குழந்தையின் துடிப்பு

இப்போது எனக்கு 5 வது மாதம். (19 வாரம்). எப்போது குழந்தையின் துடிப்பு ஆரம்பிக்கும். ஸ்கேன் ரிப்போர்ட் ல breech presentation னு போட்டு இருக்கு. குழந்தை உக்கார்ந்த நிலையில இருக்குன்னு சொன்னாங்க. 7வது 8வது மாசம் குழந்தை திரும்பிக்கும்னு சொன்னாங்க. இப்போ ஒன்னும் ப்ராப்ளம் இல்லன்னு சொன்னாங்க. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. ப்ளீஸ் நான் எப்படி நடந்துக்கனும் என்ன செய்யனும்னு சொல்லுங்க.

பயப்பட வேண்டாம். எனக்கும் 5 வது மாதம் scan report-ல் breech position அப்படி தான் சொன்னார்கள். ஆனால் doctor 7,8 வது மாதத்தில் baby rotate ஆகிடும் நு சொன்னாங்க. அதே மாறி 8 வது மாத scan- ல் baby correct position கு வந்து விட்டது. எனக்கு normal delivery தான் ஆனது. so இதை நினைத்து பயப்பட வேணாம்.எப்பவும் போல சந்தோஷமாக இருங்கள். சில பேருக்கு 6 வது மாதத்தில் தான் movements தெரிய ஆரம்பிக்கும்.

மேலும் சில பதிவுகள்