வால் ஹேங்கிங்

தேதி: April 9, 2012

5
Average: 4.2 (11 votes)

 

தடிமனான அட்டை (அ) பத்திரிக்கை
பிஸ்தா ஓடுகள்
பிரவுன் நிற பாசிமணிகள்
விருப்பமான வண்ணங்கள்
பிரஷ்
3D அவுட்லைனர்
வெள்ளை பசை

 

தடிமனான பத்திரிக்கை அட்டையின் பின்புறம் ப்ளையினாக உள்ளதை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
இந்த அட்டையின் நான்கு ஓரங்களிலும் விருப்பமான வண்ணங்கள் கொண்டு பார்டர் வரைந்துக் கொள்ளவும்.
பெயிண்ட் காய்ந்து முடிந்ததும் அட்டையின் நடுவில் பூ ஜாடி வரைந்து, ப்ரவுன்நிற பாசிமணிகள் கொண்டு ஜாடியின் வடிவத்தில் ஒட்டவும்.
ஜாடியின் மேல் பிஸ்தா ஓடுகள் கொண்டு இலைகள் போல் ஒட்டி வண்ணம் தீட்டவும்.
அதன் இடையில் தேவையான எண்ணிக்கையில் பூக்கள் ஒட்டி முடிக்கவும்.
பூக்களுக்கும் விருப்பமான வண்ணங்கள் கொடுத்து காயவிடவும்.
பார்டர் டிசைன் உள்பக்க ஓரத்தில் 3D அவுட்லைனர் கொண்டு அலங்கரிக்கவும்.
பிஸ்தா ஓடுகளில் செய்த அழகிய வால்ஹேங்கிங் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப ரொம்ப அழகா இருக்குங்க. கலர்ஸ் இன்னும் நல்லா இருக்கு. இது போல் ஒட்டும் போது வண்ணம் தீட்டி விட்டு காய்ந்த பின் ஒட்டுங்கள், இன்னும் நல்லா இருக்கும். யோசனை தான்... தப்பா நினைக்க வேண்டாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகாக இருக்கிறது பிரியா.

‍- இமா க்றிஸ்

நல்ல முயற்சி.பிடிச்சிருக்கு!வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அட்மின் குழுவினருக்கு நன்றி .......
வனிக்கா.... ரொம்ப நன்றி...... என்னுடைய மெகந்தி குறிப்பில் உங்க படிவு இல்லைனு வருத்தமா இருந்தது...... இப்ப OK.. நானும் கலர் செஞ்சுட்டு தான் ஒட்டணும்னு நினைச்சேன்.. ஆனா பையன் எழுந்திருவானு அவசரமா ஒட்டிட்டேன்.......... நீங்க இப்படி சொன்னது தான் உண்மையான பின்னூட்டம்.... தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன்....

மிக்க நன்றி இமா மேடம்........
லாவண்யா மிக்க நன்றி....