம் இல்லை. சரி பண்ணிடலாம். நிச்சயம் எங்க பிராத்தனைகள் உண்டு//.மிக்க நன்றி வனிக்கா என் தோழியின் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யணுன்னு டாக்டர் சொல்லிடாங்க .அவனுக்காக உங்களோட பிரார்த்தனைகள் வேணும் .28 நாளான குழந்தைக்கு ஆபரேஷன் செய்தால் உடம்பு தாங்குமா ஓபன் சர்ஜெரி சொல்லி இருக்காங்க .ரொம்ப பயமா இருக்கு கா.
ப்ரே பண்ணிக்கங்க தோழீஸ் by Elaya.G

--

//ரொம்ப கஷ்டமா இருக்கு// //ரொம்ப பயமா இருக்கு// குழந்தையை இப்படிப் பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் நீங்க உங்க தோழி முன்னால் இப்படிப் பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அவங்களுக்கு தைரியம் கொடுக்கிற மாதிரி பேசுங்க. //ட்ரிப்ஸ் ஏறிட்டே தான் இருக்கு// அது நல்ல விஷயம்.
பயப்படாதீங்க. மருத்துவத்தில் இப்போ எல்லாமே சாத்தியம்தான். குழந்தை விரைவில் நலமாகும். நம்பிக்கையோடு இருங்க.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா அக்கா நல்லதே நடக்கும் நடக்கட்டும் நாளை காலை ஆபரேஷன் நு சொல்லி இருக்காங்க .அறுசுவை இல் உள்ள எல்லா தோழிகளின் பிரார்த்தனையும் என் தோழியின் பிஞ்சு மகனுக்கு வேண்டும் மிக்க நன்றி by Elaya.G

விரைவில் நலமடைய பிரார்தனைகள்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்