தேதி: April 5, 2012
சார்ட் பேப்பர்
க்ரயான்ஸ்
ஸ்கெட்ச் பென்/மார்க்கர்
பெவிக்கால்
கத்தரிக்கோல்
போம் டேப்
முழு சார்ட் பேப்பரை நான்காக மடித்து இரு பகுதி எடுத்துக் கொள்ளவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

சார்ட் பேப்பரின் ஒரு பகுதியை எடுத்து முக்கால் பாகம் அளவுக்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அந்த அட்டையில் பூச்சாடி வடிவில் வரைந்து அதனை நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

மீதியுள்ள கால் பாகம் பேப்பரில் பூ, இலையுடன் கூடிய பூ, வெறும் இலை என்று வரையவும். பின்னர் பச்சைநிற மார்க்கர் இலைகளுக்கும், சிவப்புநிற மார்க்கர் பூக்களுக்கும் பயன்படுத்தி அவுட்லைன் வரைந்துக் கொள்ளவும்.

கத்தரிக்கோலால் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெட்டி வைக்கவும்.

பூக்களுக்கு சிவப்புநிற க்ரயான்ஸூம், இலைகளுக்கு பச்சைநிற க்ரயான்ஸூம் கொண்டு சீராக வண்ணம் தீட்டி முடிக்கவும்.

படத்தில் உள்ளது போல் தேவையான அளவு பூக்களும், இலைகளும் வண்ணம் தீட்டி எடுத்து வைக்கவும்.

பூச்சாடிக்கு ஸ்கெட்சால் கட்டங்கள் வரைந்த பின்னர் விரும்பிய க்ரயான்ஸ் நிறத்தால் வண்ணம் கொடுத்து முடிக்கவும்.

இப்போது சார்ட்டின் மற்றொரு பகுதியை எடுத்து, பூச்சாடியின் பின் பக்கத்தில் பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.

பூச்சாடியின் மேல் செய்து வைத்துள்ள பூக்களை படத்தில் உள்ளது போல் க்ளூ தடவி ஒட்டி விடவும்.

பூக்களையும், இலைகளையும் ஒட்டி முடித்ததும் சார்ட் அட்டையின் தேவையற்ற ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.

போம் டேப்பை சிறிதளவு நறுக்கி இந்த அட்டையின் பின்பக்கத்தில் வலது, இடது ஓரங்களில் ஒட்டி விடவும்.

சாட் பேப்பரில் செய்த ப்ளவர் வால்ஹேங்கிங் ரெடி. விரும்பினால் பூ, தொட்டி ஒட்டுவதற்கு முன்னால் சார்ட் பேப்பர் முன்பக்கம் முழுவதும் கருப்புநிற பெயிண்ட் அடித்துக் கொள்ளலாம்.

Comments
டீம்
அழகோ அழகு!!! கலர்... சான்சே இல்லை. உங்களால் மட்டுமே முடியும் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பேப்பர் வால்ஹேங்கிங்
அன்பு அறுசுவை டீம்,
3டி எஃபக்ட்ல இருக்கு! சூப்பர்!!
பாராட்டுக்கள்!!
அன்புடன்
சீதாலஷ்மி
டீம்
விடுமுறைக் காலம், பொருத்தமா குழந்தைகளுக்கான க்ராஃப்ட் போட்டு இருக்கீங்க. அழகா இருக்கு.
- இமா க்றிஸ்
பேப்பர் வால்ஹேங்கிங்
என் மகளுக்கு ஸ்ப்ரிங் ப்ரேக் வருது....அதில் இதை செய்ய வைக்கிறேன். இலைகள், பூக்கள் எல்லாம் கச்சிதமாக இருக்கு. வாழ்த்துக்கள் டீம்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!